Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வெண்டைக்காய் தயிர் குழம்பு!
[Wednesday 2026-05-06 16:00]

அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தால் ,கொளுத்தும் வெயிலில் நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையை சந்திப்பார்கள். மேலும் கோடை காலத்தில் காரசாரமாக சாப்பிடவும் பிடிக்காது. இந்நிலையில் சற்று காரம் குறைவாகவும், அதே சமயம் உடல் சூட்டை தணிக்கும் வகையிலும் ஏதாவது சுசையாக சாப்பிட வேணடும் என்று தான் ஆசையாக இருக்கும். அப்படியான நிலையில், வீட்டில் வெண்டைக்காயும், தயிரும் இருந்தால், போதும் அவற்றைக் கொண்டு அசத்தல் சுவையில் மோர் குழம்பு செய்யலாம்.வெறும் பத்தே நிமிடத்தில் அசத்தலான மோர் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் வதக்க...

வெட்டைக்காய்- 250 கிராம்

எண்ணெய் - 2 தே.கரண்டி

உப்பு - சிறிதளவு

மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

தாளிப்புக்கு...

தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உளுந்து- 1/2 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

கடுகு- 1/4 தே.கரண்டி

கடலை பருப்பு- 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு

இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - அரைவாசி (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - சிறிதளவு

மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தே.கரண்டி

பெருங்காயத்தூள் - சிறிதளவு

தயிர் - 200 மில்லி லீட்டர்

தண்ணீர் - 1 கப்

கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)

செய்முறை

வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சூடானதும்.எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்க வேண்டும்.

நன்கு வதங்கி வரும்போது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வத்து கொள்ளவும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் என தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இறுதியாக தண்ணீர் சேர்து அடித்து வைத்துள்ள தயிரில் வதக்கிய வெண்டைக்காய் மற்றும் தாளித்த பொருட்களுடன் கொத்தமல்லி சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் அமையான சுவையில் கோடைக்கு இதமான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா