Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீர் குடிப்பதன் பயன்!
[Wednesday 2026-04-22 16:00]

காலையில் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பதை நிறுத்திவிட்டு கொத்தமல்லி விதை நீர் குடித்தால் என்ன பயன் கிடைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம். உணவின் சுவையை அதிகரிக்க கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியாது. ஆயுர்வேதத்தில் இது ஒரு 'சிறந்த மருந்தாக' கருதப்படுகிறது. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீர் குடித்தால் அது பல பலனை அள்ளி தரும் என்று கூறப்படுகின்றது.

கொத்தமல்லி விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பண்புகள் உள்ளன, இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.

எனவே, ஒரு மாதத்திற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நன்மைகள்

தைராய்டு நோயாளிகளுக்கு கொத்தமல்லி நீர் ஒரு வரப்பிரசாதம். கொத்தமல்லியில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், குறிப்பாக மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி12, தைராய்டு ஹார்மோன் அளவைச் சமநிலைப்படுத்த உதவுகின்றன. மேலும் ஹைப்போதைராய்டிசம் அல்லது ஹைப்பர்தைராய்டிசம் இருந்தாலும், இந்த நீர் ஹார்மோன் சமநிலையின்மையைச் சரிசெய்யப் பயனுள்ளதாக இருக்கும். செரிமானத்தை மேம்படுத்துகிறது

வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் அல்லது அஜீரணத்தால் அவதிப்பட்டால், கொத்தமல்லித் தண்ணீர் மிகவும் சிறந்தது. இது உடலின் செரிமான நொதிகளைத் தூண்டி, உணவு உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. ஒரு மாதம் தொடர்ந்து உட்கொள்வது நாள்பட்ட மலச்சிக்கலையும் கூட குணப்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீர் குடிப்பதன் பயன் இவவளவா? | Benefits Of Drinking Coriander Seeds Water

கொத்தமல்லி விதைகளில் உடலின் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தும் சேர்மங்கள் உள்ளன. இது கொழுப்பை எரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. நச்சுக்கள் அகற்றப்படும்போது, ​​எடை இழப்பு மிகவும் விரைவாக இருக்கும். கொலஸ்ட்ரால் மற்றும் இதய ஆரோக்கியம்

கொத்தமல்லி நீரில் கொழுப்பைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. இவை கெட்ட கொழுப்பைக் (LDL) குறைக்கவும், நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும் உதவுகின்றன. இதனால், தமனிகளில் அடைப்புகள் படிவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா