Untitled Document
April 17, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயிலர் படத்தை தொடர்ந்து சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா!
[Tuesday 2025-04-08 18:00]

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4, ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். நடிப்பை தாண்டி நடனத்திலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா. ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

அதை தொடர்ந்து, ஸ்ட்ரீ 2' படத்தில் 'ஆஜ் கி ராத்' என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார். தற்போது இவருடைய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், அடுத்து தமன்னா ஒரு படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இப்படத்தின் இரண்டாம் பாகமான ரெய்டு 2 திரைப்படம் வரும் மே 1 - ம் தேதி வெளியாக உள்ளது. திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

தற்போது இந்த படத்தில் சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com



பிரபல நடிகர் படத்தில் பாடிய சிம்பு!
[Wednesday 2025-04-16 18:00]

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார். தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. நடிப்பை தாண்டி சில படங்களில் பாடியும் வருகிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த டிராகன் படத்திலும் ஒரு பாடல் பாடியது குறிப்பிடத்தக்கது.



இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது!
[Wednesday 2025-04-16 18:00]

இந்த பெயரை கேட்டதுமே முதலில் நமக்கு நியாபகம் வருவது இவர் விஜய் டிவி Product என்பது தான். ஒரு தொகுப்பாளினியாக தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வந்தவரிடம் இப்போது என்ன நிகழ்ச்சி கொடுத்தாலும் அசால்டாக செய்து முடிக்கும் திறமை கொண்டுள்ளார்.



குட் பேட் அக்லீயில் அஜித் மகனாக நடிக்க மறுத்த இளம் நடிகர்!
[Wednesday 2025-04-16 06:00]

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. இந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக பிரியா வாரியர் அதிகம் பேசப்படும் நடிகையாக மீண்டும் மாறி இருக்கிறார்.



இந்த வேலைக்கு செல்ல தான் விரும்பினாராம் அனிகா சுரேந்திரன்!
[Wednesday 2025-04-16 06:00]

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவர் மகளாக நடித்து இருக்கிறார். தற்போது அவர் வளர்ந்துவிட்ட நிலையில் ஹீரோயினாகவும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வந்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய ரோலில் நடத்து இருந்தார்.



பூஜையுடன் தொடங்கிய நடிகர் யோகி பாபுவின் அடுத்த படம்!
[Tuesday 2025-04-15 19:00]

நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக 'போட்' படத்தில் நடித்துள்ளார். இவர் கைவசம் தற்போது Medical Miracle, ராஜா சாப் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.



சிம்பு படத்தில் இணைந்த மக்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்!
[Tuesday 2025-04-15 19:00]

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார். தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 - வது படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.



சூரியுடன் மோதும் சந்தானம்!
[Tuesday 2025-04-15 19:00]

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, அது போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக மாற்றியுள்ளது.



AI பற்றி காட்டமாக பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்!
[Tuesday 2025-04-15 06:00]

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது AI பற்றி அளித்த பேட்டி வைரல் ஆகி இருக்கிறது.



பாரட்டுக்களைக் குவித்த “அம் ஆ” மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ரிலீஸ் தேதி!
[Tuesday 2025-04-15 06:00]

Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதிபதி தனது சமூக வலைத்த்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் படம் வெற்றி பெற , படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



ஹிந்தி படத்தில் டாப் நடிகருடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்!
[Monday 2025-04-14 18:00]

நடிகை கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் அவரது நடிப்பிற்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதையெல்லாம் அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் கடின உழைப்பு போட்டு படங்கள் நடித்து வந்தார். அப்படி அவர் தொடர்ந்து நடித்து படங்கள் நடித்து ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்தது மகாநதி என்ற படத்தின் மூலம் தான்.



நடிகர் சல்மான் கானுக்கு வந்த புது கொலை மிரட்டல்!
[Monday 2025-04-14 18:00]

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கடந்த வருடத்தில் இருந்தே அவருக்கு அரசு Y+ பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர் வீட்டின் மீது கடந்த வருடம் ஏப்ரலில் சில மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். லாரன்ஸ் பிஷ்நோய் என்ற கேங்ஸ்டர் தான் தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது. அதனால் அவருக்கு 11 காவலர்கள் மற்றும் கமாண்டோக்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.



குட் பேட் அக்லி பட வெற்றிக் குறித்து அஜித் சொன்ன ஒரே விஷயம்!
[Monday 2025-04-14 18:00]

தமிழ் சினிமாவில் செம மாஸாக கெத்தாக ரசிகர்களின் அலைமோதும் கூட்டத்திற்கு நடுவில் ஒளிபரப்பாகி வருகிறது குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் தயாராக இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் என பலர் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் சிம்ரன், பிரியா வாரியர் என ஸ்பெஷலாக பார்க்க வேண்டிய விஷயங்கள் இதில் உள்ளது.



ஜனநாயகன் லுக்கில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்!
[Monday 2025-04-14 06:00]

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துவிட்டார். அதனால் அவர் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம் என தெரிவித்து இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்த படம் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.



நகைக்கடை திறப்பு விழாவுக்கு அப்படி ஒரு உடையில் வந்த ஸ்ருஷ்டி டாங்கே!
[Monday 2025-04-14 06:00]

நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. படங்களில் நடித்து புகழ்பெற்றதை விட அவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாப்புலர் ஆனது தான் அதிகம். ஸ்ருஷ்டி படங்களில் எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார்.



3 படங்களை பார்க்க ஆவலுடன் இருக்கும் இயக்குநர் ராஜமவுலி!
[Sunday 2025-04-13 18:00]

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் பிரம்மாண்டத்தை காட்டி வெற்றி இயக்குநராக வலம் வருகிறார்.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா