Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மனித உடலால் எவ்வளவு வெப்பத்தை தாங்க முடியும்?
[Tuesday 2026-04-28 16:00]

மனித உடலால் எவ்வளவு வெப்பத்தை தாங்க முடியும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பல மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், மக்கள் வெப்பம் தாங்கமுடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், உணவுகளிலும், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களை அதிகமாக சார்ந்து இருக்கின்றனர்.

இவ்வாறு வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், முக்கியமான கேள்வியும் மனிதர்களுக்கு எழும்பியுள்ளது. அதாவது மனித உடலால் எவ்வளவு வெப்பத்தை தாங்கிக் கொள்ளமுடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மனித உடலானது வெப்பநிலைக்கு மட்டுமின்றி, ஈரப்பதத்திற்கும் எதிர்வினையாற்றுகின்றது. இதனை ஈரப்பத வெப்பநிலை என்று அழைக்கப்படுகின்றது.

முன்பு மனிதர்களால் 35 டிகிரி செல்சியஸ் வரையிலான ஈரப்பத வெப்பநிலையைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பியிருந்த நிலையில், உண்மையான வரம்பு சுமார் 30 லிருந்து 31 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாக தெரியவந்துள்ளது.

வியர்வை ஆவியாகி உடலை குளிர்விக்க முடியாத நிலை வரும் போது உடல் அபாய நிலைக்கு செல்கின்றது. அந்த வகையில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் போது வெப்பம் தீவிரமாகின்றது. உடல் குளிர்விக்கும் அமைப்பினையும் நிறுத்திவிடுவதால், தலைசுற்றல், குழப்பம் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனை ஏற்படும்

இதனை நாம் சரியாக அவதானித்து சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிக வெப்பம் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், முக்கிய உறுப்புகளை பாதிக்கவும் செய்கின்றது.

மூளை வீக்கமடைந்து, வலிப்பு நோய்களையும் உண்டாக்குகின்றது. இதயம் கடினமாக உழைக்கும் நிலை ஏற்படுவதால், அழுத்தம் அதிகரித்து இறப்பு கூட நிகழலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா