Untitled Document
October 26, 2026 [GMT]
$6.2 மில்லியன் விலைமதிப்புள்ள வாழைப்பழ கலைப்படைப்பை சாப்பிட்ட தொழிலதிபர்!
[Saturday 2024-11-30 07:00]

சீன தொழிலதிபர் ஜஸ்டீன் சன் “காமெடியன்” என்ற பிரபல கலைப்படைப்பில் இடம்பெற்ற வாழைப்பழத்தை உட்கொண்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற சோத்பியின் ஏலத்தில் வெள்ளை சுவரில் டேப்பால் ஒட்டப்பட்ட ஒற்றை வாழைப்பழத்தைக் கொண்ட “காமெடியன்” கலைப்படைப்பு விற்கப்பட்டது.


  

இதனை சீனாவில் பிறந்த தொழில்முனைவர் மற்றும் கிரிப்டோகரன்சியில் முன்னோடியான ஜஸ்டின் சன் என்பவர், காமெடியன் கலைப்படைப்பை சுமார் $6.2 மில்லியன் என்ற அதிர்ச்சி விலைக்கு வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதன் பிறகு, கலைப்படைப்பில் இடம்பெற்று இருந்த வாழைப்பழத்தை உட்கொள்ள போவதாகவும் தன்னுடைய திட்டத்தை ஜஸ்டின் சன் பொதுவெளியில் அறிவித்தார்.

இந்நிலையில், ஹாங்காங் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தொழிலதிபர் ஜஸ்டின் காமெடியன் வாழைப்பழத்தை கடித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

அத்துடன், இது மற்ற வாழைப் பழங்களை விட மிகவும் சுவையாக உள்ளது. இது உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய கலைஞர் மௌரிசியோ கட்டலன் உருவாக்கிய அசல் "காமெடியன்" படைப்பு, 2019 இல் ஆர்ட் பேசல் மியாமி பீச்சில் முதன் முதலில் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா