Untitled Document
October 26, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? - மருத்துவர்களின் எச்சரிக்கை!
[Thursday 2026-07-23 16:00]

நூடுல்ஸ் விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய வேகமான வாழ்க்கையில் சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் பலரும் செல்கின்றனர். சில இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் சில நிமிடங்களில் தயாரிக்கப்படும் நூடுல்ஸை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். ஏனெனில் இதனை சீக்கிரம் தயாரிப்பதுடன், சுவையும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கின்றது. ஆனால் அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பெரும்பாலான இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் மைதா மாவு, அதிக உப்பு, சுவையூட்டிகள், பாதுகாப்பு சேர்மங்கள், செயற்கை நிறம், குறைந்த நார்ச்சத்து, மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது.

நூடுல்ஸில் அதிக கலோரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இருப்பதால் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

இதில் அதிக சோடியம் காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய நோய் அபாயம் அதிகரிக்கின்றது.

மைதாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்துவதுடன், டைப் 2 நீரிழிவு அபாயத்தினையும் அதிகரிக்கின்றது.

நூடுல்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படும்.

குழந்தைகளுக்கு புரதம், வைட்டமின், தாதுக்கள் மிகவும் முக்கியமாகும். ஆனால் நூடுல்ஸினை அடிக்கடி சாப்பிடும் போது இந்த சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்காமல் வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

அதிக உப்பு உட்கொள்வதால் சிறுநீரகம் கூடுதலாக வேலை செய்யும் நிலை ஏற்படுகின்றது. ஆகவே நீண்ட காலம் இவ்வாறு வேலை செய்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.

நூடுல்ஸ் வயிறு நிரம்பிய உணர்வை அளித்தாலும், உடம்பிற்கு தேவையான மற்றும் முழுமையான சத்துக்களை வழங்குவதில்லை. ஆகவே சோர்வு மற்றும் சத்துக்குறைவு ஏற்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா