Untitled Document
June 4, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
[Thursday 2025-03-20 19:00]

தெலுங்கு சினிமாவில் நான் தசாப்தங்களாக நடித்து வருபவர் சிரஞ்சீவி. முன்னணி நடிகரான இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்திய நாட்டின் உயரிய விருதுகளாக பத்ம விபூஷன், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்திய திரைப்படத் துறையில் 537 பாடல்களுக்கு 24 ஆயிரம் வித்தியாசமான நடன அசைவுகளை ஆடியிருப்பதாக இவருக்கு கின்னஸ் சாதனை கொடுக்கப்பட்டது. சினிமாவை தவிர்த்து அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் திரைப்படத்துறை மற்றும் சமூகத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில் முதல் இந்தியராக இந்த விருதை பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சிரஞ்சீவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிரஞ்சிவி தம்பி மற்றும் ஆந்திர துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாண், நடிகர் சாய் தரம் தேஜ், சத்யா உள்ளிட்ட நடிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



திருமணத்திற்கு முன் அந்தமான் செல்லும் சாய் தன்ஷிகா!
[Wednesday 2025-06-04 18:00]

நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக இவர் நடித்த மதகஜராஜா படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது.



சூர்யா 45 எப்படி இருக்கும்? - பிரபலம் உடைத்த ரகசியம்!
[Wednesday 2025-06-04 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. கங்குவா படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.



மணிரத்னம் சினிமா துறை பற்றி சொன்ன விஷயம்!
[Wednesday 2025-06-04 07:00]

இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி இருக்கும் தக் லைப் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் தான் ஷூட்டிங் வருவேன் என கூறியதால் தான் இயக்குனர் சந்தீப் ரெட்டி அவரை நீக்கிவிட்டதாக தகவல் பரவியது.



மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!
[Wednesday 2025-06-04 07:00]

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்ன பிரச்சனை நன்றாக சம்பாதிப்பார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு உள்ளது. ஆனால் எல்லா பிரபலங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைவது இல்லை, சினிமாவில் சாதித்தாலும் சொந்த வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் தவிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நிழல்கள் படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கியவர் ராஜசேகர்.



"மன்னிப்பு கேட்க முடியாது" - கமல் அதிரடி!
[Tuesday 2025-06-03 19:00]

நடிகர் கமல்ஹாசனின் தக் லைப் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் நிலையில் கர்நாடகாவில் அதற்கு தடை போடப்பட்டு இருக்கிறது. தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கமல் கூறியதற்கு மன்னிப்பு கேட்டால் தான் தக் வெளியிட விடுவோம் என சில அமைப்புகள் அங்கே போராட்டம் நடத்தின. தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



கூலி படத்தை மாபெரும் விலைக்கு வாங்க காத்திருக்கும் நிறுவனங்கள்!
[Tuesday 2025-06-03 19:00]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஷோபின் ஷபீர், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



அப்பாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் நடிகர் விஜய் வைத்திருப்பது இவரை தானா?
[Tuesday 2025-06-03 19:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இது அவருடைய கடைசி படமாகும். இதன்பின், முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார். ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாணி தியோல், ப்ரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.



நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்!
[Tuesday 2025-06-03 06:00]

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் காதலித்து வருவதாகவும் ஒன்றாக சேர்ந்து வாழ வீடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சில வாரங்களுக்கு முன்பு செய்தி வந்தது. அவருடன் இருக்கும் போட்டோக்களை சமந்தா தொடர்ந்த்து இன்ஸ்டாவில் வெளியிட அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.



விஜய் டிவியில் அடுத்தடுத்து களமிறங்கும் 3 புதிய தொடர்கள்!
[Tuesday 2025-06-03 06:00]

சீரியல்கள் என்றால் சன் டிவி தான் ராஜா. ஆனால் இப்போது அவர்களையே திக்குமுக்காட வைக்கும் வகையில் விஜய், ஜீ தமிழ், கலைஞர் என பல தொலைக்காட்சிகளில் நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மக்களும் இப்போது எல்லா தொலைக்காட்சி சீரியல்களுக்கும் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.



கர்நாடகாவில் குறையாத எதிர்ப்பு: நீதிமன்றத்திற்கு சென்ற கமல்!
[Monday 2025-06-02 18:00]

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர் கொடி தூக்கின.



தக் லைஃப் படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கிய சம்பளம்!
[Monday 2025-06-02 18:00]

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு முதன் முதலில் நடித்த திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மணி ரத்தினத்துடன் சிம்பு கூட்டணி அமைத்திருக்கும் படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் ஹாசனுடன் சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.



"வடசென்னை 2": அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்!
[Monday 2025-06-02 18:00]

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பது வடசென்னை 2 படத்திற்காக தான். 2018ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என பலரும் நடித்திருந்தனர்.



மதயானைக் கூட்டம் இயக்குனர் திடீர் மரணம்!
[Monday 2025-06-02 06:00]

மதயானைக் கூட்டம் பட புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இன்று திடீர் மாராடைப்பால் மரணம் அடைந்தது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ராவனக்கோட்டம் என்ற படத்தை இரண்டு வருடங்களுக்கு முன் இயக்கி இருந்தார். அதில் சாந்தனு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



"எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க" - தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு!
[Monday 2025-06-02 06:00]

நடிகர் தனுஷ் பற்றி அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் பாடகி சுசித்ரா கூறிய ஒரு குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு நடிகர் தனுஷ் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்து இருக்கிறார். எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க. என்ன negativity வேணும்னாலும் spread பண்ணுங்க. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பு என்னைப்பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க.



"தக் லைஃப்" படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா வாங்கிய சம்பளம்!
[Sunday 2025-06-01 17:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இப்படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா