Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கோடை வெயிலிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
[Monday 2026-05-04 16:00]

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பாதாம் பிசினின் எண்ணற்ற நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக கோடை காலங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால், உடலை குளிர்ச்சியாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். உடலைக் குளிர்விப்பதற்கு மக்கள் பல இயற்கை மற்றும் செயற்றை பானங்களை விரும்புகின்றனர். ஆனால் செயற்கை பானங்கள் எந்தவொரு பயனும் அளிப்பதில்லை. இயற்கை பானங்கள் மட்டுமே மனிதர்களின் உடம்பை நீரோற்றமாக வைத்திருக்கின்றது.

வெப்ப காலங்களில் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனையும் அதிகமாக மக்களை தாக்குகின்றது. இவ்வாறான காலக்கட்டத்தில் ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படும் இயற்கை வைத்தியங்களில் ஒன்று தான் பாதாம் பிசின். இவை இயற்கையான மற்றும் சத்தான பொருளாகும்.

இன்றைய காலத்தில் பாதாம் பிசின் அதிகமாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், உடலை விரைவில் குளிர்விக்கவும் செய்கின்றது.

இவற்றினை எலுமிச்சை ஜுஸ், சர்பத் மற்றும் குளிர்ந்த பால் இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். நீரிழப்பு அபாயத்தை குறைப்பதுடன், வாயு, மலச்சிக்கல், அமிலத்தன்மை, செரிமான பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது.

ஆனால் இவற்றினை சரியான முறையில் உட்கொண்டால் நன்மைகளை பெற முடியும். உடல் வெப்பநிலையை சீராக வைக்கின்றது.

அதுமட்டுமின்றி ஒற்றைத் தலைவலி, சோர்வு பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது. கோடை காலத்தில் ஒரு தேக்கரண்டி ஊற வைத்த பாதாம் பிசினை சர்பத்தில் கலந்து குடிக்கலாம். மேலும் உடல் ஆற்றலுடனும் இருக்க முடியும்.

அதாவது இரவில் பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அது காலையில் ஜெல்லி போன்ற பதத்தில் இருக்கும். இதனை நாம் பருகும் இயற்கை பானத்துடன் கலந்து குடிக்கவும்.

சிறந்த ஆயுர்வேத மருந்தான இதனை எப்பொழுதும் சரியான அளவிலும், கவனத்துடன் இருக்க வேண்டுமாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா