Untitled Document
May 15, 2025 [GMT]
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் மாணவர்கள் அஞ்சலி! Top News
[Thursday 2025-05-15 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன் , அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன் , அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

  

  
   Bookmark and Share Seithy.com



என்பிபிக்கு எதிராக கூட்டாக ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகள் முடிவு!
[Thursday 2025-05-15 05:00]

தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று ஒரு உடன்பாட்டை எட்டினர்.



சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது தமிழ்த் தேசிய பேரவை! Top News
[Thursday 2025-05-15 05:00]

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், இவ்விடயங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்து, உரிய அழுத்தங்களை வழங்கி, தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



கனடியத் தூதுவரை அழைத்து கண்டித்ததை வரவேற்கிறார் நாமல்!
[Thursday 2025-05-15 05:00]

இலங்கையின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது கனடாவின் தவறான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் திறப்பதில் கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து தனது ஆட்சேபனையைத் தெரிவிக்க கனேடிய உயர் ஸ்தானிகரை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்த அரசாங்கத்தின் நடவடிக்கையை இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.



ஹரி ஆனந்தசங்கரிக்கு மனோ, சுமந்திரன் வாழ்த்து!
[Thursday 2025-05-15 05:00]

கனடாவின் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஹரி ஆனந்தசங்கரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



என்பிபி ஆணையை அபகரிக்க முயன்றால் கடும் நடவடிக்கை!
[Thursday 2025-05-15 05:00]

பாராளுமன்றத்தில் தனக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நினைவூட்டிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.



டெங்கு, சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு!
[Thursday 2025-05-15 05:00]

இந்த காலகட்டத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.



பௌசர் கவிழ்ந்து வழிந்தோழிய டீசல், பெற்றோல்!
[Thursday 2025-05-15 05:00]

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த எரிபொருள் பௌசர் ஒன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல சுற்று வீதியில் நேற்று மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பௌசரின் உள்ளே 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்துள்ளது.



சரணடைந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை!
[Thursday 2025-05-15 05:00]

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளை நடத்தும் பிரபல ஆசிரியரான 'டீச்சர் அம்மா' என்று அழைக்கப்படும், ஹயேஷிகா பெர்னாண்டோ, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இளைஞர் ஒருவரை தாக்கியதற்காக அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை தொடங்கினர். சம்பவத்திற்குப் பிறகு, ஹயேஷிகா பெர்னாண்டோ அப்பகுதியை விட்டு ஓடி தலைமறைவாகியிருந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரானார்.



150 சபைகளில் நாங்களே ஆட்சியமைப்போம்!
[Thursday 2025-05-15 05:00]

பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களில் நாமே வெற்றி பெற்றுள்ளோம். 19ஆம் திகதிக்கு முன்னர் 150 உள்ளுராட்சிமன்றங்களுக்கான பதவிகளுக்கு பெயர்களை அறிவிப்போம். அதற்கான உரிமை எமக்கு மாத்திரமே காணப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



கனேடிய தூதுவரை அழைத்துக் கண்டித்தார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!
[Wednesday 2025-05-14 16:00]

ஒன்டாறியோவின் பிரம்ப்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை கனடா அங்கீகரித்து திறப்பு விழா நடாத்தியதற்கு, உத்தியோகபூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்தார்.



செம்மணியில் நாளை அகழ்வுப் பணி!
[Wednesday 2025-05-14 16:00]

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன.



தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி ஆரம்பம்! Top News
[Wednesday 2025-05-14 16:00]

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் ஊர்தி பவனி ஆரம்பமானது.



4 உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் பதவிக்குப் போட்டி!
[Wednesday 2025-05-14 16:00]

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



வேகமாக பரவும் சின்னம்மை- மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லை!
[Wednesday 2025-05-14 16:00]

சிக்கன் பாக்ஸ் (சின்னம்மை) நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வரும் நிலையில், நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி தற்போது மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை என்று அறிய வருகிறது.



4 இளைஞர்கள் கடலில் மூழ்கி மரணம்!
[Wednesday 2025-05-14 16:00]

நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.



அர்ச்சுனாவை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு - ஜூன் 26இல் விசாரணை!
[Wednesday 2025-05-14 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது தாக்குதல்!
[Wednesday 2025-05-14 16:00]

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.



களுத்துறையில் கரையொதுங்கிய டொல்பின்கள்!
[Wednesday 2025-05-14 16:00]

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. கரையொதுங்கியுள்ள 6 டொல்பின்களும் ஏதேனும் விபத்திற்குள்ளாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், களுத்துறை கடற்கரை இந்த நாட்களில் கொந்தளிப்பாக காணப்படுவதாக உயிர்காப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



செம்மணி விபத்தில் இருவர் காயம்!
[Wednesday 2025-05-14 16:00]

யாழ். செம்மணி சந்தியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கனடாவின் புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரிக்கு பொது பாதுகாப்பு அமைச்சு! Top News
[Wednesday 2025-05-14 06:00]

கனடாவின் புதிய அமைச்சரவையில் பொதுபாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.கனடாவில் இடம்பெற்ற பொதுதேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் நேற்று இடம்பெற்றன.


Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா