Untitled Document
November 27, 2024 [GMT]
ட்ரம்பின் வரி விதிப்பால் அன்றாட பொருட்களின் விலை அதிகமாகும்: எச்சரிக்கும் நிபுணர்கள்!
[Wednesday 2024-11-27 06:00]

டொனால்டு ட்ரம்பின் புதிய வரி விதிப்புகளால் எந்தெந்த பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் மற்றும் நுகர்வோர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் அவர் பொறுப்பேற்கவிருக்கிறார். இந்த நிலையில், பொறுப்புக்கு வரும் முதல் நாளிலேயே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்பின் புதிய வரி விதிப்புகளால் எந்தெந்த பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் மற்றும் நுகர்வோர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் அவர் பொறுப்பேற்கவிருக்கிறார். இந்த நிலையில், பொறுப்புக்கு வரும் முதல் நாளிலேயே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

  

மட்டுமின்றி சீனாவின் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள வரிகள் மீது மேலும் 10 சதவிகிதம் வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இரண்டு பெரிய வர்த்தக பங்காளிகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் இருந்தும் 1.3 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.

அதாவது இனிமேல் கார்கள், எரிவாயு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் உபகரணங்கள் முதல் மருந்துகள் மற்றும் ஆடைகள் வரையிலான பொருட்கள் விலை உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மெக்ஸிகோ அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும், கடந்த ஆண்டு மட்டும் 475 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த இறக்குமதிகளில் பெரும்பாலானவை கார்கள், கணினிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களாகும்.

இனி புதிய வரி விதிப்பால் கட்டணம் உயரும். கடந்த ஆண்டு மட்டும் கனடாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயந்திரங்கள் உட்பட 418 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா தனது வடக்கு அண்டை நாடுகளில் இருந்து பில்லியன் கணக்கான பிளாஸ்டிக், மருந்துகள், உலோகங்கள் மற்றும் விவசாய பொருட்களை இறக்குமதி செய்கிறது.

கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வருகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் பல கார்கள் மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் அசெம்பிள் செய்யப்படுகின்றன அல்லது அவற்றிலிருந்து பெறப்பட்ட பாகங்களைப் பயன்படுத்துகின்றன.

இனிமேல் ஒரு புதிய காரின் விலைக்கு 1,000 முதல் 5,000 டொலர் வரை கட்டணம் உயரலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவிற்கு விவசாயப் பொருட்களையும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

புதிய வரி விதிப்பு காரணமாக பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் பால் போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 427 பில்லியன் டொலர் பொருட்களை இறக்குமதி செய்ததுடன் கிட்டத்தட்ட 148 பில்லியன் டொலர் பொருட்களை ஏற்றுமதியும் செய்தது.

தமது வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு விளக்கமளித்த டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் மற்றும் குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க இது உதவும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



800 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படும் லண்டனின் மிகப் பிரபலமான சந்தை!
[Wednesday 2024-11-27 06:00]

லண்டனின் மையப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இறைச்சி சந்தை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஸ்மித்ஃபீல்ட் இறைச்சி சந்தையை நடத்தும் லண்டன் கார்ப்பரேஷன், முன்பு அதை இடமாற்றம் செய்ய திட்டமிட்டது. அத்துடன் பில்லிங்ஸ்கேட் மீன் சந்தையையும் டாகன்ஹாமில் சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் தொகையில் உருவாக்கப்படும் வளர்ச்சித் திட்டத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.



லெபனானில் ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்தம்: இறுதியில் ஒப்புக்கொண்ட இஸ்ரேல்!
[Wednesday 2024-11-27 06:00]

லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஜர் தாக்குதல்களாலும், அதன் தலைவர்கள் பலரை படுகொலை செய்த பிறகு ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தயாராகியுள்ளது. அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடில் பலர் கொல்லப்பட்ட நிலையில், காஸா மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்தது.



டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு ஆபத்தானது - டக் போர்ட்!
[Tuesday 2024-11-26 18:00]

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது என கனடா தெரிவித்துள்ளது. கனடா மேக்சிகோ ஆகிய நாடுகள் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என என்ற யோசனையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். ட்ரம்பின் இந்த யோசனையானது கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தை மிக மோசமாக பாதிக்கும் என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க ராணுவத்திலிருந்து திருநங்கைகளை வெளியேற்ற திட்டம்!
[Tuesday 2024-11-26 18:00]

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும் அமெரிக்க ராணுவத்திலிருந்து திருநங்கைகள் வெளியேற்றப்படும் உத்தரவில் கையெழுத்திடப்போவதாக தகவல்கள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்ற நிலையில் பதவியேற்பு ஜனவரிமாதம் 20ம் திகதி நடைப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கனடா, மெக்சிகோ மற்றும் சீனா பொருட்களுக்கு அதிக வரி: டிரம்ப் அறிவிப்பு!
[Tuesday 2024-11-26 18:00]

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.



மீட்டிங் வராத 99 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்!
[Tuesday 2024-11-26 18:00]

அமெரிக்காவில் இயங்கி வரும் இசை கருவிகளை விற்கும் நிறுவனம் ஒன்றில் மீட்டிங் வராத 99 ஊழியர்களை நிறுவன முதலாளில் அதிரடியாக தூக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் தான் வேலைக்கு சேர்ந்த ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு தூக்கப்பட்டதாக Reddit சமூக வலைத்தளத்தில் புலம்பி தள்ளியுள்ளார். அவரது பதிவில்,



2,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய குவளை: இரத்தம், மார்பகப் பாலை உள்ளடக்கிய கலவையின் ரகசியம்!
[Tuesday 2024-11-26 06:00]

2,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய குவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும், 2,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய குவளையின் ரகசியங்களை ஒரு திடீர் கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு, 1984 இல் டாம்பா கலை அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த பொருளின் பகுப்பாய்வு செய்து, அதன் மயக்கும் கடந்த காலத்தை வெளிப்படுத்தியுள்ளது.



மேற்கு லண்டனில் துப்பாக்கி சூடு: 8 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!
[Tuesday 2024-11-26 06:00]

மேற்கு லண்டனில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி மற்றும் ஒரு ஆண் படுகாயமடைந்த நிலையில், 22 வயது நபர் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் லாட்பிரோக் குரோவ்-இல்(Ladbroke Grove.) உள்ள தெற்கு வரிசையில் இந்த சம்பவம் நடந்தது.



சிங்கப்பூர் விமானத்தில் 4 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்தியர்: காத்திருக்கும் தண்டனை!
[Tuesday 2024-11-26 06:00]

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 4 பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இந்தியர் ஒருவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நான்கு பெண்களை துன்புறுத்தியதாக 73 வயதான இந்திய நாட்டவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



நடனம் ஆடிய கனடா பிரதமரால் கொந்தளித்த மக்கள்!
[Monday 2024-11-25 18:00]

கனடா மான்ட்ரியல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறி வாகனங்களுக்கு தீவைப்பு மற்றும் உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் அதேநாளில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்னொரு பகுதியில் பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் கச்சேரியில் பங்கேற்று இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இந்த இசை நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் கலந்துகொண்டார்.



பிரம்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!
[Monday 2024-11-25 18:00]

கனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



வெடிகுண்டை அகற்ற 4,000 பேர் வெளியேற்றம்!
[Monday 2024-11-25 18:00]

இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 4,000 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். Annecy (Haute-Savoie) நகரிப் இந்த வெடிகுண்டு கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி கட்டுமானப்பணிகளுக்காக நிலத்தை தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்டது. அது இயங்கும் நிலையில் இருப்பதால் அதனை அகற்றுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.



ஏதிலிகள் படகுகள் கடலில் மூழ்கியதில் 24 பேர் பலி!
[Monday 2024-11-25 18:00]

ஐரோப்பாவுக்குள் நுழையமுயன்ற ஏதிலிகள் படகுகள் கடலில் மூழ்கியதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவக்கள் கூறுகின்றன. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இந்நாட்டை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர்.



மூன்றாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டது: உக்ரைன் முன்னாள் தளபதி!
[Monday 2024-11-25 06:00]

மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளதாக உக்ரைன் முன்னாள் தளபதி வாலெரி ஜலுச்னி (Valery Zaluzhny) கூறயுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், அதனுடன் வட கொரியா, ஈரான், மற்றும் சீனாவும் கலந்து கொண்டுள்ளன என்பதன் மூலம் இந்த போரின் பரவலான உலகளாவிய தாக்கத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



பிரித்தானியாவை தாக்கும் பெர்ட் புயல்!
[Monday 2024-11-25 06:00]

பிரித்தானியாவின் பல பகுதிகளை பெர்ட் புயல் கடுமையாக தாக்கி வரும் நிலையில், “உயிருக்கே ஆபத்து” ஏற்படும் நிலைமை வரலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவை பெர்ட் புயல்(Storm Bert) தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், பல பகுதிகளில் கடுமையான காற்று மற்றும் கனமழை ஏற்பட்டுள்ளது. நேற்று பல பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 82 மைல் வரை பதிவாகியதை அடுத்து பரவலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.



இஸ்ரேலை குறிவைத்து ஏவப்பட்ட 185 ராக்கெட்கள்!
[Monday 2024-11-25 06:00]

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கிட்டத்தட்ட 185 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேல்-மற்றும் லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையிலான போர் நடவடிக்கை மீண்டும் பதற்ற நிலையை அடைந்துள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று வட மத்திய இஸ்ரேலிய பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் கிட்டத்தட்ட 185 ராக்கெட் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.



கனடாவிற்குள் வருவோரை பாதுகாக்க புதிய சட்டம்!
[Sunday 2024-11-24 18:00]

கனடாவில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனை தடுக்கவும் மோசடிகளில் சிக்குவதனை தவிர்க்கவும் இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.



இஸ்ரேல் பிரதமர் தொடர்பில் இங்கிலாந்தின் அதிரடி அறிவிப்பு!
[Sunday 2024-11-24 18:00]

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.



நயகராவில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நபர்!
[Sunday 2024-11-24 18:00]

நயகராவில் நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் நயகராக சென் கதரீன்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.



தெற்காசிய மக்களை தூற்றிய நபரை தேடும் பொலிஸார்!
[Sunday 2024-11-24 18:00]

கனடாவின் ரொறன்ரோவில் தெற்காசிய சமூகத்தை தூற்றும் வகையில் அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் கத்தியுடன் தெற்காசிய சமூகத்தவர்களை அச்சுறுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த குற்ற செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் அந்த நபரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா