Untitled Document
October 24, 2026 [GMT]
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து கொள்ளை-15 பவுண் நகைகளுடன் இளைஞன் கைது!
[Saturday 2026-10-24 05:00]


யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில் ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில் ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

  

உதயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத நேரம் வீட்டினை உடைத்து 18 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் உதயபுரம் பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில் 15 பவுண் நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

  
   Bookmark and Share Seithy.com



செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து பேராசிரியர் ராஜ் சோமதேவ விலக வேண்டும்!
[Saturday 2026-10-24 05:00]

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மீதான பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பகத்தன்மையை அவராகவே இல்லாமல் செய்திருக்கும் சூழ்நிலையில், இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு உள்ளடங்கலாக அதனுடன் தொடர்புடைய விவகாரங்களில் அவரது பங்கேற்பு உள்வாங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.



ராஜ் சோமதேவவின் அறிக்கை உண்மைக்கு புறம்பாது!
[Saturday 2026-10-24 05:00]

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் தொல்லியல் நிபுணரான ராஜ் சோமதேவவின் அறிக்கை உண்மைக்கு புறம்பாது. செம்மணி இனப்படுகொலையின் ஆதாரமாகும் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும்!
[Saturday 2026-10-24 05:00]

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகள் மீது கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என சர்வதேச மன்னிப்புச் சபை கரிசனை வெளியிட்டுள்ளது.



ஞானசார தேரரின் காவியுடையை மீண்டும் அணிவிக்க உத்தரவிட முடியாது!
[Saturday 2026-10-24 05:00]

ஞானசார தேரரின் காவியுடையை மீண்டும் அவருக்கு அணிவிப்பது தொடர்பில் உத்தரவு பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல தெரிவித்துள்ளார்.



பொலிஸ்,இராணுவத்திற்கும் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவது சிவில் யுத்த சூழலை உருவாக்கும்!
[Saturday 2026-10-24 05:00]

இலங்கையில் பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் இணையான வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவது, நாட்டில் மீண்டும் ஒரு சிவில் யுத்தம் போன்ற ஆபத்தான சூழலை உருவாக்க வழிவகுக்கும் என்று தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.



விகாரமஹாதேவி பூங்காவில் தொடரும் போராட்டம்!
[Saturday 2026-10-24 05:00]

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 8 நாட்களாக கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



தொடரும் சீரற்ற காலநிலை - 2,572 குடும்பங்கள் பாதிப்பு!
[Saturday 2026-10-24 05:00]

நாட்டில் நிலவும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வரை 21 மாவட்டங்களைச் சேர்ந்த 199 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 2,572 குடும்பங்களைச் சேர்ந்த 9,351 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் குறித்து விளக்கம்!
[Saturday 2026-10-24 05:00]

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விசேட விளக்கமளிப்பொன்றை மேற்கொண்டார்.



நிட்டம்புவ நகரில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம்!
[Saturday 2026-10-24 05:00]

நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (23) இரவு 7:30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.



செம்மணி புதைகுழி உண்மைகளை மூடி மறைக்கும் சதி!
[Friday 2026-10-23 16:00]

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ வெளியிட்டுள்ள 4வது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டதாகவும், உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.



27ஆவது வாரமாக மயிலிட்டி மக்கள் போராட்டம்!
[Friday 2026-10-23 16:00]

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கு மத்தியிலும் 27ஆவது வாரமாக இன்றும் (23) நடத்தப்பட்டது.



ராஜ் சோமதேவவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
[Friday 2026-10-23 16:00]

செம்மணிப் புதைகுழி தொடர்பான அறிக்கையில் 'பெரும் மனிதப் புதைகுழி' என்ற சொற்றொடரைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ திட்டமிட்டு நீக்கியுள்ளார் எனச் சந்தேகிப்பதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.



துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறைந்து விட்டன!
[Friday 2026-10-23 16:00]

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் 18 ஆகக் குறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.



பிக்குகளின் கோரிக்கை நிராகரிப்பு!
[Friday 2026-10-23 16:00]

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி, விகாரமஹாதேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகில் பிக்குகள் குழுவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து நேற்று (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (23) அறிவித்தது.



34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
[Friday 2026-10-23 16:00]

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



ஷிரந்திக்கு முதல் இதய அறுவைச் சிகிச்சை நிறைவு!
[Friday 2026-10-23 16:00]

முன்னாள் முதற்பெண்மணியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



சாமர சம்பத்துக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Friday 2026-10-23 16:00]

இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சொகுசுப் பேருந்து விபத்து- இருவர் பலி, 15 பேர் காயம்!
[Friday 2026-10-23 16:00]

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் நேற்று (22) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Friday 2026-10-23 16:00]

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



செம்மணி விவகாரம் குறித்து நீதியமைச்சருடன் கலந்துரையாடலாம்!
[Friday 2026-10-23 06:00]

செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை காணப்பட்டால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதியமைச்சருடன் கலந்துரையாடலாம். ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா