Untitled Document
November 13, 2024 [GMT]
ட்ரம்பிடம் கெஞ்சத் தொடங்கிய மத்திய கிழக்கு நாடு!
[Sunday 2024-11-10 08:00]

கடந்த ஆட்சி போன்று கடும் போக்கு வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஈரான் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த ஆட்சியின் போது தவறான கொள்கைகளை பின்பற்றுவதை டொனால்டு ட்ரம்ப் கைவிட வேண்டும் என ஈரான் தரப்பில் இருந்து Mohammad Javad Zarif என்பவர் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த ஆட்சி போன்று கடும் போக்கு வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஈரான் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த ஆட்சியின் போது தவறான கொள்கைகளை பின்பற்றுவதை டொனால்டு ட்ரம்ப் கைவிட வேண்டும் என ஈரான் தரப்பில் இருந்து Mohammad Javad Zarif என்பவர் கோரிக்கை வைத்துள்ளார்.

  

திட்டமிடல் விவகாரங்களுக்கான ஈரானிய துணைத் தலைவரான இவர், ஈரானின் வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மட்டுமின்றி, அமெரிக்கா உட்பட மேற்கத்திய வல்லரசுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை 2015ல் முன்னெடுக்கவும் உதவியுள்ளார்.

ஆனால், 2018ல் ட்ரம்ப் ஆட்சியின் போது அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக வெளியேறியது. அத்துடன் ஈரான் மீது தடைகளையும் விதித்தது. இதற்கு பதிலடியாக இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது கடமைகளைத் திரும்பப் பெற்றது மற்றும் யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டியது.

மட்டுமின்றி, அணு ஆயுத தயாரிப்பை ஈரான் முன்னெடுத்து வருவதாக மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ளியது. மேலும், ஈரான் மீதான ட்ரம்பின் அரசியல் அணுகுமுறை தான் யுரேனியன் செறிவூட்டல் திட்டங்களில் வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்றும் Zarif குறிப்பிட்டுள்ளார்.

3.5 சதவிகிதம் இருந்த செறிவூட்டல் நிலை தற்போது 60 சதவிகிதம் என அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். ட்ரம்பின் கடந்த ஆட்சி காலத்தில் ஈரானிய தளபதிகள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான Qasem Soleimani ஈராக்கிய தலைநகர் பாக்தாதில் வைத்து 2020 ஜனவரி மாதம் ட்ரோன் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இதனிடையே, ஈரானின் வெளிவிவகார அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவிக்கையில், கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட தவறான அணுகுமுறைகளை திருத்த ட்ரம்ப் தயாராக வேண்டும் என்றார். இதே வேளை பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் தெரிவிக்கையில், ஈரானை பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை என்றார்.

மேலும் தெரிவிக்கையில், எனது விதிமுறைகள் மிகவும் எளிதானவை. அவர்கள் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது. அவர்கள் மிகவும் வெற்றிகரமான நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



உக்ரைனுக்கு கிடைத்துள்ள புது எதிரி: ரஷ்யா-வடகொரியா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!
[Wednesday 2024-11-13 06:00]

வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஆத்திரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் இராணுவ உதவிகளை வழங்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான உச்சிமாநாட்டின் போது இந்த ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டது. ரஷ்யாவின் செய்தி நிறுவனமான டாஸின் கூற்றுப்படி, புடின் நவம்பர் 9 அன்று அதில் கையெழுத்திட்டார். இதற்கு ரஷ்ய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது சட்டமாக மாறியுள்ளது.



ஜேர்மனியில் இடைக்கால தேர்தல் நாள் அறிவிப்பு!
[Wednesday 2024-11-13 06:00]

ஜேர்மனியில் வரும் 2025 பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஆளும் கூட்டணி அரசாங்கம் உடைந்ததை அடுத்து, சேன்சலர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான சோஷியல் டெமோக்ரடிக் கட்சி (SPD) 2024 பிப்ரவரி 23 அன்று இடைக்கால தேர்தல் நடத்த ஒப்புக்கொண்டது.



இவர் தான் கனடாவின் பணக்கார இந்தியர்!
[Wednesday 2024-11-13 06:00]

கனடாவில் வாழும் இந்தியர்களில் மிகப்பெரும் பணக்காரர் யார், அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே அறிந்துகொள்ளலாம். பிரேம் வாட்சா (Prem Watsa), கனடாவின் பணக்கார இந்தியராகவும், கனடாவில் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்தவராகவும் விளங்குகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய பணமதிப்பில் ரூ.17,750 கோடி) ஆகும்.



நெதன்யாகு வெளியிட்ட ரகசியத்தால் பற்றி எரியும் இஸ்ரேலிய நகரம்!
[Tuesday 2024-11-12 18:00]

தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தற்போது பொது வெளியில் பகிரங்கமாக தெரிவித்துள்ளமை மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. லெபனானில் கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு உறுப்பினர்களின் பாக்கெட்டுகளில் இருந்த தொலைத்தொடர்பு கருவியான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.



கனடாவில் கடுமையாக்கப்படும் விசிட்டர் வீசா நடைமுறை!
[Tuesday 2024-11-12 18:00]

கனடாவில் விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான விசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.



இஸ்ரேலால் அழிக்கப்பட்ட ஹெஸ்புல்லாவின் பிரம்மாண்ட சுரங்கம்!
[Tuesday 2024-11-12 18:00]

லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக, இஸ்ரேல் கடந்த மாதம் முதல் தரைவழி தாக்குதலைத் தொடங்கிய நிலையில் ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப் பாதைகளைக் கண்டுபிடித்து இஸ்ரேல் இராணுவம் அழித்து வருகிறது.



இலவச பேருந்துகளை இயக்கும் கனேடிய நகரம்!
[Tuesday 2024-11-12 18:00]

கனடாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவரும் நிலையிலும், ஒரு நகரத்தில் மட்டும் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது என்னும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Orangeville என்னும் நகரத்தில்தான் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது.



இந்தியாவின் ரொக்கெட் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம்!
[Tuesday 2024-11-12 06:00]

பிரான்ஸ் இந்தியாவின் பினாக்கா ரொக்கெட் ஆயுதங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது. இந்தியாவின் Pinaka Multi-Barrel Rocket Launcher (Pinaka MBRL) உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது பிரான்ஸ் தனது ராணுவ தேவைகளுக்காக இந்த ஆயுதங்களை பெற ஆர்வம் காட்டுகிறது. அர்மேனியாவிற்கு பினாக்கா ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு, பிரான்ஸ் அதனை வாங்குவதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.



பிரித்தானியாவில் 700 மைல் பரப்பளவில் பனிப் புயல் தாக்கும் வாய்ப்பு!
[Tuesday 2024-11-12 06:00]

பிரித்தானியாவில் வரும் நாட்களில் கடுமையான குளிரான காலநிலை நிலவும் என புதிய வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்காண்டினேவியாவிலிருந்து 700 மைல் பரப்பளவில் பனிப்புயல் பிரித்தானியாவை தாக்கக் கூடும் என WXCharts வரைபடம் சுட்டிக்காட்டுகிறது. நவம்பர் 18-ஆம் திகதி முதல் -5°C வரை குறைந்த வெப்பநிலைகளுடன், நாட்டில் குளிரான காலநிலை தொடங்க வாய்ப்பு உள்ளது.



டிரம்ப் வெற்றியால் கனேடிய பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் மிகப்பாரிய தாக்கம்!
[Tuesday 2024-11-12 06:00]

அமெரிக்காவில் டிரம்பின் வெற்றி கனடாவின் வட்டி விகிதத்திலும், கனேடிய டொலரிலும் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவில் பணவீக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



கனடாவில் தமிழ்த் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கு மீது துப்பாக்கிச் சூடு!
[Monday 2024-11-11 18:00]

கனடாவில் தமிழ் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குறித்த திரையரங்கில் ஹிந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



உக்ரைன் - ரஷியா போர்: புடினிடம் டிரம்ப் கூறியது என்ன?
[Monday 2024-11-11 18:00]

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, தான் வெற்றி பெற்றால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என பேசி இருந்தார்.



கனடிய போர் வீரர்களுக்கு கௌரவம்!
[Monday 2024-11-11 18:00]

கனடாவின் போர் வீரர்கள் இன்றைய தினம் கௌரவ படுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ராணுவ படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிரேஸ்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்விற்காக ஒட்டாவாவில் ஒன்றுகூட உள்ளனர். இரண்டாம் உலகப்போர் காலம் தொடக்கம் இவ்வாறு படைவீரர்கள் கௌரவபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



47வது அதிபராக வாய்ப்பு கமலா ஹாரிஸ் இற்கு உள்ளது: டிரம்ப்!
[Monday 2024-11-11 18:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 47 வது அதிபராக வரும் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் கமலா ஹாரிஸ் என்ற நிலையில், தற்போது அவர் 47வது அதிபராக வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆம்ஸ்டர்டாம் வன்முறை எதிரொலி: 4000 பொலிசாரை களமிறக்கும் பிரான்ஸ்!
[Monday 2024-11-11 06:00]

பிரான்ஸ்-இஸ்ரேல் கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 4,000 பொலிசார் மற்றும் 1,600 மைதான ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பாரிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்டர்டாமில் இஸ்ரேலிய ரசிகர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு பிரான்ஸ் நிர்வாகம் இந்த நடவடிக்கை முன்னெடுக்க உள்ளது.



மின் தடை, சூறாவாளியை அடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு!
[Monday 2024-11-11 06:00]

கிழக்கு கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சூறாவளி மற்றும் நாடு தழுவிய மின் முடக்கத்திற்கு பல வாரங்களுக்குப் பிறகு, கியூபாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாண்டியாகோ டி கியூபா, ஹோல்குயின் மற்றும் குவாண்டனாமோ போன்ற பெரிய நகரங்கள் உட்பட கியூபாவின் கிழக்குப் பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.



புடினை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த டொனால்டு ட்ரம்ப்!
[Monday 2024-11-11 06:00]

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான தொலைபேசி அழைப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப் உலகின் பல தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருகிறார்.



எலான் மஸ்க்கிற்காக கட்சியின் முக்கிய பெண் உறுப்பினர் தூக்கியெறிந்த அதிபர் டிரம்ப்!
[Sunday 2024-11-10 17:00]

அமெரிக்காவில் நடந்து முடிந்த 47-வது அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப வெற்றிபெற்ற நிலையில் எதிர்வரும் ஜனவரி 20-ம் திகதி பதவியேற்கவுள்ளார். இவ்வாறான நிலையில், தற்போது தனது அரசாங்கத்தில் இடம்பெறவுள்ள மந்திரிகள், ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.



கனடாவில் நபர் ஒருவருக்கு பறவை காய்ச்சல்!
[Sunday 2024-11-10 17:00]

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நபர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ப்ரேசர்வெளி பகுதியில் இளைஞர் ஒருவருக்கு இவ்வாறு பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டது.



எதிர்வரும் 13-ம் திகதி ஜோ பைடனை சந்திக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்!
[Sunday 2024-11-10 17:00]

நடந்து முடிந்த அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரும் வெற்றியை பெற்றார். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் 13-ம் திகதி வெள்ளை மாளிகை செல்கிறார்.


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா