Untitled Document
April 1, 2025 [GMT]
ரஷ்ய பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்படும்: கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்!
[Monday 2025-03-31 06:00]

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விக்காக ரஷ்யா புதிய சுற்று கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை கட்டாயப்படுத்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கட்டாயப்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது தாம் கோபத்தில் இருப்பதாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விக்காக ரஷ்யா புதிய சுற்று கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை கட்டாயப்படுத்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கட்டாயப்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது தாம் கோபத்தில் இருப்பதாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

  

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிற்கு புதிய தலைமை தேவை என்று இந்த வாரம் வலியுறுத்திய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியதை அடுத்தே டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிரது.

முன்னர் ஜெலென்ஸ்கி மீது நம்பிக்கை இல்லாத ட்ரம்ப், போருக்கு காரணமே அவர் தான் என விமர்சனம் செய்திருந்தார். ஆனால் தற்போது ரஷ்ய ஜனாதிபதியின் சமீபத்திய நகர்வுகளால் உக்ரைனுக்கு ஆதரவளிக்கவே ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், ரஷ்ய பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்படும் சூழல் உருவாகும் என்றும், இதில் ரஷ்யாவிலிருந்து வரும் எண்ணெய் மீது 25 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் எனவும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் இனி அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை முன்னெடுக்கவே உக்ரைன் விரும்புவதாகவும், ரஷ்யாவை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த வழிகள் தேடுவதாகவும்,

பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுப்பதாகவும், உக்ரைனின் அடுத்தகட்ட நகர்வுகள் இதுவென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்போதைக்கு, இந்தப் போரை மேலும் நீடிக்க ரஷ்யா சாக்குப்போக்குகளைத் தேடுகிறது.

2014 முதல் புடின் விளையாடிய அதே விளையாட்டையே தற்போதும் விளையாடுகிறார் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இது அனைவருக்கும் ஆபத்தாக முடியும் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி,

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமைதியை நாடும் நமது அனைத்து உலகளாவிய பங்காளிகளிடமிருந்தும் பொருத்தமான பதில் இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையிலேயே தற்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்யா மீது தாம் கோபத்தில் இருப்பதாக பதிலளித்துள்ளார். ரஷ்யா தொடர்பில், பல நாடுகளுக்கும் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் எவரும் தங்கள் தயாரிப்புகளை, எண்ணெயை மட்டுமல்ல, எந்தவொரு பொருளையும் அமெரிக்காவிற்கு விற்க முடியாது என்றார்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராகவில்லை என்றால், மொத்த பொருளாதாரமும் முடக்கப்படும் நெருக்கடி உருவாகும் என்றே ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனேடிய மக்கள்!
[Tuesday 2025-04-01 19:00]

டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா மக்கள், அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் கனடாவில் உள்ள பல கடைகளில், கனடா தயாரிபு மது பானங்கள் காலியாகி வரும் அதேவேளை அமெரிக்க மதுபான வகைகள் விற்பனையாகாமல் அப்படியே இருக்கிறது.



குத்துச்சண்டை போட்டியில் திடீரென உயிரிழந்த வீரர்!
[Tuesday 2025-04-01 19:00]

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா தலைநகர் அக்ராவில் நடைபெற்ற போட்டியில் நைஜீரிய வீரர் கேப்ரியல், கானா வீரர் ஜான் ம்பங்கு என்பவரை எதிர்கொண்டார்.



சுவிஸில் திருட முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
[Tuesday 2025-04-01 19:00]

சுவிட்சர்லாந்தின் வோ மாகாணத்திலுள்ள வேவே நகரத்தில் கடை ஒன்றில் திருட முயன்ற 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அந்தக் கடை பூட்டியிருந்த நிலையில், சிறுவன் உள்ளே நுழைய முயன்றபோது sliding door கதவில் அவனது தலை சிக்கிக்கொண்டது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பொலிசார் அவனை கண்டுபிடித்தனர்.



நாளை முதல் கனடாவில் இந்த பொருட்கள் விலை உயரும்!
[Tuesday 2025-04-01 19:00]

ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல், வெறும் மிரட்டலாக இல்லாமல், நாளை முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, ட்ரம்பின் வரி விதிப்பால், உடனடியாக எந்தெந்த பொருட்கள் விலை உயரக்கூடும் என்று பார்க்கலாம்.



இந்த குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்: ஜெலென்ஸ்கி!
[Tuesday 2025-04-01 06:00]

ரஷ்யாவின் 2022 படையெடுப்பிலிருந்து உக்ரைனால் ஆவணப்படுத்தப்பட்ட 183,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். தீமை பெருகுவதைத் தடுக்க நீதி தேவைப்படுவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கில் உள்ள புச்சாவில் நடந்த ஐரோப்பிய அதிகாரிகளின் உச்சி மாநாட்டிலேயே ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களை தெரிவித்தார்.



பிரதமர் ஸ்டார்மரின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த ட்ரம்ப்!
[Tuesday 2025-04-01 06:00]

புதிய அமெரிக்க வரிகளிலிருந்து பிரித்தானியாவுக்கு விலக்கு வேண்டும் என்ற பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கோரிக்கையை டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். புதிய ஏற்றுமதி வரிகளை மாற்றும் புதிய வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதியை அழைத்திருந்தார்.



ஐரோப்பா முழுவதும் தீயாக பரவும் டெஸ்லா எதிர்ப்பலை: மிரட்டல் விடுத்த ட்ரம்ப்!
[Tuesday 2025-04-01 06:00]

இத்தாலியில் உள்ள எலோன் மஸ்க்கின் முதன்மையான டீலர்ஷிப்களில் ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் ஒரு டசினுக்கும் மேற்பட்ட டெஸ்லா கார்கள் எரிந்து சேதமாகியுள்ளது. ரோமில் 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாக்கிய சம்பவத்தை அடுத்து, இதுவரை அமெரிக்காவில் மட்டுமே டெஸ்லா டீலர்ஷிப்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் தற்போது ஐரோப்பாவிலும் பரவியுள்ளது. ரோமில் மொத்தமாக 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ரோமின் தீயணைப்பு சேவை தெரிவிக்கையில், சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியது.



கனடாவில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!
[Monday 2025-03-31 18:00]

கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா (Elections Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20 டொலர்களாகும். தற்போதைய கடினமான வேலை சந்தையில், இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.



அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
[Monday 2025-03-31 18:00]

அணு ஆயுத பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்காவிட்டால் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா விடுத்த மிரட்டலுக்கு, ஈரான் பகிரங்கமாக பதில் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடான ஈரான் ரகசிய அணு ஆயுத சோதனைகள் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.



இங்கிலாந்தில் ஆசிரியர்களைத் தாக்கிய சிறுவர்கள்!
[Monday 2025-03-31 18:00]

இங்கிலாந்தில் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான முன்பள்ளி சிறுவர்கள் ஆசிரியர்கள் மீது நடத்திய உடல்ரீதியான தாக்குதல்களையடுத்து, முன்பள்ளி சிறுவர்கள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சிறுவர்களின் இந்த அடாவடித்தனமானது கொவிட் காலப்பகுதியில் இருந்து தொடர்ந்து வருவதாகவும், அக்காலப்பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததே இதற்குக் காரணமெனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.



ஒன்டாரியோவில் கடும் பனிமழை: ஆயிரக் கணக்கான வீடுகளுக்கு மின் தடை!
[Monday 2025-03-31 18:00]

ஒன்டாரியோ மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் பனிமழை காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து, ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி தவிக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காற்றுப் புயல் கிழக்கே நகர்ந்ததால், மின்வெட்டு பிரச்சனை மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஒருபக்கம் நிலநடுக்கம், மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர் இராணுவம்!
[Monday 2025-03-31 06:00]

மியான்மரில் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்ட நிலநடுக்கத்தால் நாடு தத்தளித்து வரும் நிலையில், கிராமங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதற்காக, மியான்மரின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. மியான்மரின் பழமையான இனப் படைகளில் ஒன்றான கரேன் தேசிய ஒன்றியம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில், நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவ ஆட்சிக் குழு பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.



ஐரோப்பிய நாடொன்றிற்கு பயணப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
[Monday 2025-03-31 06:00]

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையை மீறி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்கிறார். தனது பயணத்தின் போது, ​​ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் பிற மூத்த ஹங்கேரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.



ரஷ்ய ஜனாதிபதி புடினின் கார் தீப்பற்றியதால் பரபரப்பு!
[Sunday 2025-03-30 17:00]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் லுபியங்காவில் அமைந்துள்ள எப்எஸ்பி தலைமையகத்திற்கு அருகில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் பாதுகாப்பு தொழில்நுட்பட மிக்க கார் ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தது.



ஒண்டாரியோ மாகாணத்திற்கு கிடைக்கும் அதிர்ஸ்டம்!
[Sunday 2025-03-30 17:00]

இந்த ஆண்டில் ஒண்டாரியோ மாகாணத்திற்கு நான்காவது முறையாக தொடர்ச்சியாக லாட்டோ மேக்ஸ் (Lotto Max) ஜாக்பாட் வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த முறை $65 மில்லியன் டாலர் பரிசு நியூமார்கெட்டில் (Newmarket) விற்பனை செய்யப்பட்ட ஒரு டிக்கெட்டிற்கு போயுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒண்டாரியோ லாட்டரி & கேமிங் கமிஷன் (OLG) வெள்ளிக்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற சீட்டிலுப்பில் இந்த வெற்றி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளது.



ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் கைது!
[Sunday 2025-03-30 17:00]

தென்கிழக்கு ஐரோப்பாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை, கொசோவோ (Kosovo) பொலிசார் கைது செய்துள்ளனர். கொசோவோவின் ஜிலான் நகரின் பெர்லெப்னிச்சே (Përlepnicë) கிராமத்தில் நேற்று இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.



இந்தோனேசியாவில் இன்று நில அதிர்வு!
[Sunday 2025-03-30 17:00]

இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.



ரஷ்யா தொடர்பில் கொந்தளித்த ஜெலென்ஸ்கி!
[Sunday 2025-03-30 07:00]

ஏறக்குறைய தினசரி ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களுக்கு உக்ரைன் இலக்காகி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளிடமிருந்து வலுவான பதிலை உக்ரைன் எதிர்பார்க்கிறது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ட்ரோன் தாக்குதல் விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை ஜெலென்ஸ்கி வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.



உணவில் பூச்சிகள்: 2,000 உணவகங்களை மூடும் ஜப்பானின் பிரபல நிறுவனம்!
[Sunday 2025-03-30 07:00]

வாடிக்கையாளர்களின் புகாரை அடுத்து ஜப்பானின் மிகப்பெரிய உணவக நிறுவனம் ஒன்று சுத்தம் செய்வதற்காக அதன் விற்பனை நிலையங்களை மூடும் முடிவுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் உணவில் எலி உட்பட பூச்சிகளைக் கண்டறிந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஜப்பானின் மிகப் பிரபலமான உணவக நிறுவனம் Sukiya. இதன் வாடிக்கையாளர் ஒருவரால் உணவில் பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தங்கள் விற்பனை நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.



ட்ரம்பின் வரி விதிப்பால் மில்லியன் கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை!
[Sunday 2025-03-30 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் நெருக்கடிக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கனடா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள வரி விதிப்பு அமெரிக்காவில் எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா