Untitled Document
May 17, 2025 [GMT]
கிளிநொச்சியை சென்றடைந்த தமிழினப் படுகொலை ஊர்தி!
[Thursday 2025-05-15 18:00]


தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று  கிளிநொச்சியை சென்றடைந்தது. 
இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது. இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

  

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த ஊர்தி பவனி ஆரம்பமாகியுள்ளது.

இந்த பவனி வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பயணித்து, இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையும்.

"தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதிப் போரின் சாட்சியங்கள் என்பன வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



வர்த்தமானியை ரத்துச் செய்யாவிட்டால் உலகை உலுக்கும் போராட்டம்!
[Saturday 2025-05-17 06:00]

வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும் எனவும் தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



வரலாற்றைக் கேட்டறிந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!
[Saturday 2025-05-17 06:00]

தமிழினப்படுகொலை வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வூர்வமாக இடம்பெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுக் காலை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.



ஒன்ராறியோவின் 2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை: ஒன்ராறியோவைப் பாதுகாக்கும் திட்டம்
[Saturday 2025-05-17 06:00]

கடந்த வியாழக்கிழமை, 16.05.2025 அன்று, ஒன்ராறியோ அரசு ஒன்ராறியோவைப் பாதுகாக்கும் ஒரு திட்டமாகிய அதன் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க வரிகளிலிருந்தும், அண்மைய காலத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையிலிருந்தும் தொழிலாளர்கள், வணிகங்கள் மற்றும் சமுகங்களைப் பாதுகாக்கும் திட்டமும் அடங்கப்பெற்றுள்ளது. இத்திட்டம், எதிர்வரும் காலத்தில் போட்டித்தன்மை வாய்ந்ததும், அதிக மீள்தன்மை கொண்டதும், தற்சார்புப் பொருளாதாரத்துடனான மாநிலத்தை உருவாக்குவதன் மூலம் ஒன்ராறியோவைப் பாதுகாக்கும்.



உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தமிழ்க் கட்சிகள் ஆலோசனை!
[Saturday 2025-05-17 06:00]

வட, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.



திருகோணமலையில் உருக்குலைந்த நிலையில் சடலம்!
[Saturday 2025-05-17 06:00]

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.



முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு பிடியாணை!
[Saturday 2025-05-17 06:00]

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே மகிந்தானந்தவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.



இன்று சஜித்தை சந்திக்கிறார் நாமல்!
[Saturday 2025-05-17 06:00]

எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று,இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தாம் பங்கேற்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்!
[Saturday 2025-05-17 06:00]

கொழும்பு - கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இருவர் காயமடைந்துள்ளனர். வீட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆணும், பெண்ணும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மின்சார சபைக்கு முதல் காலாண்டில் 18.47 பில்லியன் ரூபா நட்டம்!
[Saturday 2025-05-17 06:00]

இலங்கை மின்சார சபை 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளதாக, சபை சமீபத்திய நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2024 மார்ச் காலாண்டில் 84.67 பில்லியன் ரூபா இலாபத்தை சபை பதிவு செய்திருந்த நிலையில், இதனுடன் ஒப்பிடுகையில், இது 121.8% இலாபக் குறைவாகும்.



கொட்டாஞ்சேனை சிறுமி மரணம்- கைவிரித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!
[Saturday 2025-05-17 06:00]

கொழும்பு - கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.



கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்!
[Friday 2025-05-16 16:00]

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வுக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவு!
[Friday 2025-05-16 16:00]

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வினை ஆதரித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே கருத்து வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-



சாமர சம்பத்தின் பிணையை ரத்துச் செய்ய நீதிமன்றம் மறுப்பு!
[Friday 2025-05-16 16:00]

ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்து செய்யுமாறு இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று நிராகரித்துள்ளார். இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக இல்லாமையால் சாமர சம்பத்தின் பிணையை இரத்து செய்யுமாறு முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஆனையிறவு உப்பளத்தில் போராட்டம் நடத்த தடை!
[Friday 2025-05-16 16:00]

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டுசென்று பொதி செய்யும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் நடத்தப்படும் பகுதியில் இன்று காலை பொலிஸார் குவிக்கப்பட்டனர்.



அதிரடிப்படை வாகனம் மோதி இளைஞன் பலி!
[Friday 2025-05-16 16:00]

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் 32 வயதுடைய கண்ணதாசன் திவியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.



வவுனியாவை சென்றடைந்த தமிழின படுகொலை நினைவேந்தல் ஊர்தி!
[Friday 2025-05-16 16:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று(16) காலை வவுனியாவை வந்தடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம்திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை வந்தடைந்தது.



ஹெரோயின் வைத்திருந்த 3 பேருக்கு மரணதண்டனை!
[Friday 2025-05-16 16:00]

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு 176 கிலோகிராமுக்கு அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.



வெருகலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
[Friday 2025-05-16 16:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் இன்று (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.



ஆட்சியமைக்க சஜித்துடன் பேச இணக்கம்!
[Friday 2025-05-16 16:00]

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர்.



இந்தியாவில் இருந்து திரும்பிய 6 பேர் கைது!
[Friday 2025-05-16 16:00]

இந்தியாவில் இருந்து படகு வழியாக யாழ்ப்பாணம் வந்த நால்வர் உட்பட 6 பேர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா