Untitled Document
March 31, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி, என்னெப்பெற்றால்! Top News
[Wednesday 2025-03-26 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்தியமாநிலத்துக்கான 35ஆவது அகவைநிறைவுவிழாஎன்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகைமதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவுவிழா அமைந்திருந்தது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்தியமாநிலத்துக்கான 35ஆவது அகவைநிறைவுவிழாஎன்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகைமதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவுவிழா அமைந்திருந்தது.

  

09:30 மணிக்கு என்னப்பெற்றால் நகர இளைஞர் விவகாரத்துறைமேலாளர் திருமதிறுசாகால்னரபாக் அவர்கள் பொதுச்சுடர்ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களான பசுமைக் கட்சியின் என்னப்பெற்றால் நகரசபைஉறுப்பினர் திரு. யூற்கன் கொவ்மன்,என்னப்பெற்றால் நகர முன்னாள் துணை முதல்வரும் மூத்தக்குடிமக்களின் பிரதிநிதியும் அனைவருக்கும் சமத்துவத்திற்கான தன்னார்வத் தொண்டருமான சபினிகொவ்மன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு.யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலப் பொறுப்பாளர்களானதிரு. சதாசிவம் சிறிக்கந்தவேல், திரு.கணபதிசிவசுப்பிரமணியம், திரு.சிவநேசன் சுதர்சன், தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் சயந்தன் கேதீஸ்வரன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வன் மிதுனன் ,ரட்ணராஜா,யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் ஷதமிழ் மாணி| திருமதிகலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கலவிளக்கேற்றிவைக்க, அகவைநிறைவுவிழாச் சிறப்புடன் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகத்தின்பொறுப்பாளர் ஷசெம்மையாளன்| திரு.செல்லையாலோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து,மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு,தமிழ்த்திறன்போட்டிஆகியவற்றில் வெற்றிபெற்றவெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றியஆசான்களுக்கானமதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஷதமிழ் வாரிதி| என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஷதமிழ் மாணி| என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்றுஉடுக்கள் பொறிக்கப்பட்டபதக்கமும் வழங்கிமதிப்பளிப்புகள் நடைபெற்றது.

யூச்சன் தமிழாலயநிர்வாகிஷதமிழ்மாணி| திரு. தம்பையாசிவலிங்கம்,கிறீபெல்ட் தமிழாலயநிர்வாகிஷதமிழ்மாணி| திருமதியஸ்ரின் உதயதேவி, கிறீபெல்ட், நெற்றெற்றால், வியர்சன் ஆகியதமிழாலயங்களின்ஆசிரியர்ஷதமிழ்மாணி|திரு.ஆலாலசுந்தரம் ஞானகுமார், வூப்பெற்றால் தமிழாலய ஆசிரியர் ஷதமிழ்மாணி| திருமதி தெய்வறஞ்சனிகிருதரமூர்த்திமற்றும் வூப்பெற்றால் தமிழாலயஆசிரியர்ஷதமிழ்மாணி| திரு. செபஸ்ரியான் றொமாலியஸ் ஸ்ரீபன் ஆகியோருக்கு30 ஆண்டுகள் பணிநிறைவுக்கானமதிப்பளிப்பும், கைன்ஸ்பேர்க்தமிழாலயத்தின் நிர்வாகியும்ஆசிரியரும் மற்றும் யூச்சன் தமிழாலயத்தின் ஆசிரியருமான ஷதமிழ்மாணி|திரு. திசைவீரசிங்கம் புஸ்பராசாஅவர்களுக்கு 35 ஆண்டுகள் பணிநிறைவுமதிப்பளிப்பும் வழங்கப்பட்டன.

பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் மாணவர்கள் பெற்றவெற்றிகளின்அறுவடையாகத்தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவியமட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில்லிவர்குசன் தமிழாலயம் 2ஆம் இடத்திற்கானமதிப்பளிப்பைப்பெற்றுக்கொண்டது. 1ஆம் மற்றும் 3ஆம் இடங்களுக்கானமதிப்பளிப்புஎதிர்வரும் விழாக்களில் வழங்கப்படும். தமிழ்த்திறன் போட்டியில் முன்சன்கிளாட்பாக்தமிழாலயம் 2ஆம் நிலையையும், கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும், கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக் மற்றும் வூப்பெற்றால் தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும்,கலைத்திறன் போட்டியில் நாடுதழுவியமட்டத்திற் கிறீபெல்ட் தமிழாலயம் 2ஆம் இடத்தைப் பெற்றமைக்கான மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன.

மழலையராக இணைந்து 14ஆண்டுகள் தமிழ்மொழிக்கற்றலில் சித்திபெற்று நிறைவு செய்த மாணவர்களுக்கு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, எழுச்சிப்பாடல்கள் மற்றும் எழுச்சிநடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவுவிழா, தமிழ்த்தேசத்தின் விடியலுக்கான நம்பிக்கையைப் பறைசாற்றியவாறு 22:00மணிக்கு மத்தியமாநிலத் தமிழாலயங்களின் அகவை நிறைவுவிழா நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின்நிருவாகப் பொறிமுறைக்கேற்பவகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவுவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  
   Bookmark and Share Seithy.com



வாகைமயில் 2025 - யேர்மனி! Top News
[Friday 2025-03-21 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. டென்மாக், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும் வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



கனடாவில் வீட்டிலிருந்த யுவதிமீது துப்பாக்கி சூடு: சகோதரன் காயம்! Top News
[Monday 2025-03-10 06:00]

யா/கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தி யான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் அகால மரணம் அடைந்து விட்டார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விஜய் தணிகாசலம் மீண்டும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! Top News
[Friday 2025-03-07 06:00]

மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில், கனடியா இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது. இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது.



தமிழர் கலைகளின் வளம்தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை - ஸ்ருற்காட்! Top News
[Thursday 2025-03-06 06:00]

கலைகளின் ஊடாகத் தன்னையும்தனது சூழலையும்பதிவுசெய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியேகடத்தப்பட்டுவருவதோடு, புதியநுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமைபெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்துவருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்றுமொழி, கலைமற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துவருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிதிகழ்கின்றது. தமிழரதுகலைகளைத் தமிழினத்தின் இளையதலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும்.



35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்! Top News
[Thursday 2025-03-06 06:00]


நடிகர் கருணாஸ் தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்! Top News
[Thursday 2025-02-20 19:00]

முக்குலத்தோர் புலிப்புடைக் கட்சியின் தலைவரும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், திரைப்பட நடிகருமான திரு. சேது. கருணாஸ் அவர்களின் பிறந்தநாளை (21.02.2025) யொட்டி 20.02.2025 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடிகர் சேது. கருணாஸ் வாழ்த்துப் பெற்றார்.



அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’ மொழி பெயர்ப்பு சிறுகதை தொகுதி வெளியீடு! Top News
[Wednesday 2025-02-19 18:00]

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.



மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்! Top News
[Wednesday 2025-02-12 06:00]

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டிகள் 08.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம், விடுதலைநடனம், விடுதலைப்பாடல், வாய்ப்பாட்டு ஆகிய கலைகள் போட்டியாகளாக நடைபெற்றன.



கலைத்தமிழோடுகளமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்! Top News
[Saturday 2025-02-08 06:00]

தமிழரதுகலைவடிவங்களைத்தமிழினத்தின் இளையதலைமுறைகற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப்படைப்பாக்கத் திறனைப் பெறவும்,தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும் கலைஅரங்காற்றுகை,செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்தியமாநிலத்தின் கற்றிங்கன் நகரிலேபொதுச்சுடர் ஏற்றலோடுதொடங்கியது.



கல்விக்கு கரம் கொடுப்போம்! Top News
[Saturday 2025-02-08 06:00]

கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடாக வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 அன்று யாழ் மாவட்டம் மாதகல், தெல்லிப்பளை ஆகிய கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



உறை குளிரில் மானிடத்தை உலுக்கிய மின்னல் செந்தில்குமரனின் MGR 108 இசை நிகழ்வு! Top News
[Thursday 2025-02-06 19:00]

சமீபத்தில் ஈழத்தில் உள்ள எங்கள் சொந்தங்களின் மருத்துவ தேவைகளுக்காக நெடுங்காலமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் மின்னல் செந்தில்குமரனின் இசை நிகழ்விற்கு சென்றிருந்தேன். நூறு கோவில்களுக்கு சென்ற மகிழ்ச்சி. ஏன் என்பதனை முழுவதும் படித்த பின் நீங்களும் ஆமோதிப்பீர்கள். ஆறு மணியளவில் மெட்ரோபொலிட்டன் மண்டபம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். செந்தில் குமரனோடு வித்தியாசங்கர், சிவா, சந்தியா, மகிசா, விஜிதா, அனோஜனா, அபிராமி, சௌமிகா, கனிஷா, மானசி, ஷியானா, சியாரா என்று ஒரு பட்டாளமே தெரிவு செய்யப்பட்ட ஹிட் பாடல்களை பாடி மக்களின் கரவொலிகளைப் பெற்று கொண்டிருந்தார்கள்.



யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! Top News
[Thursday 2025-02-06 06:00]

புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும் தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறைமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம்.



சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள்! Top News
[Wednesday 2025-02-05 06:00]

தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.



"இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை" - திருமா அறிக்கை!
[Monday 2025-02-03 06:00]

நேற்று அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் ( என்.ஐ.எஃப்.டி ) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு! Top News
[Friday 2025-01-31 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ் மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் மொழிக் கற்றலை வளப்படுத்தி, கற்கையின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வு 25.01.2025 சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.



கல்விக்குக் கரம் கொடுப்போம்! Top News
[Sunday 2025-01-26 16:00]

செயற்திட்டத்தின் ஊடாக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 25/01/2025 இன்றைய தினம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி, ஒலுமடு, பன்றிக்கெய்தகுளம், நொச்சிமோட்டை ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.



கல்விக்குக் கரம் கொடுப்போம்! Top News
[Saturday 2025-01-25 20:00]

செயற்திட்டத்தின் ஊடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 23/01/2025 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு,மணிபுரம்,மாவடிவேம்பு, மாவடி முன்மாரி, புதுநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 45 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், 22/01/2025 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் துணுக்காய்வீதி மற்றும் கற்குவாரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 21 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



Vaughan தமிழ்ப் பாரம்பரிய விழாவில், கனடாவின் எதிர்கால பிரதமர்-Pierre Poilievre உறுதி! Top News
[Friday 2025-01-24 07:00]

January 18, 2025 Vaughan தமிழ் மரபுத்திங்கள் மற்றும்தைப் பொங்கல் விழா என்பன முன்னைய ஆண்டுகளைவிடமிகப்பெரிய வெற்றியாகவும் தமிழர் பண்பாட்டைச்சிறப்பிக்கும் நிகழ்வாகவும் இடம்பெற்றிருந்தது. Vaughan தமிழ் பண்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில், இந்நிகழ்வு 1,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் அரசியல்பிரமுகர்களையும் கலாச்சார ஆர்வலர்களையும் வர்த்தகநிதியாளர்களையும் ஒருங்கே கொண்டுவந்தது. இந்த ஆண்டு, City of Vaughanமும், York District School Boardம்இணைந்து இந்நிகழ்வை ஆதரித்து ஒருங்கிணைந்தனர். விழாவின் வெற்றியை உறுதி செய்ய Vaughan நகரத்தின்பல ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர். அவர்களின்அர்ப்பணிப்பு மற்றும் ஒழுங்கமைப்பின் மூலம், நிகழ்வு மிகவும்சிறப்பாக நடைபெற்றது.



தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள் - யேர்மனி Top News
[Thursday 2025-01-23 19:00]

யேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்தம் மொழியையும் கலைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் தமிழாலயங்கள் சிறந்து விளங்குகின்றன. அதேபோல் தமிழர் திருநாளையும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம்! Top News Top News
[Monday 2025-01-20 21:00]

இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் எனும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது 17-01-2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் லண்டனில் உள்ள கிறிஸ்ரல் மண்டபத்தில் இடம் பெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கொண்டாடுவதற்கான சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமான கௌரவத்திற்குரிய திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள முக்கியமான பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்கள், சட்டத்துறை சார்ந்தவர்கள், பொறியியலார்கள், தொழில்சார் வல்லுநர்கள், வர்த்தக பிரமுகர்கள், நீண்டகால தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக பிரதிநிதிகள் ஆகியோரும் பிரித்தானியா தமிழர் பேரவையுடன் இணைந்து சிறப்பித்தார்கள்.


 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா