Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
[Tuesday 2026-04-21 15:00]

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் எல்லோரும் மாம்பழத்தை சாப்பிடுகிறார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா இல்லையா என்பதை நிபுணர் விளக்கத்துடன் பார்க்கலாம். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் எல்லோரும் மாம்பழம் சாப்பிடுவதில் மிகவும் ஆர்மாக இருப்பார்கள். ஆனால், நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா என்பது பலருக்கும் இருக்கும் கேள்வி. மாம்பழங்களில் இயற்கையான சர்க்கரை அதிகமாக இருப்பதால், அது இரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா என்பதை PSRI மருத்துவமனையின் உணவியல் துறைத் தலைவர் ஷாலினி பிளிஸ் விளக்குகிறார். இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஷாலினி பிளிஸ்ஸின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மாம்பழங்களைச் சரியான அளவில் சாப்பிட்டால் போதும்.

மாம்பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற உடலுக்கு நன்மை தரும் ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

இருப்பினும், மாம்பழங்களில் உள்ள ஃபிரக்டோஸ் சர்க்கரை இரத்தச் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கக்கூடும், எனவே அவற்றை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில், ஒரு நாளைக்கு அரை மாம்பழம் அல்லது ஒரு சிறிய மாம்பழத்தைச் சாப்பிடுவது நல்லது.

மாம்பழங்களைச் சாப்பிடுவதற்குச் சிறந்த நேரம் மதிய வேளையாகும். இந்த நேரத்தில் சாப்பிட்டால் தான் ​​உடல் அவற்றை எளிதில் செரித்து, சர்க்கரையின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

மாம்பழங்களை மற்ற அதிக சர்க்கரையுள்ள உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் அவசியம். நீங்கள் மாம்பழம் சாப்பிடுவதாக இருந்தால், அன்று உங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், மாம்பழச் சாறு அல்லது ஷேக்குகளில் நார்ச்சத்து குறைவாகவும் சர்க்கரை அதிகமாகவும் இருப்பதால், அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும். முழுப் பழத்தைச் சாப்பிடுவது எப்போதுமே ஒரு சிறந்த தேர்வாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா