Untitled Document
May 29, 2025 [GMT]
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் சுமந்திரன்!
[Tuesday 2025-05-27 18:00]


வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை  மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும் அமைச்சரவைக்கும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான  எம் ஏ சுமந்திரன் நன்றியை தெரிவித்துள்ளார்.

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும் அமைச்சரவைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான எம் ஏ சுமந்திரன் நன்றியை தெரிவித்துள்ளார்.

  

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ்பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன் இத் தீர்மானம் எடுக்கப்படுள்ளது. இது உடனடியாக இன்றிரவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதிக்கு இன்று இலங்கை தமிழரசுக்கட்சி எழுதிய கடிதமொன்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மேற்படி வர்த்தமானி அறிவிப்பில் அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான நிலங்கள் அமைந்துள்ள வடமராட்சி கிழக்கு முல்லைத்தீவில் மூன்று சட்ட ஆலோசனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

முன்னர் அனுப்பிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டதற்கு மேலதிகமாக சுனாமிக்கு பின்னர் அரசாங்க பொறிமுறைகள் மூலம் பணம் கொடுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் ஊடாக பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அவற்றிற்கான உறுதிகள் எவையும் பலருக்கு வழங்கப்படவில்லை.

அவர்கள் இந்த காணிகளில் வீடுகளில் 10 வருடங்களிற்கு மேல் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த தருணத்தில் இந்த சட்டத்தை பிரயோகிப்பது இன்னமும் குழப்பகரமான நிலையை உருவாக்கும்.

இந்த பகுதிகளில் காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் விதிகளை குறிப்பாக இந்த காலகட்டத்தில் பயன்படுத்துவதுமிகவும் பொருத்தமற்றது என்பதை நாங்கள் மீள வலியுறுத்துகின்றோம்.

இந்த திட்டத்தை முன்னெடுத்துச்செல்வது தாங்கள் எந்த தவறும் இழைக்காத நிலையிலும் தங்கள் நிலங்களிற்கு முழுமையாக உரிமை கோரும் நிலையிலும் இல்லாத பலருக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தும்.

இந்த செயற்பாடு தமிழ் மக்களிடையே பாரிய சமூக அமைதியின்மையை உருவாக்கும் என்பதுடன் போருக்கு பின்னரான சூழலில் நல்லிணக்கத்தை பாதிப்பதாக அமையும்.

அத்தோடு ஏராளாமான தனியார் நிலங்கள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பதுடன் தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் விடுவிப்பதாக கூறியும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

எனவே மேலும் தாமதிக்காமல்மேற்படி வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு மீண்டும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். இல்லையெனில் இது எமது மக்களை வெகுஜன பகிஷ்கரிப்புகளிலும் சட்டமறுப்பு போராட்டங்களிலும் நாம் வழிநடத்த வேண்டிய நிலையேற்படும்.

நல்லிணக்கம் சம்பந்தமாக உங்கள் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவில் இருத்திஇவ்வர்த்தமானி பிரகடனத்தை உடனடியாக மீள கைவாங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



திருகோணமலை மாநகர மேயர் பதவிக்கு செல்வராஜா பெயர் பரிந்துரை!
[Wednesday 2025-05-28 16:00]

திருகோணமலை மாநகர சபையின் மேயர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரை கட்சி முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.



உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலை- மக்களைக் குழப்பும் செயற்பாடுகளை கைவிட வேண்டும்!
[Wednesday 2025-05-28 16:00]

உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை அமைத்து சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும். அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாது விட்டால் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை தமிழ்அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.



யாழ். போதனா வைத்தியசாலைக்கு 268 தாதிகள் நியமனம்!- 208 பேர் சிங்களவர்.
[Wednesday 2025-05-28 16:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



மீண்டும் மருத்துவமனைகளில் பிசிஆர் சோதனை!
[Wednesday 2025-05-28 16:00]

புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் சில மருத்துவமனைகளில் PCR பரிசோதனையை அதிகரித்துள்ளது. மேலும், PCR பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள், தற்போது கொவிட் -19 நோயாளிகளைக் கண்டறிய அதிக எச்சரிக்கையுடன் உள்ளதாக புதன்கிழமை (28) அன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.



குச்சவெளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதில் இழுபறி!- தமிழரசு உறுப்பினர்கள் முரண்டு.
[Wednesday 2025-05-28 16:00]

முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து குச்சவெளி பிரதேச சபையை ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் குச்சவெளி பிரதேச சபையை இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பதில் பாரிய இழுபறி நிலை தோன்றியுள்ளது.



கைப்பற்றப்பட்ட படகுகளில் 500 கிலோ ஹெரோயின், ஐஸ்!
[Wednesday 2025-05-28 16:00]

இலங்கை கடற்படையினரால் தெற்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் சுமார் 500 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.



சீன வர்த்தக அமைச்சர் கொழும்பு வந்தார்!
[Wednesday 2025-05-28 16:00]

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்று (28) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.



விபத்தில் மரணமான இந்திய தூதரக அலுவலருக்கு சந்தோஷ் ஜா அஞ்சலி!
[Wednesday 2025-05-28 16:00]

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் பூதவுடல் இன்றைய தினம் காலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.



காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருக்கோவிலில் போராட்டம்!
[Wednesday 2025-05-28 16:00]

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.



பாதாள உலகுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பட்டியல் கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும்!
[Wednesday 2025-05-28 16:00]

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல்கள் எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.



காணி சுவீகரிப்பு வர்த்தமானி மீளப் பெறப்பட்டது வடக்கு மக்களுக்கு கிடைத்த வெற்றி!
[Wednesday 2025-05-28 07:00]

காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார் .



வடக்கில் காணிகளை விடுவிக்க தெற்கில் இருந்து எதிர்ப்பு வருகிறது!
[Wednesday 2025-05-28 07:00]

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு சுட்டிக்காட்டினார்.



கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை கௌரவித்தல்: உண்மை மற்றும் நீதிக்கான ஒரு மைல்கல்
[Wednesday 2025-05-28 07:00]

கண்ணியத்துடனும் நோக்கத்துடனும் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வான ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தின் சக்திவாய்ந்த திறப்பு விழாவை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கௌரவிப்பதில் ஒன்றுபட்டுள்ளனர்.



ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடரும் இன, மத ஆக்கிரமிப்புகள்! - அவுஸ்ரேலிய தூதுவரிடம் சிறிதரன்.
[Wednesday 2025-05-28 07:00]

ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



கொரோனா வைரஸ்- விமான நிலையங்களில் கண்காணிப்பு!
[Wednesday 2025-05-28 07:00]

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.



சஜித்தை சந்தித்தார் நியூசிலாந்து பிரதி பிரதமர்!
[Wednesday 2025-05-28 07:00]

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (27) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.



அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கரங்களில் இரத்தக்கறை- உடன் கைது செய்ய வேண்டும்!
[Wednesday 2025-05-28 07:00]

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் இதுவரையில் 30 இற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இந்த இரத்தக்கறை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கரங்களில் படிந்துள்ளது. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சவால் விடுத்தார்.



பெருமளவு போதைப்பொருள்களுடன் இரண்டு படகுகள் சிக்கின!
[Wednesday 2025-05-28 07:00]

தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கடற்படை கைப்பற்றியுள்ளதாக கூறுகிறது. இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றப்பட்டன



கோட்டா ஆட்சியில் சீனி மோசடி- அனுர ஆட்சியில் உப்பு மோசடி!
[Wednesday 2025-05-28 07:00]

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி இடம்பெறுகிறது. 24 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபா வரி அறவிடப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வட் வரியை நீக்குவதாகக் கூறிய அரசாங்கமே தற்போது இவ்வாறானதொரு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.



தெஹிவளை துப்பாக்கிதாரிகள் கைது!
[Wednesday 2025-05-28 07:00]

மே 19 ஆம் திகதி தெஹிவளை, நெடிமலவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா