Untitled Document
October 26, 2026 [GMT]
இரண்டு சட்டமூலங்கள் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை, சுதந்திரத்துக்கு பாரிய அச்சுறுத்தல்!
[Monday 2026-10-26 04:00]

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் என்பன நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரத்துக்கு பாரிய அச்சிறுத்தலாகும். அதனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இந்த இரண்டு சட்டமூலங்களையும் வன்மையாக நிராகரிக்கிறது என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் என்பன நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரத்துக்கு பாரிய அச்சிறுத்தலாகும். அதனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இந்த இரண்டு சட்டமூலங்களையும் வன்மையாக நிராகரிக்கிறது என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

  

இது தொடர்பாக சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வைத்தியர் ஜீ.வீரசிங்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் ஆகிய இந்தச் சட்டமூலங்கள் இரண்டும் ஒன்றாகச் சேரும்போது, ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் மற்றும் இலங்கை மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்தச் சட்டமூலங்கள் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும் புதிய அதிகாரங்கள், மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியை நிறுவப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய நீண்டகால உள்நாட்டு மோதல்களின் போதும், 1987-90 காலப்பகுதியில் தெற்கில் நிலவிய பயங்கரவாதக் காலத்தின் போதும், பயங்கரவாதக் கொலையாளிகளின் துன்புறுத்தல்களுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் முகங்கொடுத்துள்ளது. எனவே, பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டிய அவசியத்தை எமது கட்சி நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது.

இருப்பினும், 1983 ஆம் ஆண்டில் ஆளுங்கட்சியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாக பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அன்றைய அரசாங்கம் அக்கட்சியை தடை செய்யவும் அதன் தலைவர்களை சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்தது. எனவே, ஜனநாயக எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும், சமூக இயக்கங்களை அடக்கவும் அல்லது பிரஜைகளின் அரசியலமைப்பு உரிமைகளைப் பலவீனப்படுத்தவும் சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

இந்தச் சட்டமூலங்களில் உள்ள பரந்த அதிகாரங்களும் ஏற்பாடுகளும், தற்போதுள்ள சட்டங்கள் அல்லது ஒழுங்குவிதிகளின் சில ஏற்பாடுகளை பலவீனப்படுத்தவோ அல்லது ரத்து செய்யவோ வழிவகுக்கலாம். இதன் மூலம் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும் தன்னிச்சையாக செயல்படுத்துவதற்கும் கடுமையான ஆபத்து எழக்கூடும்.

குறிப்பாக, சிறிய தவறுகள் கூட குற்றங்களாகப் பெயரிடுதல், கருத்துச் சுதந்திரத்திற்கு (ஊடக அறிக்கையிடல் மற்றும் சில வேளைகளில் உடலில் பச்சைக் குத்துதல் போன்றவையும் உட்பட) அச்சுறுத்தல் ஏற்படுதல், நிரைவேற்று அதிகாரம் அளவுக்குமீறி விரிவடைதல் மற்றும் தடுத்துவைத்தல், பிணை வழங்குதல், ஒப்புதல் வாக்குமூலம் பெறுதல் தொடர்பான நிபந்தனைகளை மாற்றுதல் போன்ற விரிவான ஏற்பாடுகள் மிகுந்த கவலையை அளிக்கின்றன.

பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்டங்களும் நிறுவனங்களும் போதாது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அப்படி நிரூபிக்கப்படாத நிலையில், தடுத்துவைத்தல், பிணை நிபந்தனைகள், ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக அரச அதிகாரங்களை விரிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்டிருப்பது தேவையற்றது, சமமற்றது மற்றும் ஜனநாயக சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு படியாகும்.

நாட்டைப் பாதுகாத்தல் அல்லது பொது அமைதியைப் பேணுதல் என்ற பெயரில் அசாதாரண அதிகாரங்களைக் கோரும் சந்தர்ப்பங்களில் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இலங்கையின் கடந்தகால பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பான அனுபவங்கள் சாட்சியமளிக்கின்றன.

ஜனநாயகம், சமூக நீதி, தேசிய இறையாண்மை மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்பட சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி அர்ப்பணித்து செயற்ட தயாராக இருக்கிறது. எனவே ஜனநாயக சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஒன்றிணையுமாறு அனைத்து முற்போக்கு அரசியல் சக்திகள், ஜனநாயக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர் மற்றும் மாணவர் இயக்கங்கள் அத்துடன் இது குறித்து கவனம் செலுத்தும் பிரஜைகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தேசிய பாதுகாப்பை பாதுகாத்தல், எப்போதுமே சிவில் சுதந்திரத்தைக் குறைப்பதற்கோ அல்லது சட்டபூர்வமான ஜனநாயக நடவடிக்கைகளை அடக்குவதற்கோ ஒருபோதும் சாட்டாக அமையக்கூடாது

  
   Bookmark and Share Seithy.com



அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்குவார்கள் என உளவுத்துறை எச்சரிக்கை!
[Monday 2026-10-26 04:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கியதைப் போலவே, இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் அவர்கள் வீதிகளில் இறங்குவார்கள் என உளவுத்துறைத் தகவல்கள் எச்சரித்துள்ளன. இதனால், அரசாங்கம் தனது திறமையின்மையை மூடிமறைப்பதற்காக அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.



அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 27.9 வீதமே செலவு! - கையாலாகாத அரசு என்கிறார் மனோ.
[Monday 2026-10-26 04:00]

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 1,380 பில்லியன் ரூபாயில், செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையில் 385 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ள நிலையில், அட்டன் நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.



ஒக்டேன் 95 பெட்ரோல் விலையை 20 ரூபாவால் உயர்த்தியது லங்கா ஐ.ஓ.சி!
[Monday 2026-10-26 04:00]

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெட்ரோல் விலை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒக்டேன் 92 பெட்ரோல், டீசல் உள்ளிட்ட ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் ஒக்டேன் 95 பெட்ரோலுக்கு மாத்திரம் பொருந்தும் என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.



மக்களை அடக்குவதற்காகப் புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சி!
[Monday 2026-10-26 04:00]

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் அனுமதி வழங்கும் அரசாங்கம், மறுபுறம் மக்களை அடக்குவதற்காகப் புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றது என்று சர்வஜன அதிகாரம் குற்றஞ்சாட்டியுள்ளது.



பௌத்த பிக்குகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
[Monday 2026-10-26 04:00]

கொழும்பு, விஹாரமஹாதேவி பூங்காவில், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர் ஞாயிற்றுக்கிழ​மை (25) தெரிவித்தார்.



அரசாங்கம் தேவைக்கு அதிகமாக அச்சம்- ஏகபோக, எதேச்சதிகார ஆட்சியை முன்னெடுக்க முயற்சி!
[Monday 2026-10-26 04:00]

அரசாங்கம் தேவைக்கு அதிகமாக அச்சமடைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் ஏகபோக மற்றும் எதேச்சதிகார ஆட்சியை முன்னெடுப்பதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் புதிய பயங்கரவாத அடக்குமுறை சட்டமூலங்களின் ஊடாக மேலதிக அதிகாரங்களைத் தனது கைகளில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டினார்.



அனர்த்தங்களை எதிர்கொள்ளத் தயார் நிலையில்!
[Monday 2026-10-26 04:00]

தற்போது நிலவும் மழை நிலைமையினால் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நி​லையம் தெரிவித்துள்ளது.



கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற பல்பொருள் அங்காடிக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!
[Monday 2026-10-26 04:00]

அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த அம்பாறை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு (சூப்பர் மார்க்கெட்) ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் தாக்கப்பட்டு மரணம்!
[Monday 2026-10-26 04:00]

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் - கஜேந்திரனிடம் 3 மணிநேரம் விசாரணை!
[Sunday 2026-10-25 16:00]

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று 3 மணிநேரம் விசாரணைகள் முன்னெடுத்தனர்.



காணிகளை விடுவிக்கக் கோரி 19வது வாரமாக பலாலியில் தொடர்ந்த போராட்டம்!
[Sunday 2026-10-25 16:00]

பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் காணிகளையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று 19 ஆவது வாரமாகவும் யாழ்ப்பாணம் - பலாலிச் சந்தியில் தொடர்ந்தது.



படையினரால் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் செம்மணியில் புதைக்கப்பட்டது உண்மை!
[Sunday 2026-10-25 16:00]

யாழ்ப்பாணத்தில் படையினரால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டதாகத் தான் ஏற்கனவே வெளிப்படுத்திய தகவல்கள் முற்றிலும் உண்மையானவை என்றும், அவற்றைத் தான் சுயநினைவுடனேயே வெளிப்படுத்தியதாகவும் மீளவும் உறுதிப்படுத்தியுள்ள மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ, தற்போது செம்மணி - சித்துபாத்தி மயானத்தை அண்மித்த பகுதியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் படையினரால் கொல்லப்பட்டோரின் எலும்புக்கூடுகளும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.



வங்காள விரிகுடாவில் பாரிய சூறாவளி உருவாகும் சாத்தியம்!
[Sunday 2026-10-25 16:00]

எதிர்வரும் 27 ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த சூறாவளி நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



ஈரானிய மாலுமிகள் 27 பேருக்கு திடீர் சுகவீனம்- கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி!
[Sunday 2026-10-25 16:00]

காலி துறைமுகத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் கப்பலிலுள்ள பணியாளர்கள் 27 பேர் திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிகப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



பஸ் மீது மோதிய ரயில்- 10 பேர் காயம்!
[Sunday 2026-10-25 16:00]

ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல பகுதியில் உள்ள ரயில்வே கடவையில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.



பலாலி காணி விடுவிப்பு போராட்டம்- 5 பேருக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!
[Sunday 2026-10-25 16:00]

பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி ஐந்து பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



18 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்!
[Sunday 2026-10-25 16:00]

இந்த ஆண்டில் இதுவரை நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,813,484 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.



மட்டக்களப்பு ஆழ்கடலில் மிதக்கும் ஆணின் சடலம்!
[Sunday 2026-10-25 16:00]

மட்டக்களப்பு, முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராக உள்ள கரையற்ற ஆழ்கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக மீனவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.



கட்டானவில் 21 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது!
[Sunday 2026-10-25 16:00]

கட்டான, கிரிஉல்ல பகுதியில் 21 கிலோ 750 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.போதைப்பொருள் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும்!
[Sunday 2026-10-25 05:00]

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சுயாதீன நெறிமுறைகளுடன்கூடிய சர்வதேச கண்காணிப்பு வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை கனடா ஆதரிக்கவேண்டும். பெருமளவில் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்ட இடங்களில் பணியாற்றிய சொந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, இதற்கான சர்வதேசக் கூட்டமைப்பொன்றை கனடாவினால் உருவாக்கமுடியும் என கலாநிதி மரியோ அருள்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா