Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
செம்பு பாத்திரத்தில் யாரெல்லாம் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா?
[Thursday 2026-04-23 16:00]

செம்பு பாத்திரங்களில் யாரலாம் தண்ணீர் குடிக்ககூடாது என்று பார்க்கலாம். பொதுவாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் அது நிறைய பேருக்கு ஆபத்தாக அமையும். நாம் எவ்வுளவு சுத்தமாக சுத்தம் செய்தாலும் அதில் உள்ள தண்ணீர் பச்சை அல்லது கருப்பு நிறமாக இருந்தால் குடிக்ககூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.இது அதில் உள்ள ஆக்சிடேஷன் அல்லது வேதிப்புரிய மாற்றங்களை குறிக்கும்.

நம்மில் பலர் செம்பு பாத்திரங்களில் பால்,தயிர்,பழச்சாறு போன்றவைகளை சேமிக்ககூடாது.இதில் உள்ள அமிலத்தன்மை நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நோயான வில்சன் என்ற மரபணு நோயால் பாதிக்கப்படுபட்டவர்களுக்கு செம்பு சேமிக்கப்படும் தன்மை உள்ளதால் அவர்கள் குடிப்பதை தவிர்க்கலாம்.இது அவர்கள் முக்கிய உறுப்புகளான கல்லீரல் மற்றும் மூளையை பாதிக்கும்.

மேலும் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் குடிப்பதை தவிர்க்கலாம் ஏனெனில் அது அதிக தாதுக்களை வெளியெற்றுவதில் அவர்களுக்கு சிரமம் இருக்கும் அது அவர்கள் இரத்தத்தில் உள்ள செம்பின் அளவை உயர்த்தி அது நிறைய அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

வயிற்றுப்புன்கள் மற்றும் செரிமான கோளாறு உள்ளவர்கள் செம்பு நீரை குடிப்பது ஆபத்தாகும்,இது குமட்டல்,வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.மேலும் சிறுக்குழந்தைகளுக்கு உணர்த்திறன் அதிகமாக உள்ளதால் அவர்களும் மருத்துவ ஆலோசனையை கேட்டு குடிப்பது நல்லது.

கர்ப்பினி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் குடிப்பதை தவிர்க்கலாம்.ஏனென்றால் இது தாயின் உடலுக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் தடை செய்கிறது.இதை குடித்தால் அவர்களுக்கு மயக்கம்,வாந்தி,தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்

இவை எல்லாம் தடுப்பதற்காக செம்பு பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்,எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் கொண்டு சுத்தம் செய்யலாம்.மேலும் நிறைய நாட்கள் தண்ணீரை சேர்த்து வைக்காமல் 6-8 மணி நேரம் மட்டுமே சேர்த்து வைப்பது நல்லது.மற்றும் அளவுக்கு அதிகமாக குடிப்பதை விட்டுவிட்டு அளவாக குடிப்பது நல்லது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா