Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்தால் என்ன பயன் தெரியுமா?
[Monday 2026-04-20 16:00]

டீ குடிக்கும் முன் தண்ணீர் குடித்ததால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் காணலாம். பொதுவாகவே டீ என்பது அனைவராலும் விரும்படக்கூடிய ஒன்று.நம் இந்தியாவில் மட்டுமன்றி தமிழகத்திலும் இதற்கு ஒரு தனி முக்கியத்துவம் உள்ளது. சிலர் காலை எழுந்ததும் டீ குடித்துவிட்டு தான் நாளை தொடங்குவார்கள்,வேறு சிலர் காலை,மதியம்,இரவு என்று மூன்று வேலையும் டீ குடிப்பது பழக்கமாக உள்ளனர்.

ஆனால் டீ அளவுக்கு அதிகமாக குடித்தரால் உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும்.அது தெரிந்தும் பலர் அதை தம் உணவாகவே மாற்றி விடுகிறார்கள்,காலையில் எழுந்ததும் டீயை குடிக்காமல் சிலரால் இருக்க முடியாது.

நம்மில் அநேகர் காலையில் டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிக்கிறோம்,பலர் டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கிறார்கள்.

ஆனால் ஆயுர்வேதம்படி தண்ணீரை டீ அருந்துவதற்கு முன் குடிப்பது நல்லது என கூறப்படுகிறது.இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

நாம் டீ குடிப்பதற்கு ஒரு 10-15 நிமிடங்கள் முன் நாம் தண்ணீர் குடித்தால் டீயில் உள்ள அமிலத்தன்மையை பாதுகாக்க ஒரு படலம் நம் வயிற்றில் உருவாகிறது.இது நமக்கு நெஞ்செரிச்சலை தடுக்கிறது.

தண்ணீர் குடிப்பது நம் பற்களையும் பாதுகாக்கிறது.டீயில் டானின் உள்ளதால் இது நம் பற்களை எளிதில் கறையாக்கிறது.ஆனால் நாம் தண்ணீர் குடிப்பதால் நம் பற்களில் நீர் படலம் உருவாகி பற்களை கறையாக்குவரை தடுக்கிறது.

மேலும் தண்ணீர் குடிப்பதால் நமக்கு உடலில் உள்ள நீரின் அளவு சமமாக இருக்க உதவுகிறது.

நம்மில் பலர் டீ குடித்தவுடனே தண்ணீர் குடிப்பபோம் ஆனால் இது நமக்கு தீங்கை விளைவிக்கும்.ஏனென்றால் நாம் டீயை சூடாக குடித்து பின் உடனே தண்ணீர் குடித்தால் இரண்டின் வெப்பநிலைகளும் சேர்ந்து நம் பற்களின் மேலுள்ள எனாமலை பாதிக்கும்,இதனால் நமக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்தும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா