Untitled Document
October 26, 2026 [GMT]
கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்கள்: மேற்குக் கரை நகரை தரைமட்டமாக்க நெதன்யாகு உத்தரவு!
[Saturday 2026-10-24 07:00]

மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இஸ்ரேலிய ராணுவம் இடித்து தள்ளி வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் நகருக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 2 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காரில் வந்த இரண்டு பாலஸ்தீனத் தாக்குதல்தாரிகள் திடீரென சோதனை சாவடியை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு அங்கு பணியில் இருந்த இஸ்ரேலிய வீரர்களும் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர்.

மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இஸ்ரேலிய ராணுவம் இடித்து தள்ளி வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் நகருக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 2 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காரில் வந்த இரண்டு பாலஸ்தீனத் தாக்குதல்தாரிகள் திடீரென சோதனை சாவடியை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு அங்கு பணியில் இருந்த இஸ்ரேலிய வீரர்களும் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர்.

  

இந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் தாக்குதலில் குதித்த அந்த இரண்டு பாலஸ்தீனர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அத்துடன் 2 இஸ்ரேலிய வீரர்கள் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 இஸ்ரேலிய வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாக்குதல்தாரிகள் வந்த பாலஸ்தீன பகுதியை முழுமையாக தரைமட்டமாக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மேற்குக் கரை முழுவதும் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ஹெப்ரான் நகரில் உள்ள பாலஸ்தீன கட்டிடங்களை இஸ்ரேலிய படைகள் தீவிரமாக இடிக்க தொடங்கியுள்ளனர்.

ஆலிவ் பழ அறுவடை காலத்தில் பாலஸ்தீன பொதுமக்கள் மீது யூதக் குடியேறிகள் தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில் இச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஜேர்மனிக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!
[Monday 2026-10-26 16:00]

ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் ஜேர்மனிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான ஜேர்மனியின் நிலைப்பாடு அதிகரித்துவருவதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. ஜேர்மனி ஈரானுடனான ராணுவ மோதலில் வெளிப்படையாக நுழையுமானால், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமைக்காக, ஜேர்மனி தொடர்புடைய ராணுவத் தளங்கள் முதலான இடங்கள் ஈரானின் தாக்குதலின் இலக்காக கருதப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.



கனடாவில் பிணை நிபந்தனைகளை மீறிய ஆபத்தான குற்றவாளி கைது!
[Monday 2026-10-26 16:00]

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திலுள்ள கென்ட்வில் பகுதியில், தனது பிணை நிபந்தனைகளை மீறி நடந்துகொண்ட குற்றத்திற்காக ஆபத்தான பாலியல் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு 43 வயதான மேத்யூ வில்லியம் ரோஜின்ஸ் என்பவரைக் கைது செய்ததாக கென்ட்வில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ரோஜின்ஸ் பல மாகாணங்களில் குற்றப் பின்னணி கொண்ட தண்டனை பெற்ற குற்றவாளி ஆவார்.



பிரித்தானியாவை தாக்கிய புயல்கள்: இருவர் பலி, ஒருவர் மாயம்!
[Monday 2026-10-26 16:00]

ஆஸ்டன் புயலின்போது கடலில் ஒருவர் மாயமாக, பூலோ புயலின்போது இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள். பிரித்தானியாவை வெள்ளிக்கிழமையன்று ஆஸ்டன் என பெயரிடப்பட்ட புயல் தாக்கிய நிலையில், அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில், பூலோ என பெயரிடப்பட்ட புயல் ஒன்று தாக்கியது. இந்நிலையில், ஆஸ்டன் புயலின்போது இங்கிலாந்திலுள்ள டெவன் என்னுமிடத்தில் ஒருவர் கடற்கரைக்குச் சென்றுள்ளார்.



அமெரிக்காவிடமிருந்து முதற்கட்ட எஃப்-35 போர் விமானங்களைப் பெற்றது கனடா!
[Monday 2026-10-26 16:00]

அமெரிக்காவிடமிருந்து தனது முதற்கட்ட எஃப்-35 ரக போர் விமானங்களை கனடா பெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக எத்தனை அமெரிக்க விமானங்களைக் கொள்முதல் செய்வது என்பது குறித்தான ஆலோசனையில் கனடிய அரசாங்கம் நிர்வாகம் இன்னும் ஈடுபட்டுள்ளது. பொனிக்ஸ் நகரில் உள்ள விமானப்படை தளத்தில், கனடாவின் மேப்பிள் இலை இலச்சினையுடன் கூடிய எஃப்-35 போர் விமானத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன தயாரிப்பான இந்த இரண்டு போர் விமானங்களைப் பெற்றுக் கொண்டதாக ராயல் கனடிய விமானப்படை சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.



அதிர்வலைகளை ஏற்படுத்திய தேர்தல்: மாணவர்கள் போராட்டங்களால் பதவியை இழந்த ஜனாதிபதி!
[Monday 2026-10-26 07:00]

மாணவர் இயக்கத்தால் அலெக்சாண்டர் வுசிக் வெளியேற்றப்பட்டார். செர்பியாவின் நீண்டகால ஜனாதிபதியான அலெக்சாண்டர் வுசிக், தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்; இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலுக்குப் பிறகு, அந்நாட்டின் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட அலெக்சாண்டர் வுசிக், தனது அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு ஆண்டுகளாகப் போராடி வந்த மாணவர் தலைமையிலான இயக்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டார்.



வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள்!
[Monday 2026-10-26 07:00]

விளாடிமிர் புடினிடமிருந்து 9.7 பில்லியன் பவுண்டுகளைப் பெற்றுக்கொண்டு, கடத்தப்பட்ட உக்ரேனியக் குழந்தைகளுக்கான முகாம்களை அமைக்க உதவியதாக கிம் ஜோங்-உன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனைச் சேர்ந்த குழந்தைகள், விடியற்காலையில் கிம் வம்சத்தின் சிலைகளைச் சுத்தம் செய்வதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அழிப்பது பற்றிய கடுமையான உரைகளைக் கேட்பதற்கும் 4,000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள வட கொரியாவிற்கு அனுப்பப்பட்டதைப் பற்றிய திகில் கதைகளைக் கூறியுள்ளனர்.



சுமார் 600 டொலர் வரை: மில்லியன் கணக்கான அவுஸ்திரேலியர்கள் இழப்பீடு கோரலாம்!
[Monday 2026-10-26 07:00]

சமூகப் பாதுகாப்புச் சட்டத்திற்கு முரணான ஒரு முறையைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்ட பழைய நலத்திட்டக் கடன்களுக்காக, மில்லியன் கணக்கான அவுஸ்திரேலியர்கள் 600 டொலர் வரை இழப்பீடு பெறக்கூடும். வருமானப் பங்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள கடன்களைக் கொண்ட தற்போதைய மற்றும் முன்னாள் நலத்திட்டப் பயனாளிகள், வருமானப் பங்கீட்டுத் தீர்வுத் திட்டத்தின் மூலம் ஒருமுறை வழங்கப்படும் இந்தத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.



நெதன்யாகுவுக்கு எதிராக வெடித்த போராட்டம்!
[Sunday 2026-10-25 17:00]

இஸ்ரேலிய பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் போராட்டம் நேற்று (24) டெல் அவிவ் நகரில் நடைபெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் குழுக்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.



ட்ரம்ப்புக்கு எதிராக ஒபாமா முழக்கம்!
[Sunday 2026-10-25 17:00]

ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகத்தை அடையாளப்படுத்தும் "குழப்பம், கொடூரம், ஊழல் மற்றும் திறமையின்மை" ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்து, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஒஹாயோ (Ohio) மற்றும் மிச்சிகன் (Michigan) பல தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பராக் ஒபாமா பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.



சவூதியில் மீண்டும் பதற்றம்!
[Sunday 2026-10-25 17:00]

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் பல வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகளின்படி, குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.



பிரிட்டிஷ் கொலம்பியா தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை வெற்றி!
[Sunday 2026-10-25 17:00]

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண இடைத்தேர்தலில், டேவிட் ஈபி தலைமையிலான என்.டி.பி கட்சியினைத் தோற்கடித்து, லார்ன் டோர்க்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த என்.டி.பி கட்சி மீண்டும் எதிர்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டுள்ளது.



"ட்ரம்ப் கல்லறையில் இருந்து தான் கனவு காண வேண்டும்" - ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
[Sunday 2026-10-25 06:00]

அமெரிக்க கடற்படை பாரசீக வளைகுடாவில் நுழைவது என்பதை டிரம்ப் கல்லறையில் இருந்து கனவு தான் காண வேண்டும் என ஈரான் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து இருந்தார்.



கடலில் இழுத்துச் செல்லப்பட்ட மகன்கள்: பிரித்தானிய தாய் செய்த உயிர் தியாகம்!
[Sunday 2026-10-25 06:00]

கடலில் சிக்கிய மகன்களை காப்பாற்ற முயன்று உயிரை தியாகம் செய்த பிரித்தானிய தாய்க்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையர் பகுதியை சேர்ந்த லீயான் கிரிகோரி(36) என்ற தாய், பஹாமஸின் பிமினி தீவு அருகே உள்ள கடலில் குடும்பத்தினருடன் 'ஸ்னார்க்கலிங்' (Snorkeling) பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எழுந்த எதிர்பாராத ராட்சத அலையில் லீயான் கிரிகோரியின் இரண்டு மகன்களும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.



பிரான்ஸில் வெடித்த போராட்டம்!
[Sunday 2026-10-25 06:00]

பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை குண்டுகளை பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் பல இடங்களில் வன்முறையாக வெடித்தது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை குண்டுகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தினர்.



பிரான்சில் கலவரங்களில் ஈடுபடும் மாணவர்கள்: பெற்றோருக்கு சிக்கல்?
[Saturday 2026-10-24 15:00]

பிரான்சில் கலவரங்களில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படலாம். பிரான்சில் சென்ற மாதம் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் துவங்கிய நிலையில், சில இடங்களில் பெற்றோர் கோபத்துடன் தங்கள் பிள்ளைகளை வீடுகளுக்கு இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. பிள்ளைகளின் தவறுகளுக்கு, தாங்கள் தண்டிக்கப்படலாம் என்று கூட அவர்கள் அஞ்சியிருக்கலாம். விடயம் என்னவென்றால், அவர்களில் சிலர் அஞ்சியதுபோலவே, கலவரங்களில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



குவைத்தில் 2 இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!
[Saturday 2026-10-24 14:00]

குவைத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இலங்கையை சேர்ந்த 2 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. முதல் சம்பவத்தில், அலி சபா அல்-சலேமில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த ஒரு சேமிப்பு அறைக்குள் அப்பெண்ணின் சடலத்தைக் கண்டதாக குவைத் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.



வெள்ளை மாளிகை கருப்பு மாளிகையாக மாறும்: ஈரான் கடும் எச்சரிக்கை!
[Saturday 2026-10-24 14:00]

அமெரிக்கா ஈரானை தாக்கினால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கருப்பு மாளியாக மாறும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது எனக்கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடங்கிய போர் தற்போது வரை நின்றபாடில்லை. அதுமட்டுமல்லாது ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் நீரிணையையும் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை.



இடைத்தேர்தல் அச்சம்: கனேடிய பொருட்கள் மீதான வரியைத் தளர்த்தும் ட்ரம்ப்!
[Saturday 2026-10-24 14:00]

கனடாவின் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத இறக்குமதி வரியைத் தளர்த்த ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. வெள்ளை மாளிகையின் அறிவிப்பின்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஒட்டு மரப்பலகைகள், காகிதப் பொருட்கள், சில வகை இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்படவுள்ளன.



மீண்டும் வன்முறை வெடிக்குமா? - நாடு முழுவதும் 70,000 பொலிஸார் குவிப்பு!
[Saturday 2026-10-24 07:00]

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்பு பணிகளுக்காக 70,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு போராட்டங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 70000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



பிரித்தானியாவில் அபராத ரசீதை பெண் அதிகாரி மீது வீசிய நபர்: ரூ.3 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!
[Saturday 2026-10-24 07:00]

பிரித்தானியாவில் காரில் ஒட்டப்பட்ட ரசீதை பெண் அதிகாரி மீது தூக்கி வீசிய நபருக்கு ரூ.3 லட்சம் வரை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பிரித்தானியாவில் 58 வயது ஸ்டீபன் லாங் என்ற நபர் தன்னுடைய காரை பார்க்கிங் இல்லாத பகுதியில் நிறுத்தியதை அடுத்து, பெண் அதிகாரி ஒருவர் அதற்கான அபராத ரசீதை ஸ்டீபன் லாங்கின் கார் கண்ணாடியில் ஓட்டியுள்ளார்.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா