Untitled Document
October 26, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கிராமத்து ஸ்டைல் மட்டன் மிளகாய் தொக்கு: எப்படி செய்யனும் தெரியுமா?
[Sunday 2026-10-25 17:00]

சுவையான மட்டன் மிளகாய் தொக்கு கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.

தற்போது மட்டன் மிளகாய் தொக்கு கிராமத்து ஸ்டைலில் எவ்வாறு சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மட்டன் - ½ கிலோ

சின்ன வெங்காயம் - 1 கப்

பச்சை மிளகாய் - 8

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்

மல்லித்தூள் - 1½ டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

சோம்பு - ½ டீஸ்பூன்

சீரகம் - ½ டீஸ்பூன்

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 4

கறிவேப்பிலை - 2 கொத்து

கடலை எண்ணெய் - 3 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

முதலில் வாங்கிட்டு வந்த மட்டனை கழுவி அதில் மஞ்சள் தூள், சிறிது இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான அளவு பச்சை மிளகாயை எடுத்து அதை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

அது நன்கு வதக்கிய பின் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மசாலா பொருட்கள் மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதை நன்கு வதக்கிய பின் அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

இவை அனைத்தும் நன்கு வதக்கியவுடன் நாம் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். மட்டன் நன்கு வெந்தவுடன் அதில் மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் கிளறி விடவும்.

இவை அனைத்தும் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் வரை நன்றாக வதக்கவும் பின் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கிராமத்து ஸ்டைல் மட்டன் மிளகாய் தொக்கு ரெடி.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா