Untitled Document
May 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பற்களை பாதுகாக்க இயற்கையான வீட்டு வைத்தியம்!
[Friday 2026-05-15 17:00]

பற்களை பாதுகாப்பதற்கு நம்மில் பலருக்கும் தெரியாத சில டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பல் பிரச்சனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்றது. முந்தைய காலங்களில் சற்று வயதான பின்பே பல்பிரச்சனை வந்த நிலையில், தற்போது குழந்தையிலேயே பிரச்சனை வந்துவிடுகின்றது.

சொத்தை பல், ஈறுகளில் பிரச்சனை, பல்வலி போன்ற பிரச்சனையை சந்தித்து வருகின்றோம். இதற்கு தீர்வு மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடுவது தவறான பழக்கமாகும். இந்நிலையில் மருத்துவமனை செல்லாமல் வீட்டில் இருந்தவாறு பல் பிரச்சனைக்கு சில இயற்கையான தீர்வினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

புதினா இலையினை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்களில் வலி ஏற்படாது. அதே போன்று வேப்பம் குச்சியினால் பல் துலக்கினால் பல் பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக காணப்படும்.

ஓமம், கிராம்பு, கற்பீரம் இவற்றினை தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் சிறிது நேரம் வைத்து பின்பு வாய் கொப்பளித்தால் ஈறுகளில் ஏற்படும் வீக்கம் தீர்ந்துவிடும்.

இதே போன்று கொய்யா இலைகளை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளித்தால் பல் கூச்சம் நீங்கும். மேலும் கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்த வாய் கொப்பளித்தால் பல் வலி பிரச்சனை தீரும்.

சாப்பிட்ட பின்பு ஒவ்வொரு முறையும் நன்றாக வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்க வேண்டும். மேலும் தூங்குவதற்கு முன்பு மற்றும் எழுந்த பின்பு கண்டிப்பாக பல் தேய்க்க வேண்டும்.

பற்களை தேய்க்கும் போது ஈறுகளை நன்றாக தேய்த்து தடவி கழுவ வேண்டுமாம். அவ்வாறு செய்தால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடைகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா