Untitled Document
May 8, 2025 [GMT]
நிரந்தர அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணை தந்திருக்கிறார்கள்!
[Wednesday 2025-05-07 17:00]

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

  

மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியானது வடக்கு, கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

நாடு யாரிடமாவது இருக்கட்டும், தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைய வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள். இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்துக்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழ் அரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் நாங்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம். அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது. அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களை பெற்றிருக்கின்றோம்.

இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதற்கட்டமாக பட்டியல் ஆசனங்கள், சபை அமைத்தல், யாருடன் இணைவது என்பது பற்றி கலந்துரையாடவுள்ளோம்.

நாளைய தினம் நாங்கள் போட்டியிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து, அந்தந்த சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும் தவிசாளர், பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும் யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாடவுள்ளோம்.

எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்கவிருக்கிறோம் என்றார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறுகையில்,

உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதித்துவ முறை என்பது சற்று சிக்கலான முறை என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியான சிக்கலான ஒரு முறை காணப்பட்டபோதிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற அனைத்து சபைகளிலும் நாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறோம்.

வாக்குத்தொகை அடிப்படையில் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம். சபைகளின் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதன் அடிப்படையிலும் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம். பிரதிநிதித்துவ முறையில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் காரணமாக நாங்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தாலும் தொங்கு நிலையான ஆசனங்கள் எனப் பலவாறான ஆசனங்கள் காணப்படுகின்றபடியால் அவற்றையெல்லாம் கடந்து ஒன்பது உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய அளவுக்கு எமது கட்சி உரிய ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் சபைகளை அமைத்து சுமுகமான முறையில் அவற்றை கொண்டுசெல்லக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துவோம்.

சில கட்சிகள் கூட்டணியாகச் சேர்ந்து கடுமையான பிரயத்தனங்கள் செய்தும் கூட அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை. தமிழர் தாயகம் தமிழ் அரசுக் கட்சியின் பக்கம் இருக்கிறது என்பதை இவ்விடத்தில் கூற முடியும். எதிர்காலத்தில் நாங்கள் சிறப்பான செயற்பாடுகளையும் முன்கொண்டு செல்வோம்.

தேசிய மக்கள் சக்தியானது தாங்கள் நடுநிலை வகிப்பதாக கூறியிருப்பதாக அறிய முடிகிறது. நாங்கள் தமிழ்த் தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களாக இருக்கின்றபடியால் தமிழ்த் தேசிய எண்ணத்தோடு இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். மற்றையவர்கள் சிநேகபூர்வமாக எங்களுக்கு ஆதரவு தருவதற்கு முன்வருகின்றபோது பரஸ்பரம் நாங்கள் ஆதரவுகளை வழங்கி சபைகளை அமைக்கவேண்டிய தேவை இருக்கிறது.

நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம். ஏனென்றால், மட்டக்களப்பு பல்லினமும் வாழும் ஒரு பிரதேசமாக இருப்பதால் பரஸ்பரம் புரிந்துணர்வு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு என்பது தவிர்க்க முடியாத விடயமாக உள்ளது. அதனால், அவற்றை கையாளவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுகிறது ஐதேக!
[Thursday 2025-05-08 05:00]

அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. சரியென்றால் இப்போதாவது அரசாங்கம் பதவி விலக வேண்டும். எனவே இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.



தமிழ் கட்சிகளுடன் இணைந்து தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும்!
[Thursday 2025-05-08 05:00]

தமிழ் கட்சிகளுடனும் இணைந்து ஏனைய உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.



25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும்!
[Thursday 2025-05-08 05:00]

ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றமும் இளம் பெண்கள் உள்ளடங்கலாக 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதிலிருந்து தவறும் அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என 34 பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.



170 சபைகளில் என்பிபி ஆட்சியமைக்க முடியாது!
[Thursday 2025-05-08 05:00]

அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.



பேச்சைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும்!
[Thursday 2025-05-08 05:00]

தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.



மிகை மதிப்பீட்டின் முடிவு!
[Thursday 2025-05-08 05:00]

2025 உள்ளாட்சித் தேர்தலின் முடிவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னைத் தானே மிகைப்படுத்திக் கொண்டிருந்தது என்பதை நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறுகிறார்.



இது வெறும் ஆரம்பம் தான் என்கிறார் நாமல்!
[Thursday 2025-05-08 05:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். “கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து, எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது.



புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி விவசாயி பலி!
[Thursday 2025-05-08 05:00]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



இந்தியா செல்கிறார் ரணில்!
[Thursday 2025-05-08 05:00]

கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார். இந்த விழாவில் ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரையாற்றுவார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



யானையின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறதாம்!
[Thursday 2025-05-08 05:00]

ஐக்கிய தேசியக் கட்சியால் (UNP) தனது வாக்குத் தளத்தை அதிகரிக்க முடிந்துள்ளதுடன், சில உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு தீர்க்கமான சக்தியாகவும் மாறியுள்ளது என்று கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். "எங்களால் ஒரு வாக்குத் தளத்தை அடைய முடிந்துள்ளதுடன், மேலும் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக உள்ளோம். சில உள்ளாட்சி அமைப்புகளிலும் நாங்கள் ஒரு தீர்க்கமான சக்தியாக மாறிவிட்டோம்," என்று அவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.



கூட்டமைப்பாக பெற்றதை விட பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்!
[Wednesday 2025-05-07 17:00]

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



257 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!
[Wednesday 2025-05-07 17:00]

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைவாக, 257 உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.



பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்!
[Wednesday 2025-05-07 17:00]

நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். இருப்பினும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் சுயாதீன குழுக்களின் ஆதரவை பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.



வடக்கு கட்சிகள் என்பிபியை ஆட்சியமைக்க அழைக்கின்றவாம்!
[Wednesday 2025-05-07 17:00]

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைக்க, தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் தமிழரசு 12, சைக்கிள் 3, சபைகளில் வெற்றி!
[Wednesday 2025-05-07 17:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.



எழுவைதீவில் 323 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
[Wednesday 2025-05-07 17:00]

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவரை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.



கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்போம்!
[Wednesday 2025-05-07 17:00]

கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும், அதே நேரத்தில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.



அமைச்சர் ஆனந்த விஜேபாலவை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு தள்ளுபடி!
[Wednesday 2025-05-07 17:00]

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



மீண்டும் கைது செய்யப்பட்டார் ரம்புக்வெல்ல!
[Wednesday 2025-05-07 17:00]

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



தமிழர் பகுதிகளில் தமிழ் தேசிய கட்சிகள் ஆதிக்கம்- பிற பகுதிகளில் என்பிபி வெற்றி!
[Wednesday 2025-05-07 06:00]

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று அதிகாலை 5 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. தமிழர் பகுதிகளில் தமிழரசு, தமிழ்,காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.


Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா