Untitled Document
November 23, 2024 [GMT]
மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ள கனடா மக்கள்!
[Friday 2024-11-22 18:00]

கனடா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடியால் மளிகை பொருட்களின் விலை பாரியளவில் உயர்ந்துள்ளது. நடுத்தர வருவாய் உள்ள மக்கள் குடும்பம் நடத்தவே முடியாமல் சிரமப்படுகின்றனர். உணவு வங்கிகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது.

கனடா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடியால் மளிகை பொருட்களின் விலை பாரியளவில் உயர்ந்துள்ளது. நடுத்தர வருவாய் உள்ள மக்கள் குடும்பம் நடத்தவே முடியாமல் சிரமப்படுகின்றனர். உணவு வங்கிகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது.

  

இந்த சூழலில், அங்குள்ள மக்களிடம் சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி ஆய்வு நடத்தி நேற்றையதினம் (21-11-2024) அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த ஆய்வறிக்கையில், 25 சதவீத கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான உணவளிப்பதற்காக தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் மற்ற தேவைகளுக்காக மளிகைப் பொருட்களுக்கான செலவைக் குறைத்ததாக கூறியுள்ளனர்.

விலைவாசியை குறைப்பதற்காக சில அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிறுத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்படும் சமயத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



மர்ம பொருள் அடங்கிய பொதி: காலி செய்யப்பட்ட லண்டன் விமான நிலையம்!
[Saturday 2024-11-23 06:00]

மர்மமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் தெற்கு முனையம் தற்காலிகமாக காலி செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை லண்டனின் கேட்விக் விமான நிலைய அதிகாரிகள் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களை தெற்கு முனையத்துக்கு அனுப்பி வைத்ததை அடுத்து அப்பகுதி தற்காலிகமாக காலி செய்யப்பட்டது.



புடின் படைகளை எதிர்த்து சண்டையிட தயார்: பிரித்தானிய இராணுவ தளபதி தகவல்!
[Saturday 2024-11-23 06:00]

ரஷ்ய படைகள் ஐரோப்பிய நாட்டிற்குள் நுழைந்தால் பிரித்தானிய படைகள் போரில் உடனடியாக களமிறங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் தங்களின் ஆயுதங்களை ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது பயன்படுத்த அனுமதி வழங்கியதை அடுத்து, உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது மிகவும் பதற்ற நிலையை அடைந்துள்ளது.



கனடாவில் இரண்டு முக்கிய வரிவிலக்குகள் அறிவிப்பு!
[Saturday 2024-11-23 06:00]

கனேடிய அரசு தனது குடிமக்களுக்கான வரிவிலக்கை அதிகரிக்கும் வகையில் இரு முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதில், பணி செய்யும் கனடா குடிமக்களுக்கு $250 வரிச்சலுகை மற்றும் குறித்த காலத்திற்கான GST விலக்கு அடங்கும். 1- பணியாளர்களுக்கான $250 தள்ளுபடி (Working Canadians Rebate) 2023-ஆம் ஆண்டு வேலை செய்த மற்றும் $1,50,000 வருமானம் வரை ஈட்டிய கனடா குடிமக்கள், 2025-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் $250 தள்ளுபடி பெறுவார்கள். இது வரியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொகையாக இருக்கும்.



உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!
[Friday 2024-11-22 18:00]

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வழங்கிய அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை கொண்டு ரஷ்யாவின் உள்பகுதிகளில் உக்ரைன் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.



சைனைட் கொடுத்து 14 பேரை கொன்ற பெண்: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!
[Friday 2024-11-22 18:00]

தனது தோழிக்கு சைனைட் விசம் கொடுத்து கொன்ற குற்றத்துக்காகத் தாய்லாந்துப் பெண் ஒருவருக்கு நவம்பர் 20ஆம் திகதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. 36 வயது சராரட் ரங்சிவுதாபோர்னுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள 14 வழக்குகளில் முதல் வழக்கு விசாரணையிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சராரட், சூதாட்டத்துக்கு அடிமையானவர் என்றும் பிறரை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் பறித்த பிறகு, ‘சைனைட்’டைப் பயன்படுத்தி அவர்களைக் கொன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



கனடிய மக்களுக்கு அரசாங்கம் அனுப்பி வைக்கும் காசோலை!
[Friday 2024-11-22 18:00]

கனடாவின் மத்திய அரசாங்கம் நாட்டு நாட்டின் அதிகளவான மக்களுக்கு காசோலைகளை அனுப்பி வைக்க உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில் 150000 டொலர்கள் அல்லது அதற்கும் குறைந்த தொகையை வருமானமாக ஈட்டியவர்களுக்கு இவ்வாறு காசோலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 250 டொலர் பெறுமதியான காசோலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



புதிய ஆயுதத்தை களமிறக்கிய புடின்!
[Friday 2024-11-22 06:00]

ரஷ்யா எதற்கு தயாராக இருப்பதாக மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யாவின் உள் பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து இதற்கு ரஷ்யா பதிலடி தாக்குதலை முன்னெடுத்தது. அந்த வகையில் இன்று உக்ரைன் நகரான டினிப்ரோ மீது ரஷ்யா துல்லிய தாக்குதல் நடத்தியது.



மெத்தனால் விஷத்தால் உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலா பயணி!
[Friday 2024-11-22 06:00]

பிரித்தானிய சுற்றுலா பயணி லாவோஸ் நாட்டில் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். லாவோஸ் நாட்டின் வாங் வியெங்(Vang Vieng) நகரில் உள்ள உள்ளூர் மதுபான கடையில் வழங்கப்பட்ட இலவச மது பானத்தை குடித்த சுற்றுலா பயணிகள் பலர் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர்.



இஸ்ரேல் பிரதமர், ராணுவ தளபதியை கைது செய்ய பிடிவாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
[Friday 2024-11-22 06:00]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்(ICC) பிறப்பித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் இராணுவ தளபதி முகமது டெய்ஃப் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.



கனடாவில் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி!
[Wednesday 2024-11-20 18:00]

கனடாவில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு கவலையான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் தபால் ஊழியர்கள் போராட்டம் கடவுச்சீட்டு விநியோகத்தை மோசமாக பாதித்துள்ளது. குறிப்பாக கனடிய தபால் திணைக்கள பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.



சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு!
[Wednesday 2024-11-20 18:00]

சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து சம்பவம் நேற்றியதினம் (19) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



ஒன்றாறியோவில் மதுபானம் காரணமாக தப்பிய கடைகள்!
[Wednesday 2024-11-20 18:00]

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்ட காரணத்தினால் பல மளிகை கடைகள் மூடப்படுவதில் இருந்து தப்பிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ மாகாண மளிகை கடை ஒன்றியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மாகாண அரசாங்கம் அண்மையில் மளிகை கடைகளிலும் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது.



உருக்குலைந்த காசாவில் முழக்கமிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
[Wednesday 2024-11-20 18:00]

இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் ஹமாஸின் தலைவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், காசாவில் போர் பதற்றம் ஓரளவு குறைந்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா சென்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (19) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவுக்கு சென்றிருக்கிறார். போர் தொடங்கியதிலிருந்து காசாவுக்கு அவர் செல்வது இதுவே முதல்முறையாகும். அவருடன் பாதுகாப்பு துறை அமைச்சரும் காசாவுக்கு சென்றிருக்கின்றார்.



கனடாவில் இருந்து வெளியேறும் குடியேறிகள்!
[Wednesday 2024-11-20 18:00]

கனடாவில் இருந்து குறிப்பிடத்தக்களவு குடியேறிகள் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவில் குடியேறும் நபர்கள் 25 ஆண்டுகளுக்குள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.



கனடாவில் கரட் கொள்வனவு செய்பவருக்கு எச்சரிக்கை!
[Tuesday 2024-11-19 18:00]

கனடாவில் இயற்கை உர வகைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கரட் வகைகளை கொள்வனவு செய்பவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த கரட் உட்கொண்டவர்களுக்கு ஈகோலி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வகை கரட்களை உட்கொண்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார், எனவும் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



அமெரிக்காவில் டிரம்ப் அதிரடியால் பாதிக்கப்படவுள்ள 2 கோடி குடும்பங்கள்!
[Tuesday 2024-11-19 18:00]

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றாஅவுடன், தேசிய அளவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட உள்ளதுடன் புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கையால் நேரடியாக சுமார் 2 கோடி குடும்பங்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.



கனடா அமெரிக்க எல்லைப் பகுதி கடப்பது குறித்த புதிய நடைமுறை!
[Tuesday 2024-11-19 18:00]

கனடிய மற்றும் அமெரிக்க எல்லை பகுதிகளை கடப்பது தொடர்பான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய எல்லை சேவை முகவர் நிறுவனம் இந்த மாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் கனடிய அமெரிக்க எல்லை பகுதிகள் பலவற்றின் ஊடாக எல்லைகளையே கடக்க முடியும் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



உக்ரைன் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்துமா? புடின் நடவடிக்கையால் பரபரப்பு!
[Tuesday 2024-11-19 18:00]

கடந்த 2002-ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய துருப்புக்கள் தாக்குதலை தொடங்கிய நிலையில், போர் தொடங்கி 1000 நாளில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுத பயன்பாடு தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட புதிய கொள்கையில் கையெழுத்திட்டுள்ளார்.



கனடாவில் கிறிஸ்துமஸ் பரிசாக சிறப்பு நாணயம் வெளியீடு!
[Tuesday 2024-11-19 06:00]

கிறிஸ்துமஸ் விருந்தாக ராயல் கனேடிய மின்ட் கிறிஸ்துமஸ் லொறி பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்டுள்ளது. ராயல் கனேடிய மின்ட் நாணய சேகரிப்பாளர்களுக்கான மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் பரிசாக பனி மூடிய பழங்கால சிவப்பு லொறியின் வடிவில் உள்ள $2 நாணயம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.



தூக்கமின்மையால் அவதிப்பட்ட காதலி: 20 முறை மயக்க மருந்து செலுத்தி கொன்ற சீன மருத்துவர்!
[Tuesday 2024-11-19 06:00]

தூக்கமின்மையால் அவதிப்பட்ட காதலிக்கு அதிக அளவிலான மயக்க மருந்து செலுத்தி காதலன் செய்த ஆபத்தான சோதனை விபரீதத்தில் முடிந்துள்ளது. சீனாவில் மயக்கவியல் நிபுணர் ஒருவர் தனது காதலியின் தூக்கமின்மையை சிகிச்சை செய்யும் பெயரில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கொன்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வலுவான கண்டனம் பெற்று வருகிறது.


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா