Untitled Document
May 19, 2026 [GMT]
லண்டனில் ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிப்பு!
[Saturday 2026-05-16 18:00]

தலைநகர் லண்டனில் இரு போட்டிப் போராட்டங்களுக்காக மக்கள் கூடத் தொடங்கியுள்ள நிலையில், 4,000-க்கும் மேற்பட்ட பொலிசார் சம்பவயிடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன்கள், குதிரைப் படை மற்றும் நாய்களையும் பொலிஸ் தரப்பு பயன்படுத்த உள்ளது. மட்டுமின்றி, கவச வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் லண்டனில் இரு போட்டிப் போராட்டங்களுக்காக மக்கள் கூடத் தொடங்கியுள்ள நிலையில், 4,000-க்கும் மேற்பட்ட பொலிசார் சம்பவயிடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன்கள், குதிரைப் படை மற்றும் நாய்களையும் பொலிஸ் தரப்பு பயன்படுத்த உள்ளது. மட்டுமின்றி, கவச வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  

மேலும், பல ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான காவல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என பெருநகர காவல்துறை கூறியுள்ளது. போராட்டங்கள் மட்டுமின்றி, சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் எஃப்ஏ கிண்ணம் இறுதிப் போட்டிக்காக வெம்ப்ளி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெருநகர காவல்துறையின் துணை உதவி ஆணையர் ஜேம்ஸ் ஹார்மன் தெரிவிக்கையில், இந்தக் காவல் நடவடிக்கைக்கு 4.5 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்று கூறியுள்ளார்.

மட்டுமின்றி, போராட்டக் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நேரடி முக அடையாளம் காணும் கமெராக்கள் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட உள்ளது. யூஸ்டன் மற்றும் கிங்ஸ் கிராஸ் செயின்ட் பான்கிராஸ் ரயில் நிலையங்களில் நேரடி முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

'Unite the Kingdom' பேரணியில் பங்கேற்பவர்கள் வந்து சேர வாய்ப்புள்ள இடமாகும் இது. போராட்டம் முன்னெடுக்கப்படும் பாதைகள் இரண்டையும் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.

வெம்ப்லியில் உள்ள அதிகாரிகள், போராட்டங்களை நோக்கிச் செல்லும் ஆதரவாளர்களை அடையாளம் காண்பதற்காக, FA கிண்ணம் இறுதிப் போட்டியின் CCTV காட்சிகளையும் கண்காணிப்பார்கள்.

இதனிடையே, 'யுனைட் தி கிங்டம்' நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, பதினொரு வெளிநாட்டு தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள் நாட்டிற்குள் நுழைவதுத் தடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த ப்தினொரு பேர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த, இஸ்லாமிய எதிர்ப்பு செல்வாக்குடைய வாலண்டினா கோமஸ் என்பவரும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற முதல் 'யுனைட் தி கிங்டம்' பேரணியில் இவர் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு!
[Tuesday 2026-05-19 07:00]

மத்திய கிழக்கில், அமெரிக்கா-ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டு வர புதிய முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈரான் சமீபத்தில் 14 அம்சங்களைக் கொண்ட சமாதான திட்டத்தை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை பாகிஸ்தான், அமெரிக்காவிடம் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில், அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்க ஒப்புக்கொண்டதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க புதிய அமைப்பு!
[Tuesday 2026-05-19 07:00]

ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க ஈரான் புதிய அமைப்பை அறிவித்துள்ளது. ஈரான் அரசு, உலகின் முக்கியமான கடல்சந்திகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க “பெர்ஷியன் கல்ஃப் ஸ்ட்ரெய்ட் ஆத்தாரிட்டி (PGSA)” என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. திங்கட்கிழமை (மே 18, 2026) அன்று ஈரானின் உச்ச பாதுகாப்பு குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.



சவுதிக்கு 8000 வீரர்கள், 16 போர் விமானங்களை அனுப்பிய பாகிஸ்தான்!
[Tuesday 2026-05-19 07:00]

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசு 8,000 படையினரையும் 16 JF-17 போர் விமானங்களையும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பியுள்ளது. பாகிஸ்தான்-சவுதி நாடுகளுக்கு இடையேயான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் படையினர், சவுதி அரேபியாவின் கிங் அப்துல்அசீஸ் விமான தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.



சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய ஆவணம்: அம்பலப்பட்ட உண்மைகள்!
[Monday 2026-05-18 18:00]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பதவியிறக்கம் குறித்த சர்ச்சையை, தூதரகத் தகவல் ஒன்று மீண்டும் கிளப்பியுள்ளது. அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மையமாக இருந்த அசல் ஆவணத்தை, Drop Site என்ற புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இம்ரான் கான் பதவியிறக்கப்பட்டதில் அமெரிக்காவின் பங்கு குறித்த கேள்விகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது.



ஐரோப்பிய நாடுடன் இணைந்து அணு ஆயுதப் பயிற்சியைத் தொடங்கிய ரஷ்யா!
[Monday 2026-05-18 18:00]

ரஷ்யாவும், பெலாரஸும் இணைந்து திங்களன்று கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கின. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் தொடர்ந்து வரும் ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பெலாரஸுடன் இணைந்து, தந்திரோபாய அணு ஆயுதங்களை போர்க்களத்தில் நிலைநிறுத்துவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள திங்களன்று ரஷ்யா இந்தப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.



கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை தனியாக பிரிக்கும் விவகாரம்: சமீபத்திய தகவல்!
[Monday 2026-05-18 18:00]

கனடாவிடமிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை பிரிக்கும் விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், நீதிபதி ஒருவர் அந்த மனுவை நிராகரித்துவிட்டார். கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும். ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.



அமெரிக்காவில் நண்பர்களுடன் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்!
[Monday 2026-05-18 18:00]

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தெலுங்கானா சேர்ந்த இளம்பெண் ஒருவர் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், தனது நண்பர்களுடன் சிறியரக வேனில் பயணித்த சந்தர்ப்பத்தில் குறித்த வேன் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.



எச்சரிக்கையை மீறி தைவான் செல்லும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்!
[Monday 2026-05-18 18:00]

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் செல்லும் கனேடிய அரசியல்வாதி சீன தூதரகத்தின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் சாங் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தைவான் பயணங்களுக்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், "கனடாவின் இறையாண்மையை நிலைநாட்டவே" தாம் இப்பயணத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.



புதிய விண்வெளிப் போட்டியில் ஜேர்மனி முன்னிலை!
[Sunday 2026-05-17 07:00]

ஜேர்மனி, உலகளாவிய விண்வெளி போட்டியில் முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளது. உலக விண்வெளி சந்தை தற்போது 600 பில்லியன் டொலர் மதிப்பில் உள்ளது. 2040-ஆம் ஆண்டில் இது 2.32 டிரில்லியன் டொலராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் பல தனியார் நிறுவனங்கள் ரொக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இசார் ஏரோஸ்பேஸ் (மியூனிக்), ராக்கெட் பேக்டரி ஆக்ஸ்பர்க், ஹைஇம்பல்ஸ் டெக்னாலஜிஸ் ஆகியவை ராக்கெட் சோதனையில் ஈடுபட்டுள்ளன.



ஸ்டார்மருக்கு மாற்றாக பிரதமராக போட்டியிடும் வெஸ் ஸ்ட்ரீட்டிங்!
[Sunday 2026-05-17 07:00]

பிரித்தானியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting), லேபர் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் அவர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார். “ஸ்டார்மர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறிய அவர், தற்போது அதிகாரப்பூர்வமாக தலைமைப் போட்டியில் நிற்பதாக அறிவித்துள்ளார்.



ஹார்முஸில் கப்பல்களுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தும் ஈரான்!
[Sunday 2026-05-17 07:00]

ஈரான், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை குழுத் தலைவர் எப்ராஹிம் அசீஸி, ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார். ஈரானுடன் ஒத்துழைக்கும் நாடுகளுக்கே அனுமதி வழங்கப்படும் என்றும் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



அவுஸ்திரேலியாவில் சுறா மீன் கடித்து 38 வயதுடைய நபர் உயிரிழப்பு!
[Sunday 2026-05-17 07:00]

அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரபலமான ராட்னெஸ்ட் தீவு அருகே சுறா மீன் கடித்ததில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெர்த் நகரில் இருந்து கிட்டத்தட்ட 31 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள ஹார்ஸ்ஷூ ரீஃப்(Horseshoe Reef) என்ற பகுதியில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது.



250 பில்லியன் டொலர் இழப்பீடு தர வேண்டும்: ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு!
[Sunday 2026-05-17 07:00]

பெல்ஜிய நிதிக் குழுமம் சுமார் 250 பில்லியன் டொலர் இழப்பீடு செலுத்த வேண்டும் என்று ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், ரஷ்யாவின் பல்லாயிரக்கணக்கான கோடி யூரோ சர்வதேச கையிருப்பை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது. அதில் பெரும்பகுதி பரிவர்த்தனைகள் மற்றும் நிதி வைப்புக்களை கையாளும் பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட தீர்வு நிறுவனமான யூரோகிளியரில் வைக்கப்பட்டுள்ளது.



சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு!
[Saturday 2026-05-16 18:00]

அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று சனிக்கிழமை (16) திறக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர 'தமிழர் நினைவுத் தூபி' ஒன்று திறக்கப்பட்டுள்ளது.



அக்டோபர் படுகொலையைத் திட்டமிட்டவர்: பழி தீர்த்துக் கொண்டதாக அறிவித்த இஸ்ரேல்!
[Saturday 2026-05-16 18:00]

காஸா மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அக்டோபர் 7 படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ஹமாஸ் தளபதி ஒருவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் கொல்லப்பட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸும் தெரிவித்துள்ளனர்.



டிரம்பை தொடர்ந்து சீனா செல்லும் புடின்!
[Saturday 2026-05-16 18:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீன பயணத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் மே 19ஆம் திகதி இரண்டுநாள் பயணமாக சீனா செல்லவிருப்பதாகக் கூறப்படுகின்றது.



பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்!
[Saturday 2026-05-16 07:00]

பிரித்தானியாவின் பணக்கார குடும்பமாக இந்திய வம்சாவளியினர் முதலிடம் பிடித்துள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துஜா குடும்பம், 2026-ஆம் ஆண்டுக்கான Sunday Times Rich List-ல் மீண்டும் பிரித்தானியாவின் மிகச் செல்வந்த குடும்பமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மறைந்த கோபிச்சந்த் ஹிந்துஜாவின் இடத்தை அவரது மகன்கள் சஞ்சய் (62) மற்றும் தீரஜ் (54) ஏற்றுக்கொண்டுள்ளனர்.



பிரித்தானிய அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள்!
[Saturday 2026-05-16 07:00]

பிரித்தானிய அரசியலில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 1,500 இருக்கைகளை லேபர் கட்சி இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இதற்கிடையில், பிரதமர் பதவியைப் பெற பிரித்தானியாவின் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் சூழ்ச்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. அதற்கு ஸ்ட்ரீட்டிங்கின் நண்பர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்கள்.



ஜேர்மனி காப்பாற்ற போராடிய திமிங்கலம் உயிரிழந்துவிட்டதா?
[Saturday 2026-05-16 07:00]

ஜேர்மன் கடற்கரை ஒன்றில் சிக்கியிருந்த திமிங்கலம் ஒன்று ஜேர்மன் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட விடயம் நினைவிருக்கலாம். மார்ச் மாதம், ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Niendorf என்னுமிடத்திலுள்ள கடற்கரையில், humpback whale வகை திமிங்கலம் ஒன்று ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ளதை மக்கள் கவனித்துள்ளனர்.



வெளிநாட்டில் ஆழ்கடல் குகைக்குள் சுற்றுலா: ஐரோப்பியர்கள் ஐவர் மரணம்!
[Friday 2026-05-15 17:00]

மாலத்தீவில் நடந்த ஸ்கூபா டைவிங் விபத்தில் ஐந்து இத்தாலியர்கள் மரணமடைந்ததாக, ரோமில் உள்ள வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 50 மீற்றர் ஆழத்தில் உள்ள குகைகளை ஆய்வு செய்ய முயன்றபோது, ​​அந்த ஸ்கூபா டைவிங் வீரர்கள் மரணமடைந்திருக்கலாம் என கருதப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவமானது வாவூ அட்டோலில் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூபா டைவிங் ஈடுபட்டவர்களில் நால்வர், சூழலியல் பேராசிரியர் மோனிகா மான்டெஃபால்கோன், அவரது மகள் மற்றும் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஜெனோவா பல்கலைக்கழகக் குழுவின் ஒரு பகுதி என்றே கூறப்படுகிறது.


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா