Untitled Document
December 23, 2024 [GMT]
பிரேசிலில் சுற்றுலா தளத்தின் மீது விழுந்த விமானம்: 10 பேர் உயிரிழப்பு!
[Monday 2024-12-23 07:00]

பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் பயணிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, தெற்கு பிரேசிலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிராமாட்டோவில்(Gramado) ஒரு பயங்கரமான விமான விபத்து ஏற்பட்டது, இதில் விமானத்தில் இருந்த அனைத்து 10 பேரும் உயிரிழந்தனர்.

பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் பயணிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, தெற்கு பிரேசிலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிராமாட்டோவில்(Gramado) ஒரு பயங்கரமான விமான விபத்து ஏற்பட்டது, இதில் விமானத்தில் இருந்த அனைத்து 10 பேரும் உயிரிழந்தனர்.

  

இரட்டை என்ஜின் கொண்ட பைப்பர் பிஏ-42-1000 விமானம்(twin-engine Piper PA-42-1000), குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் தரையில் இருந்த 17 பேர் மேலும் காயமடைந்தனர்.

விமான உரிமையாளரும் விமானியுமான லூயிஸ் கிளாடியோ கலீசியா(Luiz Claudio Galeazzi) மற்றும் அவரது குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் பயணம் செய்த விமானம், கடினமான வானிலை நிலைமைகளின் கீழ் கனேலா(Canela) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

சாவோ பவுலோ மாநிலத்தின் ஜுண்டியாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த மோசமான சம்பவம் நடந்தது.

ஆளுநர் Eduardo Leite உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார் மற்றும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ரஷ்யா ஏவிய 52 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைனிய பாதுகாப்பு அமைப்பு!
[Monday 2024-12-23 07:00]

உக்ரைன் மீது ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி இரவு முழுவதும் உக்ரைன் மீது தொடர்ச்சியான வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஏவப்பட்ட 103 ரஷ்ய ட்ரோன்களில் 52 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. மற்ற 44 ட்ரோன்கள் ரேடாரில் இருந்து மறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுவன்!
[Monday 2024-12-23 07:00]

பிரித்தானியாவின் எசெக்ஸில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் எசெக்ஸின்(Essex) தெற்கு ஒக்கெண்டன்(South Ockendon) பகுதியில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.



தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா!
[Monday 2024-12-23 07:00]

அமெரிக்காவைச் சேர்ந்த விமானத்தின் மீது அந்நாட்டு கப்பல் படையே துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து வரும் சூழலில், ஹவுதி அமைப்பினர் வர்த்தக கப்பல்களை தாக்கி வருகின்றனர். இதனை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் அப்பகுதியில் ஈடுபட்டு வருகிறது.



கனடாவில் புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகம் அடையாளம் காணும் செயலி அறிமுகம்!
[Sunday 2024-12-22 07:00]

கனடா எல்லை முகமை புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகத்தை அடையாளம் காணும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கனடாவில், நாடுகடத்தப்படுதல் அல்லது குடியேற்ற நிலை குறித்த இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் போது எல்லை முகவர்களிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டிய நிரந்தர குடியிருப்பாளர்கள், வெளிநாட்டினர் மற்றும் புகலிட கோரிக்கையாளர்களைக் கண்காணிக்க ReportIn என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



ரஷ்யாவிற்கு எதிராக வான்வழி தாக்குதல்களைத் திட்டமிட்டுள்ள உக்ரைன்!
[Sunday 2024-12-22 07:00]

ரஷ்யாவிற்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல்களைத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைன் தயாரித்துள்ள ஆயுதங்களை அதிகரித்து ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இது, உக்ரைனின் மக்களுக்கு எதிராக பயங்கர தாக்குதல்களை மேற்கொள்கின்ற ரஷ்ய இராணுவத் தளங்களை மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்துத் தாக்குவதற்கான நடவடிக்கையாக உ செலன்ஸ்கி தெரிவித்தார்.



Brexit முடிவால் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு!
[Sunday 2024-12-22 07:00]

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய 2 ஆண்டுகளில் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) ஒற்றை சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தை விட்டு வெளியேற எடுக்கப்பட்ட முடிவு, பிரித்தானியாவிற்கு முதல் இரண்டு ஆண்டுகளில் £27 பில்லியன் ($34 பில்லியன்) இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா இந்தியப் பெருங்கடல் தீவில் அடைத்துவைத்தது சட்டவிரோதம்: நீதிபதி!
[Saturday 2024-12-21 17:00]

இந்தியப் பெருங்கடல் தீவொன்றில் இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா சட்டவிரோதமாக அடைத்துவைத்ததாக நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ஆம் திகதி, கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.



ஜேர்மன் கிறிஸ்மஸ் சந்தையில் பரபரப்பு சம்பவம்: இருவர் பலி!
[Saturday 2024-12-21 17:00]

ஜேர்மனியிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையொன்றுக்குள் வைத்தியர் ஒருவர் காரைச் செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் மக்டிபேர்க்கில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய 50 வயதுடைய வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



அமெரிக்கா விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை!
[Saturday 2024-12-21 17:00]

அமெரிக்க விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. அம்மாகாணத்தின் டேடன் நகரில் அமைந்துள்ள விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும்.



பிரான்ஸ் வீதியில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட பெண்!
[Saturday 2024-12-21 17:00]

பிரான்ஸில் நாற்பது வயதுகளையுடைய பெண் ஒருவர் நிர்வாணமாக வீதியில் கட்டப்பட்டு கிடந்த நிலையில், மருத்துவக்குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் 19 ஆம் திகதி Perreux-sur-Marne (Val-de-Marne) நகரில் உள்ள Avenue du Président Roosevelt வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



உகாண்டாவில் பரவும் டிங்கா-டிங்கா வைரஸ்: 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
[Saturday 2024-12-21 07:00]

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா (Dinga Dinga) வைரஸால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுமிகள். இந்த மர்ம நோயின் அதிக தாக்கம் உகாண்டாவின் புண்டிபாக்யோ (Bundibugyo) மாவட்டத்தில் காணப்படுகிறது. இதுகுறித்து வெளியான செய்திகளின்படி, இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் ஒரு கூர்மையான நடுக்கம் உள்ளது.



கருங்கடல் கரையில் எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பேரழிவு!
[Saturday 2024-12-21 07:00]

ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட பெரும் எண்ணெய் கசிவை சரி செய்வதில் உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிகழ்வை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு சூழலியல் பேரழிவு என வர்ணித்துள்ளார். வார இறுதியில் ஏற்பட்ட மழைக் காற்றின் காரணமாக, கெர்ச் நீரிணையில் செயல்பட்ட இரண்டு பழைய எண்ணெய் கப்பல்களில் ஒன்று வெடித்து இரண்டு பாகமாக பிரிந்தது. இதனால் ஒரு கப்பல் குழும உறுப்பினர் உயிரிழந்தார்.



உக்ரைன் அகதிகளுக்காக ரூ.2.45 லட்சம் கோடி ஒதுக்கியுள்ள ஐரோப்பிய நாடு!
[Saturday 2024-12-21 07:00]

உக்ரைன் அகதிகளுக்கு செலவழிக்க ரூ.2.45 லட்சம் கோடி வரையிலான நிதியை ஐரோப்பிய பெரும் பொருளாதாரமான ஜேர்மனி ஒத்துக்கியுள்ளது. உக்ரைனில் போரின் தொடக்கத்திலிருந்து அகதிகளாக ஜேர்மனிக்கு வந்தவர்களை ஆதரிக்க ஜேர்மன் அரசு 7-8 பில்லியன் யூரோ வரை ஒதுக்கியுள்ளது.



ரகசிய கொலை: காட்டிக்கொடுத்த கூகிள் மேப் - சிக்கிய நபர்கள்!
[Friday 2024-12-20 16:00]

உலகம் முழுவதும் வழிகாட்டியாக கூகிள் மேப் செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியான கூகிள் மேப் ஒரு கொலை வழக்கில் குற்றவாளியையே கண்டுபிடிக்க உதவியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது. ஸ்பெயினில் ஒரு நபரை ரகசியமாக கொலை செய்து அப்புறப்படுத்திய நிலையில், அதை கூகிள் மேப்பில் பார்த்து கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உக்ரைனுடன் சமரசம் செய்ய தயார்: ரஷ்யா அறிவிப்பு!
[Friday 2024-12-20 16:00]

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டு காலமாக போர் நடந்து வரும் நிலையில் சமரசத்திற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது போரை தொடங்கியது.



மாணவர் விசா நடைமுறைகளை மாற்றும் அவுஸ்திரேலியா!
[Friday 2024-12-20 16:00]

அவுஸ்திரேலியா, அதிகரித்துள்ள அனைத்துலக மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அனைத்துலக மாணவர் விசா நடைமுறைகளை மற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், மாணவர் விசா விண்ணப்பங்களுக்கான நடைமுறைகளைக் கையாளும் விதத்தை அவுஸ்திரேலியா மாற்றிக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கனடா அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் செய்ய ட்ரூடோ திட்டம்!
[Friday 2024-12-20 16:00]

கனடா அமைச்சரவையில், இன்று மாற்றங்கள் செய்ய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்துள்ளதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக உள்ளாட்சித் தேர்தல்களில் ட்ரூடோவின் லிபரல் கட்சி தங்கள் முக்கிய தொகுதிகள் சிலவற்றை இழந்ததால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.



ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை ஆர்டர் செய்துள்ள ஜேர்மனி!
[Friday 2024-12-20 07:00]

ஜேர்மனி தனது நீர்மூழ்கிக் கப்பல் ஆர்டர் எண்ணிக்கையை ஆறாக (மூன்று மடங்கு) அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஜேர்மனியிடம் ஏற்கெனவே 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. 2021-ஆம் ஆண்டு மேலும் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை ஆர்டர் செய்திருந்தது. இந்நிலையில், நார்வே நாட்டுடன் கூட்டாக நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தில், ஜேர்மனி தனது நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த எண்ணிக்கையை ஆறாக (மூன்று மடங்கு) அதிகரிக்க முடிவு செய்துள்ளது.



கனேடிய நிறுவனமொன்றின் பாண் பொருட்களில் உலோகத் துகள்கள்!
[Friday 2024-12-20 07:00]

கனடாவில் பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் பாண் வகைகளை சந்தையிலிருந்து மீட்க FDA நடவடிக்கை எடுத்துவருகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கடந்த மாதம் கனேடிய உணப்பொருள் தயாரிப்பாளரான Stuyver's Bread தயாரித்த இரு பாண் பொருட்கள் மீட்பு செய்யப்பட்டுள்ளதை அறிவித்துள்ளது. இந்த இரண்டு பாண் வகைகளில் உலோகத் துகள்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளதால், இந்த மீட்பு நடவடிக்கைக்கு FDA இரண்டாவது உயர்வான Class II வகை அபாய எச்சரிக்கை அளித்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை நவம்பர் 13-ஆம் திகதி தொடங்கப்பட்டது.



20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏவுகணைகளை நவீனமயமாக்கும் திட்டத்தை அறிவித்துள்ள ஜேர்மனி!
[Friday 2024-12-20 07:00]

ஜேர்மனி, தனது Taurus KEPD 350 க்ரூஸ் ஏவுகணைகளின் சீரமைப்பு மற்றும் மேம்படுத்தல் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 2005-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இத்தகைய ஏவுகணைகளின் திறனை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படவுள்ளது. ஜேர்மன் ஆயுதப் படை Bundeswehr, டிசம்பர் 19 அன்று இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை அறிவித்தது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா