Untitled Document
May 24, 2025 [GMT]
எழுவைதீவில் 323 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
[Wednesday 2025-05-07 17:00]


இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவரை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.
எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவரை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

  

அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



இலங்கையில் நிகழ்ந்த சம்பவங்களை காசா நினைவுபடுத்துகின்றது!
[Saturday 2025-05-24 06:00]

காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை உட்பட பல நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான செயலாளர் நாயகம் டொம் பிளெச்சர் இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



மக்களின் காணிகளை கைப்பற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை!
[Saturday 2025-05-24 06:00]

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



இனப்படுகொலைக்கு ஏன் நீதியை நிலைநாட்டவில்லை!
[Saturday 2025-05-24 06:00]

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீள பெற வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.



பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!
[Saturday 2025-05-24 06:00]

சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா இன்றுஅதிகாலை காலமானார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மாலனி பொன்சேகா மரணமடையும் போது அவருக்கு 76 வயதாகும்.



எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்!- கனடியப் பிரதமரிடம் ரவிகரன் வேண்டுகோள்.
[Saturday 2025-05-24 06:00]

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை விவகாரத்தில், தமிழர் தரப்பிற்கு கனடா ஆதரவுதெரிவித்துள்ள நிலையில், கனடாவின் ஆதரவுக்கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.



பிமல் ரத்நாயக்கவின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முறைப்பாடு!
[Saturday 2025-05-24 06:00]

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் கடந்த கால சபை முதல்வர்களின் நன்நடத்தைக்கு முற்றிலும் விரோதமானது என்று குறிப்பிட்டு 2025.05.20 ஆம் திகதியன்று சபை முதல்வர் நடந்துக் கொண்ட விதம் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.



பூவரசம் தடி வெட்டியவர் மின்சாரம் தாக்கி மரணம்!
[Saturday 2025-05-24 06:00]

பயிற்றங் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த இராசமணி ஸ்ரீகாந்தன் (வயது 48) என்ற மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.



அம்பிட்டிய சுமன ரதன தேரருக்குப் பிணை!
[Saturday 2025-05-24 06:00]

மட்டக்களப்பு - மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடிய சுமன ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அம்பாறை - பண்டாரதூவ பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பாக நேற்றுக் காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.



நுவரெலியவில் பேருந்து விபத்து 20 பேர் காயம்!
[Saturday 2025-05-24 06:00]

நுவரெலியவில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



போதைப்பொருள் வலையமைப்பின் 1.8 கோடி ரூபா பணம் சிக்கியது!
[Saturday 2025-05-24 06:00]

டுபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.



தங்க முலாம் பூசிய துப்பாக்கி விவகாரத்தில் துமிந்த திஸாநாயக்க கைது!
[Friday 2025-05-23 17:00]

வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அடுத்தமாதம் இலங்கைக்குப் பயணம்!
[Friday 2025-05-23 17:00]

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் ஜூன்24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



அம்பிட்டிய சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது!
[Friday 2025-05-23 17:00]

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



தயாசிறி தொடர்பான முறைப்பாட்டை ஆராய மூவர் குழு!
[Friday 2025-05-23 17:00]

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க, சபாநாயகர் விக்ரமரத்னவினால் மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.



அமைச்சர்கள் சமரசிங்க, ஹந்துனெத்தி பதவி விலக வேண்டும்!
[Friday 2025-05-23 17:00]

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும். பொறுப்புக்களை புறக்கோட்டை வர்த்தகர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.



அடுத்த மாதம் ஜெர்மன் செல்கிறார் அனுர!
[Friday 2025-05-23 17:00]

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் ஜேர்மன் நாட்டுக்கே உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.



வடக்கு மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொள்ளாமல் செயற்படுகிறார் ஜனாதிபதி!
[Friday 2025-05-23 17:00]

வடக்கு, தெற்கு மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொள்ளாமல் ஜனாதிபதி செயற்படுகிறார். யுத்த வெற்றியின் போது ஜனாதிபதி செயற்பட்ட விதம் பல விடயங்களை உணர்த்தியுள்ளதென சர்வஜன சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.



விரைவில் அமைச்சரவை மாற்றம்!
[Friday 2025-05-23 17:00]

அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



புதுக்குடியிருப்பில் புதரில் கிடந்த இளைஞனின் சடலம்!
[Friday 2025-05-23 17:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர், வியாழக்கிழமை (22) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அவரது சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.



உப்பு இறக்குமதிக்கு சுகாதார அமைச்சு தடைவிதித்ததா?
[Friday 2025-05-23 17:00]

சுகாதார அமைச்சகத்திலிருந்தோ அல்லது அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களிடமிருந்தோ உப்பு இறக்குமதி செய்வதற்கு எந்த வித தடையையும் விதிக்கவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடயத்தை தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா