Untitled Document
September 13, 2024 [GMT]
சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? - நாசாவின் அறிவிப்பு!
[Sunday 2024-08-25 06:00]

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் என்ற விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் என்ற விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

  

இருவரும் விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி செய்து வந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களின் விண்கலம் பாதிக்கப்பட்டது.

இதனால் அவர்கள் திட்டமிட்டப்படி 8 நாட்களில் பூமிக்கு திரும்ப முடியவில்லை. கிட்டத்தட்ட 80 நாட்களாக இருவரும் விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுனிதா, புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என கூறியுள்ளது.

அவர்கள் இருவரும் எலான் மஸ்கின் Space X நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் பூமியை வந்தடைவார்கள் என்று கூறப்படுகிறது.

இதன்மூலம் இருவரும் விண்வெளியில் 8 மாதங்களாக தங்கியிருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



உக்ரைனுக்கு கிடைத்துள்ள அனுமதி: எச்சரிக்கையில் ரஷ்ய நகரங்கள்!
[Friday 2024-09-13 06:00]

நீண்ட தூர ஏவுகணைகளுடன் உக்ரைன் போர் உத்தியை மாற்றத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், உக்ரைன் தனது போர் உத்தியை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றி, ரஷ்யாவின் உட்புற பகுதிகளை நீண்ட தூர ஏவுகணைகளால் தாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த மூலோபாய மாற்றம், நேட்டோவின் முக்கிய உறுப்பு நாடான பிரித்தானியா, ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணையை(Storm Shadow cruise missile) பயன்படுத்தி ரஷ்ய பகுதிகளை தாக்க உக்ரைனுக்கு அனுமதியளித்ததை தொடர்ந்து ஏற்படுகிறது.



வண்ணமயமாக காத்திருக்கும் பிரித்தானிய வானம்!
[Friday 2024-09-13 06:00]

வடக்கு ஒளிகளை இன்று இரவு பிரித்தானிய பகுதிகளில் தெரியக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவின் பல பகுதிகளில் இன்று இரவு வடக்கு ஒளிகள்(Northern Lights) தெரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அற்புதமான ஒளிக்காட்சிக்கு "சிறந்த பார்வை நிலைமைகள்" இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம்(The Met Office) கணித்துள்ளது.



கனடாவில் மீன் வலையில் சிக்கி தவித்த திமிங்கலம்: 4 நாள் மீட்புக்கு பிறகு விடுவிப்பு!
[Friday 2024-09-13 06:00]

வலையில் சிக்கிய திமிங்கலம் நான்கு நாட்கள் நடந்த மீட்பு பணிகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் மீன் வலையில் சிக்கிய ஹம்ப்பேக் திமிங்கலம் ஒன்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மீன் வலை கயிறுகள் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு சுமார் 11மீ(36 அடி) நீளம் கொண்ட ஹம்ப்பேக் திமிங்கலம் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.



பிரித்தானியாவில் வீட்டுக்கு தீ வைத்த 14 வயது சிறுமி: ஒருவர் பலி!
[Thursday 2024-09-12 06:00]

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து 14 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை லெய்செஸ்டரின்(Leicester) பெடேல் டிரைவ்(Bedale Drive) பகுதியில், வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் அழைக்கப்பட்டனர். தீக்கிரையான முகவரியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய 14 வயது சிறுமி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஜேர்மனியில் இடிந்து விழுந்த முக்கிய பாலம்!
[Thursday 2024-09-12 06:00]

ஜேர்மனியில் கான்கிரீட் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பெரும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிழக்கு ஜேர்மனியின் Dresden பகுதியில் அமைந்துள்ள Carola பாலத்தின் ஒருப்பகுதி Elbe நதியில் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, ஆனால் எதிர்வரும் மணி நேரங்களில் பாலத்தின் மற்ற பகுதிகளும் இடிந்து விழுவதற்கான அதிகமான சாத்தியங்கள் இருப்பதாக உள்ளூர் தீயணைப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.



சீனாவில் பல் மாற்று சிகிச்சை செய்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி!
[Thursday 2024-09-12 06:00]

சீனாவில் பல் மாற்று சிகிச்சை செய்து கொண்ட நபர் ஒருவர் 13 நாட்களுக்கு பிறகு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நோயாளி ஒருவருக்கு மருத்துவர் ஒரே நாளில் 23 பற்களை பிடுங்கி அகற்றியதோடு 12 பற்களை புதிதாக சேர்த்த 13 நாட்களுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட நோயாளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஐ.எஸ் ஆதரவாளர் கனடாவுக்குள் நுழைந்த விவகாரம்: சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்!
[Wednesday 2024-09-11 18:00]

கனடா அரசு ஏற்கனவே புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவர் மாணவர் விசாவில் கனடாவுக்குள் நுழைந்த விவகாரம் சர்வதேச மாணவர்களுக்கு சிக்கலை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூத மையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட Muhammad Shahzeb Khan (20) என்னும் நபர் கியூபெக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.



புலம்பெயர்தலுக்கு தடை விதிக்கும் திட்டம்: சுவிஸ் மக்கள் ஆதரிக்கிறார்களா?
[Wednesday 2024-09-11 18:00]

புலம்பெயர்ந்தோரால் சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 10 மில்லியனை எட்டிவிடுமோ என்பது குறித்து பொதுமக்களில் மூன்றில் இரண்டு மக்களுக்கு கவலைதான். ஆனால், அதற்காக புலம்பெயர்தலை தடை செய்யும் திட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்களா?



ரஷ்யாவிற்கு ஏவுகணை விநியோகம்: ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!
[Wednesday 2024-09-11 18:00]

ரஷ்யாவிற்கு ஈரான் ஏவுகணைகளை விநியோகம் செய்துவருவது ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஈரான் ஆயுதங்கள் விநியோகம் செய்வதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் குற்றம்சாட்டியுள்ளன. உக்ரைன் மீது தாக்குதல் நடத்த குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு ஈரான் அனுப்பி வருகிறது.



அமெரிக்க ராணுவதள வளாகத்தில் குண்டுவெடிப்பு!
[Wednesday 2024-09-11 18:00]

ஈராக் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில் குண்டுவெடித்தது. அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று பாக்தாத்துக்கு வர உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.



மாணவர் விசாவில் கனடாவில் நுழைந்த ஐ.எஸ் ஆதரவாளர்!
[Wednesday 2024-09-11 06:00]

கனடாவின் கியூபெக்கில் கைதான பாகிஸ்தானிய இளைஞர் மாணவர் விசாவில் கனடாவுக்குள் நுழைந்துள்ளதாக அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூத மையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்த நபர் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளார். கியூபெக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஷாசீப் கான் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டது.



நாட்டையே உலுக்கிய சிறுமி மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!
[Wednesday 2024-09-11 06:00]

துருக்கியில் மாயமான மூன்று வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுமி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மசூதியில் குர்ஆன் பாடம் முடித்து வீடு திரும்பும் வழியிலேயே குறித்த சிறுமி காணாமல் போனார். இந்த நிலையில், உறவினர்கள், நாட்டு மக்கள், சமூக ஊடக பிரபலங்கள் என தீவிர தேடுதல் நடவடிக்கையில் களமிறங்கியது. இதனையடுத்து அவரது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு மைல்கள் தொலைவில் அமைந்துள்ள நதியில் இருந்து நரின் குரன் சடலமாக மீட்கப்பட்டார். மாயமானபோது அணிந்திருந்த உடைகளுடன் அவர் காணப்பட்டார்.



பிரித்தானிய மருத்துவமனை கேட்டரிங் அடுப்பில் ஆணின் சடலம்!
[Wednesday 2024-09-11 06:00]

பிரித்தானியாவின் நார்த்தாம்டன்ஷையர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் கேட்டரிங் அடுப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுக்கத்தை ஏற்படுத்தும் இந்த சம்பவமானது Kettering பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக கருதவில்லை என்றே நார்த்தாம்டன்ஷையர் பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.



ஜெர்மனியில் நண்பர்களுடன் சென்ற இலங்கை மாணவர் மாயம்!
[Tuesday 2024-09-10 18:00]

ஜேர்மனியின் மியூனிக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகக் கொண்ட லசித் யசோதா க்ரூஸ் புள்ளே என்ற மாணவனே , இவர் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் லிபரல் கட்சியில் இணைவு!
[Tuesday 2024-09-10 18:00]

கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னே லிபரல் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். கட்சியின் விசேட ஆலோசகரா அவர் இணைந்து கொண்டு உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கனடிய லிபரல் கட்சி அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.



அவுஸ்திரேலியாவில் சமூக வலைதள பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை!
[Tuesday 2024-09-10 18:00]

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான சட்டம் ஒன்று இந்த ஆண்டு அமுல்ப்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.



டொரன்றோவில் போதைப்பொருள் குற்றச் செயலுடன் தொடர்புடைய 11 பேர் கைது!
[Tuesday 2024-09-10 18:00]

கனடாவின் டொரன்றோவில் போதைப்பொருள் குற்ற செயல்களுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சுமார் ஒரு மாத கால விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



முன்னேறும் உக்ரைன்: ஜோ பைடனுடன் அவசர சந்திப்புக்கு புறப்படும் பிரித்தானிய பிரதமர்!
[Tuesday 2024-09-10 06:00]

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் போர் நிலவரம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் அவசர சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முடிவு செய்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரு தலைவர்களும் வெள்ளைமாளிகையில் இது தொடர்பில் சந்தித்துப் பேச உள்ளனர். ஆகஸ்டு 6ம் திகதி ரஷ்யாவுக்குள் அதிரடியாக ஊடுருவிய உக்ரைன் படைகள், மிக முக்கியமான இரு பாலங்களை தகர்த்ததுடன் தற்போது பல கிராமங்களையும் கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.



48 மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்த அமெரிக்க மாகாணம்!
[Tuesday 2024-09-10 06:00]

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் இரண்டே நாட்களில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் Lake County சுற்றுவட்டாரப்பகுதியில் சனிக்கிழமை பகல் 4.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதே நாள் மதியத்திற்கு மேல் 2.7 மற்றும் 2.8 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மட்டுமின்றி, கலிபோர்னியாவின் தென்பகுதியில் இரண்டுமுறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதில் 3.9 என பதிவாகியுள்ளது. பொதுவாக கலிபோர்னியா வடபகுதியில் மாதம் குறைந்தது 50 முறை நிலநடுக்கம் பதிவாகி வருகிறது.



உலகின் 70 சதவிகித மக்கள் கடுமையான இயற்கை சீற்றங்களை பார்ப்பார்கள்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
[Tuesday 2024-09-10 06:00]

பேய் மழை மற்றும் கடுமையான வெப்ப அலைகளை அடுத்த 20 ஆண்டுகளில் மக்கள் அதிகமாக எதிர்கொள்வார்கள் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நார்வே விஞ்ஞானிகள் சிலர் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர்கள், அதாவது சுமார் 5.6 பில்லியன் மக்கள் கடுமையான இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வார்கள் என்று மதிப்பிடுகின்றனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா