Untitled Document
November 14, 2024 [GMT]
ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்க தீர்மானம்!
[Wednesday 2024-11-13 18:00]

ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர்.

ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர்.

  

முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது.

கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில், ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18 இல் இருந்து 9 ஆகக் குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிப்பதால் இந்த சட்ட திருத்தம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

எனினும் இதற்கு அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.

இந்த சட்டவரைபு நிறைவேற்றப்பட்டால் இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கல்வி நடவடிக்கையை இடைநடுவில் நிறுத்த வேண்டிய நிலைமை பெண்களுக்கு ஏற்படும் என்றும் பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான எதிர்ப்புக்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பெண்ணின் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த சட்டவரைபை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈராக் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



டிரம்ப் வெற்றிக்கு உதவிய துளசிக்கு முக்கிய பதவி!
[Thursday 2024-11-14 18:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக மாபெரும் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வெற்றிக்கு உதவிய துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்.



கனடாவைப்போலவே அமெரிக்காவிலும் டெஸ்லா கார் தொடர்பில் குற்றச்சாட்டு!
[Thursday 2024-11-14 18:00]

கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் உயிரிழந்த விவகாரம் போலவே, மேலும் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம், 24ஆம் திகதி, கனடாவின் ரொரன்றோவில் வேகமாக சென்றுகொண்டிருந்த டெஸ்லா கார் ஒன்று, சாலையின் நடுவிலிருந்த தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றியது. தீப்பற்றியதில் காருக்குள் சிக்கி Neelraj Gohil (25), அவரது சகோதரியான Ketaba Gohil (29), Jay Sisodiya என்பவர், மற்றும் Digvijay Patel ஆகிய நான்குபேர் உடல் கருகி பலியாகிவிட்டார்கள்.



உடல்நிலை தொடர்பில் சுனிதா வில்லியம்ஸ் வெளியிட்ட தகவல்!
[Thursday 2024-11-14 18:00]

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர் பூமிக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.



டிரம்ப் வெற்றி பெற உதவிய எலான் மஸ்க்: எக்ஸ் தளத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்!
[Thursday 2024-11-14 18:00]

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றிக்கு மிகப்பெரிய உதவியாக எலான் மஸ்க் இருந்தார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் தனது செல்வாக்கை பயன்படுத்தியதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது டிரம்ப் வெற்றிக்குப் பிறகு, எக்ஸ் தளத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.



கனடாவில் இடம் பெற்ற பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம்: 23 பேர் கைது!
[Wednesday 2024-11-13 18:00]

கனடாவில் பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது சுமார் நூறு துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ பொலிஸார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.



எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமிக்கு தலைமை பதவிகள்: டிரம்ப்!
[Wednesday 2024-11-13 18:00]

பிரபல தொழிலதிபர்களான எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்கா அரசாங்கத்தின் திறன் துறைக்குத் தலைமை வகிப்பார்கள் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் தனது அரசில் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்து வருகிறார்.



கனடாவில் வாகனங்கள் மீது கல்வீச்சு!
[Wednesday 2024-11-13 18:00]

கனடாவில் வாகனங்கள் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஒன்றாறியோ மாகாணம் மார்க்கம் பகுதியில் கற்கள் வீசி எறியப்பட்டதனால் இரண்டு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையில் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல்கள் தொடர்பில் சுமார் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.



உக்ரைனுக்கு கிடைத்துள்ள புது எதிரி: ரஷ்யா-வடகொரியா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!
[Wednesday 2024-11-13 06:00]

வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஆத்திரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் இராணுவ உதவிகளை வழங்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான உச்சிமாநாட்டின் போது இந்த ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டது. ரஷ்யாவின் செய்தி நிறுவனமான டாஸின் கூற்றுப்படி, புடின் நவம்பர் 9 அன்று அதில் கையெழுத்திட்டார். இதற்கு ரஷ்ய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது சட்டமாக மாறியுள்ளது.



ஜேர்மனியில் இடைக்கால தேர்தல் நாள் அறிவிப்பு!
[Wednesday 2024-11-13 06:00]

ஜேர்மனியில் வரும் 2025 பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஆளும் கூட்டணி அரசாங்கம் உடைந்ததை அடுத்து, சேன்சலர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான சோஷியல் டெமோக்ரடிக் கட்சி (SPD) 2024 பிப்ரவரி 23 அன்று இடைக்கால தேர்தல் நடத்த ஒப்புக்கொண்டது.



இவர் தான் கனடாவின் பணக்கார இந்தியர்!
[Wednesday 2024-11-13 06:00]

கனடாவில் வாழும் இந்தியர்களில் மிகப்பெரும் பணக்காரர் யார், அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கே அறிந்துகொள்ளலாம். பிரேம் வாட்சா (Prem Watsa), கனடாவின் பணக்கார இந்தியராகவும், கனடாவில் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்தவராகவும் விளங்குகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய பணமதிப்பில் ரூ.17,750 கோடி) ஆகும்.



நெதன்யாகு வெளியிட்ட ரகசியத்தால் பற்றி எரியும் இஸ்ரேலிய நகரம்!
[Tuesday 2024-11-12 18:00]

தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தற்போது பொது வெளியில் பகிரங்கமாக தெரிவித்துள்ளமை மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. லெபனானில் கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு உறுப்பினர்களின் பாக்கெட்டுகளில் இருந்த தொலைத்தொடர்பு கருவியான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.



கனடாவில் கடுமையாக்கப்படும் விசிட்டர் வீசா நடைமுறை!
[Tuesday 2024-11-12 18:00]

கனடாவில் விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான விசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.



இஸ்ரேலால் அழிக்கப்பட்ட ஹெஸ்புல்லாவின் பிரம்மாண்ட சுரங்கம்!
[Tuesday 2024-11-12 18:00]

லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக, இஸ்ரேல் கடந்த மாதம் முதல் தரைவழி தாக்குதலைத் தொடங்கிய நிலையில் ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப் பாதைகளைக் கண்டுபிடித்து இஸ்ரேல் இராணுவம் அழித்து வருகிறது.



இலவச பேருந்துகளை இயக்கும் கனேடிய நகரம்!
[Tuesday 2024-11-12 18:00]

கனடாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவரும் நிலையிலும், ஒரு நகரத்தில் மட்டும் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது என்னும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Orangeville என்னும் நகரத்தில்தான் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது.



இந்தியாவின் ரொக்கெட் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம்!
[Tuesday 2024-11-12 06:00]

பிரான்ஸ் இந்தியாவின் பினாக்கா ரொக்கெட் ஆயுதங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது. இந்தியாவின் Pinaka Multi-Barrel Rocket Launcher (Pinaka MBRL) உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது பிரான்ஸ் தனது ராணுவ தேவைகளுக்காக இந்த ஆயுதங்களை பெற ஆர்வம் காட்டுகிறது. அர்மேனியாவிற்கு பினாக்கா ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு, பிரான்ஸ் அதனை வாங்குவதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.



பிரித்தானியாவில் 700 மைல் பரப்பளவில் பனிப் புயல் தாக்கும் வாய்ப்பு!
[Tuesday 2024-11-12 06:00]

பிரித்தானியாவில் வரும் நாட்களில் கடுமையான குளிரான காலநிலை நிலவும் என புதிய வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்காண்டினேவியாவிலிருந்து 700 மைல் பரப்பளவில் பனிப்புயல் பிரித்தானியாவை தாக்கக் கூடும் என WXCharts வரைபடம் சுட்டிக்காட்டுகிறது. நவம்பர் 18-ஆம் திகதி முதல் -5°C வரை குறைந்த வெப்பநிலைகளுடன், நாட்டில் குளிரான காலநிலை தொடங்க வாய்ப்பு உள்ளது.



டிரம்ப் வெற்றியால் கனேடிய பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் மிகப்பாரிய தாக்கம்!
[Tuesday 2024-11-12 06:00]

அமெரிக்காவில் டிரம்பின் வெற்றி கனடாவின் வட்டி விகிதத்திலும், கனேடிய டொலரிலும் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவில் பணவீக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



கனடாவில் தமிழ்த் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கு மீது துப்பாக்கிச் சூடு!
[Monday 2024-11-11 18:00]

கனடாவில் தமிழ் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குறித்த திரையரங்கில் ஹிந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



உக்ரைன் - ரஷியா போர்: புடினிடம் டிரம்ப் கூறியது என்ன?
[Monday 2024-11-11 18:00]

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, தான் வெற்றி பெற்றால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என பேசி இருந்தார்.



கனடிய போர் வீரர்களுக்கு கௌரவம்!
[Monday 2024-11-11 18:00]

கனடாவின் போர் வீரர்கள் இன்றைய தினம் கௌரவ படுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ராணுவ படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிரேஸ்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்விற்காக ஒட்டாவாவில் ஒன்றுகூட உள்ளனர். இரண்டாம் உலகப்போர் காலம் தொடக்கம் இவ்வாறு படைவீரர்கள் கௌரவபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா