Untitled Document
May 24, 2025 [GMT]
அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
[Saturday 2025-05-10 04:00]


பயங்கரவாத தடைச்சட்டத்தை மிக மோசமான சட்டமாக இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போதும் அந்த சட்டத்தை அமுல்படுத்துகிறது. இது நியாயமற்றது. பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  அரசியல் கைதிகளை  விடுவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மிக மோசமான சட்டமாக இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போதும் அந்த சட்டத்தை அமுல்படுத்துகிறது. இது நியாயமற்றது. பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

  

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதான சட்டமாகவுள்ள அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களை அமுல்படுத்துமாறு சுமார் 38 ஆண்டுகாலமாக தேசிய மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தான் இந்த நாடுள்ளது.

இவ்வாறான பிரேரணைகளை கொண்டு வந்து அரசாங்கத்தின் படுமோசமான செயற்பாடுகளை தடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

ஆய்வு அறிக்கைகளின் பரிந்துரைகளை கடந்த அரசாங்கங்கள் செயற்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி, கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணை வழங்கினார்கள்.

கடந்த கால ஆய்வு அறிக்கைகளை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதாகவும், அதற்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை இயற்ற போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் இன்றும் நடைமுறையில் தான் உள்ளது. 12 அல்லது 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் சிறையில் உள்ளார்கள். இந்த சட்டத்தின் பிரகாரம் தவறாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை.

எஸ்.கிருபாகரன் எனும் அரசியல் கைதி தொடர்பில் இந்த பாராளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். அம்பாந்தோட்டை சிறைச்சாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒரு வழக்கில் நிராகரிக்கப்பட்டு, அந்த வாக்குமூலம் பலமான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் அந்த நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு எஸ்.கிருபாகரன் இன்றும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரது வழக்குகள் கொழும்பு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நியாயமற்ற வகையில் அம்பாந்தோட்டை பகுதிக்கு அவர் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். சிறையில் வாடுகிறார்.

அதேபோல் ஆனந்தவர்மன் என்றழைக்கப்படும் அரவிந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஜனாதிபதி அனுரவிடம் ஜேர்மனி கேள்வி எழுப்பும்!
[Saturday 2025-05-24 18:00]

ஜேர்மனிக்கான ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் விஜயத்தின் போது இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைள் குறித்தும், நல்லிணக்கம் மற்றும் யுத்தகாலஅநீதிகளிற்கு பொறுப்புக்கூறல் குறித்தும் அந்த நாடு கேள்வி எழுப்பும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



நீர்கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் நிகழ்வினை குழப்புவதற்கு முயற்சி!
[Saturday 2025-05-24 18:00]

நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை குழப்புவதற்கு சிலர் முயன்றனர். தேசிய மீனவர் ஒருமைப்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை குழப்புவதற்கு சிறிய குழுவினர் முயற்சி செய்தனர்.



துமிந்த திசாநாயக்க விளக்கமறியலில்!
[Saturday 2025-05-24 18:00]

தங்க T56 துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.



மட்டக்களப்பில் அதிபர், ஆசிரியருக்கு வாள்வெட்டு!
[Saturday 2025-05-24 18:00]

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வடக்கு, கிழக்கு காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை!
[Saturday 2025-05-24 18:00]

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



நல்லூர் ஆலய சூழலில் பன்னாட்டு நிறுவனம்- மாநகரசபை அதிகாரிகளுக்கு தொடர்பா?
[Saturday 2025-05-24 18:00]

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் வலிறுத்தப்பட்டுள்ளது.



மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்கு சுதந்திர சதுக்கத்தில்!
[Saturday 2025-05-24 18:00]

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெற உள்ளன.



புன்னைக்குடாவில் வாகனம் மோதி பாதசாரி பலி!
[Saturday 2025-05-24 18:00]

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.



போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!
[Saturday 2025-05-24 18:00]

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயது மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



மட்டக்களப்பில் இருந்து சென்ற பஸ் விபத்து - ஒருவர் பலி!
[Saturday 2025-05-24 18:00]

கொழும்பு - வெல்லவாய வீதியில் சனிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இலங்கையில் நிகழ்ந்த சம்பவங்களை காசா நினைவுபடுத்துகின்றது!
[Saturday 2025-05-24 06:00]

காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை உட்பட பல நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான செயலாளர் நாயகம் டொம் பிளெச்சர் இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



இனப்படுகொலைக்கு ஏன் நீதியை நிலைநாட்டவில்லை!
[Saturday 2025-05-24 06:00]

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீள பெற வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.



பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!
[Saturday 2025-05-24 06:00]

சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா இன்றுஅதிகாலை காலமானார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மாலனி பொன்சேகா மரணமடையும் போது அவருக்கு 76 வயதாகும்.



எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்!- கனடியப் பிரதமரிடம் ரவிகரன் வேண்டுகோள்.
[Saturday 2025-05-24 06:00]

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை விவகாரத்தில், தமிழர் தரப்பிற்கு கனடா ஆதரவுதெரிவித்துள்ள நிலையில், கனடாவின் ஆதரவுக்கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.



பிமல் ரத்நாயக்கவின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முறைப்பாடு!
[Saturday 2025-05-24 06:00]

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் கடந்த கால சபை முதல்வர்களின் நன்நடத்தைக்கு முற்றிலும் விரோதமானது என்று குறிப்பிட்டு 2025.05.20 ஆம் திகதியன்று சபை முதல்வர் நடந்துக் கொண்ட விதம் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.



பூவரசம் தடி வெட்டியவர் மின்சாரம் தாக்கி மரணம்!
[Saturday 2025-05-24 06:00]

பயிற்றங் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த இராசமணி ஸ்ரீகாந்தன் (வயது 48) என்ற மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.



அம்பிட்டிய சுமன ரதன தேரருக்குப் பிணை!
[Saturday 2025-05-24 06:00]

மட்டக்களப்பு - மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடிய சுமன ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அம்பாறை - பண்டாரதூவ பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பாக நேற்றுக் காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.



நுவரெலியவில் பேருந்து விபத்து 20 பேர் காயம்!
[Saturday 2025-05-24 06:00]

நுவரெலியவில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



போதைப்பொருள் வலையமைப்பின் 1.8 கோடி ரூபா பணம் சிக்கியது!
[Saturday 2025-05-24 06:00]

டுபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.



தங்க முலாம் பூசிய துப்பாக்கி விவகாரத்தில் துமிந்த திஸாநாயக்க கைது!
[Friday 2025-05-23 17:00]

வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா