Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜப்பானியர்களின் இந்த உணவு உங்களுக்கு தெரியுமா?
[Saturday 2026-05-02 08:00]

ஜப்பானியர்களின் விருப்ப உணவான ரைஸ் கேக் என்று அழைக்கப்படும் மோச்சி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

மாம்பழம்

சர்க்கரை

பால்

குளுட்டினஸ் அரிசி மாவு (Glutinous rice flour)

சோள மாவு

விப்பிங் கிரீம்

முதலில் மாம்பழத்தினை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் பால் இவற்றினை கலந்து வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுதை சேர்க்கவும்.

தயார் செய்த மாம்பழ கரைசலுடன் தேவையான அளவு குளுட்டினஸ் அரிசி மாவு மற்றும் சோள மாவு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

இதனை கடாய் ஒன்றில் சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும், மாவு கெட்டியாக மோச்சி டோ பதத்திற்கு வந்ததும் தனியாக வைக்கவும்.

மோச்சியின் உள்ளே வைப்பதற்கு விப்பிங் கிரீமை நன்றாக விஸ்க் கொண்டு அடித்து தயார் செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மோச்சியினை சிறு உருண்டையாக உருட்டவும்.

அதன் நடுவே விப்பிங் கிரீம் மற்றும் சிறிய மாம்பழ துண்டை வைத்து, எல்லா பக்கமும் மாவை மடித்து மூட வேண்டும். இவ்வாறு தயார் செய்த மோச்சிகளை தட்டில் அடுக்கி ப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மேங்கோ மோச்சி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா