Untitled Document
May 17, 2025 [GMT]
ஒட்டாவா,வோட்டலூ பிரதேசங்களும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கு அங்கீகாரம்! Top News
[Friday 2025-05-16 06:00]


2021ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க , தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை - சட்டமூலம் 104 நிறைவேற்றப்பட்டதிலிருந்து, மே 12 முதல் மே 18 ஒன்ராறியோவின் கல்விச்சபைகளெங்கும் அதன்மட்டிலான ஈடுபாடும் அதற்கான அங்கீகாரமும் அதிகரிந்து வருகின்றன. சட்டமூலம் 104 ஆனது, இப்போது இன அழிப்பை நினைவுகூருதல் மற்றும் அதுதொடர்பான கற்பித்தல் மட்டில் மாநில அளவில் உறுதியான நிலையை எட்டியுள்ளது.

2021ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க , தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை - சட்டமூலம் 104 நிறைவேற்றப்பட்டதிலிருந்து, மே 12 முதல் மே 18 ஒன்ராறியோவின் கல்விச்சபைகளெங்கும் அதன்மட்டிலான ஈடுபாடும் அதற்கான அங்கீகாரமும் அதிகரிந்து வருகின்றன. சட்டமூலம் 104 ஆனது, இப்போது இன அழிப்பை நினைவுகூருதல் மற்றும் அதுதொடர்பான கற்பித்தல் மட்டில் மாநில அளவில் உறுதியான நிலையை எட்டியுள்ளது.

  

தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், இன அழிப்பிலிருந்து உயிர் தப்பியவர்கள் தம் தலைமுறைகளினூடே அனுபவித்துவரும் துயர்களைப் பகர்ந்துகொள்ளவும், சிறிலங்கா அரசினால் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் தமிழின அழிப்புப் பற்றிய அறிவூட்டலை மேற்கொள்ளவும் இவ்வாரம் வழிவகுக்கும்.

இந்த ஆண்டு, ஒட்டாவா கத்தோலிக்க கல்விச் சபை (OSCB) தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது கனடாவின் தலைநகரான ஒட்டாவாப் பகுதியில் தமிழின அழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய விரிவாக்கமாகும்.

மேலும், இவ்வாண்டு, ஒன்ராறியோவின் மிகப் பெரிய காவற்றுறைச் சேவைகளில் ஒன்றான வோட்டலூ பிராந்திய காவற்றுறையும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

"தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை ஒன்ராறியோ முழுவதுமுள்ள கல்விச் சபைகளில் அதற்கான அங்கீகாரத்தையும் அனுசரணையையும் பெற்றுவருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்" என்று ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும் ஸ்காபரோ - றூஜ் பார்க்கின் மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்தார். "கல்வி என்பது கடந்த கால நினைவுகளைப் பாதுகாக்கவும், அவற்றிலிருந்து நிவராணம் பெறும் செயற்பாட்டைத் தொடங்குவதற்கும் நம்மிடமுள்ள மிக சக்திவாய்ந்த ஒரு கருவியாகும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரொறன்ரோ வலய கல்விச் சபை (TDSB) தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ரொறன்ரோ கல்விச் சபையானது கனடாவின் மிகப்பெரிய கல்விச் சபையாகும். இது ஏறத்தாழ 250,000 மாணவர்களையும், 600 பள்ளிகளையும் தன்னகத்தே கொண்ட வட அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய கல்விச் சபைகளில் ஒன்றாக விளங்குகிறது. இதேபோல், ரொறன்ரோ வலய கத்தோலிக்க கல்விச் சபையும் (TCDSB) தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையைத் தொடர்ந்தும் அங்கீகரித்து வருகிறது. இக்கல்விச் சபையும் ஏறத்தாழ 85,000 மாணவர்களையும் 200 பள்ளிகளையும் கொண்டதாக இயங்குகிறது.

இதேபோல், யோர்க் பிராந்திய கல்விச் சபை (YRDSB), பீல் பிராந்திய கல்விச் சபை (PDSB) மற்றும் டூரம் வலய கல்விச் சபை (DDSB) உட்பட்ட ஒன்ராறியோவிலுள்ள பிற முக்கிய கல்விச் சபைகளும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையைக் கடைப்பிடிப்பதில் பங்குவகிக்கின்றன.

தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையை மேலும் பல கல்விச் சபைகள் அங்கீகரித்து அதனனை நடைமுறைப்படுத்துவதால், தமிழின அழிப்புத் தொடர்பான கற்பித்தலில் ஒன்ராறியோ முன்னணி வகிக்கிறது. சட்டமூலம் 104, தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அதுதொடர்பான பட்டறைகளில் பங்குபற்றவும், கருத்தரங்குகளை நடத்தவும், தமிழின அழிப்பின் மூலங்களையும், தொடர்ந்தும் நடைபெறும் தமிழின அழிப்புப் பற்றி அறிந்துகொள்ளவும் வழிவகுக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்!
[Friday 2025-05-16 16:00]

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வுக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவு!
[Friday 2025-05-16 16:00]

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வினை ஆதரித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே கருத்து வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-



சாமர சம்பத்தின் பிணையை ரத்துச் செய்ய நீதிமன்றம் மறுப்பு!
[Friday 2025-05-16 16:00]

ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்து செய்யுமாறு இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று நிராகரித்துள்ளார். இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக இல்லாமையால் சாமர சம்பத்தின் பிணையை இரத்து செய்யுமாறு முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஆனையிறவு உப்பளத்தில் போராட்டம் நடத்த தடை!
[Friday 2025-05-16 16:00]

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டுசென்று பொதி செய்யும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் நடத்தப்படும் பகுதியில் இன்று காலை பொலிஸார் குவிக்கப்பட்டனர்.



அதிரடிப்படை வாகனம் மோதி இளைஞன் பலி!
[Friday 2025-05-16 16:00]

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் 32 வயதுடைய கண்ணதாசன் திவியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.



வவுனியாவை சென்றடைந்த தமிழின படுகொலை நினைவேந்தல் ஊர்தி!
[Friday 2025-05-16 16:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று(16) காலை வவுனியாவை வந்தடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம்திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை வந்தடைந்தது.



ஹெரோயின் வைத்திருந்த 3 பேருக்கு மரணதண்டனை!
[Friday 2025-05-16 16:00]

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு 176 கிலோகிராமுக்கு அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.



வெருகலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
[Friday 2025-05-16 16:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் இன்று (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.



ஆட்சியமைக்க சஜித்துடன் பேச இணக்கம்!
[Friday 2025-05-16 16:00]

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர்.



இந்தியாவில் இருந்து திரும்பிய 6 பேர் கைது!
[Friday 2025-05-16 16:00]

இந்தியாவில் இருந்து படகு வழியாக யாழ்ப்பாணம் வந்த நால்வர் உட்பட 6 பேர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



நாமல் ராஜபக்ஸவுக்கு பிரம்டன் முதல்வர் சுடச்சுட பதில்!
[Friday 2025-05-16 06:00]

கனடாவில் உருவாக் கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.



கனடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறிதரன் வாழ்த்து!
[Friday 2025-05-16 06:00]

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் ஜனநாயக விரோதம்!
[Friday 2025-05-16 06:00]

தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. சட்டத்தை மாற்றியேனும் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைப்பதை தடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை முற்றிலும் ஜனநாயக விரோதமான கருத்தாகும். அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி மாத்திரமே. மாறாக சட்டத்துக்கு மேலானவர் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.



குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல்!
[Friday 2025-05-16 06:00]

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. மாவிலி துறையில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவேந்தல் நினைவு தூவியில் குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் விஸ்வலிங்கம் ருத்திரன் தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்றது. நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் அக வணக்கம் செலுத்தப்பட்டது



உப்பு இறக்குமதிக்கு அனுமதி!
[Friday 2025-05-16 06:00]

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இதை தெரிவித்துள்ளது. இதனூடாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பு மற்றும் நுகர்வோருக்கு தேவையான அயடின் கலந்த உப்பு இறக்குமதிக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூறும் 'நினைவாயுதம்' கண்காட்சி! Top News
[Friday 2025-05-16 06:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூறும் 'நினைவாயுதம்' கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.



உள்ளூராட்சிகளிலும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க விசாரணைப் பிரிவு!
[Friday 2025-05-16 06:00]

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.



உள்ளூராட்சிகளில் என்பிபிக்கு ஆதரவு இல்லை!- கைவிரித்தார் வீரவன்ச.
[Friday 2025-05-16 06:00]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஆளும் அரசாங்கத்துக்கும் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.



பிள்ளையான் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்!
[Friday 2025-05-16 06:00]

முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.



கிளிநொச்சியை சென்றடைந்த தமிழினப் படுகொலை ஊர்தி!
[Thursday 2025-05-15 18:00]

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது. இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா