Untitled Document
April 29, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
குட் பேட் அக்லீ முதல் நாளில் பிரம்மாண்ட வசூல்!
[Friday 2025-04-11 06:00]

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்தை எப்படி எல்லாம் திரையில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்களோ அதை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் பலவிதமான கெட்டப்புகளில் அஜித் திரையில் தோன்றுவது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது குட் பேட் அக்லீ படம் முதல் நாள் செய்திருக்கும் வசூல் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் இந்த படம் முதல் நாளில் ரூபாய் 2.5 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

மேலும் பாசிட்டிவ் விமர்சனம் வருவதால் படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் மிகப்பெரிய அளவு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com



சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகர்!
[Tuesday 2025-04-29 17:00]

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் 3 வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ரோஹத். இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் ஏப்ரல் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அசாமில் உள்ள கர்பாங்கா காட்டில் ஒரு நீர்வீழ்ச்சி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.



"இதை சொன்னால் என்னை கொன்று விடுவார்கள்" - பிரபல நடிகர் குறித்து நடிகை சமந்தா!
[Tuesday 2025-04-29 17:00]

நடிகை சமந்தா ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர். கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார். பின் தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த சமந்தா, இன்று ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியிருந்தார்.



டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் விமர்சனம்!
[Tuesday 2025-04-29 06:00]

சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் இந்த படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி முழு படத்தையும் பார்த்த லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ்குமரன் படத்தை பற்றி ட்விட்டரில் விமர்சனம் கூறி இருக்கிறார்.



பாகிஸ்தான் ஆதரவாக பேசினேனா? - விஜய் ஆண்டனி வெளியிட்ட புது அறிக்கை!
[Tuesday 2025-04-29 06:00]

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு பிறகு இந்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிந்து நதியில் தண்ணீர் நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நேற்று வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் மக்களும் அமைதியை விரும்புகிறார்கள், அவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிக்கை விட்டு இருந்தார்.



பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்!
[Monday 2025-04-28 18:00]

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது கார் ரேஸில் ஈடுபட்டு உலக அளவில் பல ரேஸ்களில் ஜெயித்து வருகிறார். அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.



மீண்டும் ஒரு குழந்தையை தத்தெடுத்த நடிகை ஸ்ரீலீலா!
[Monday 2025-04-28 18:00]

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.



சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் சூப்பர் ஹிட் படங்கள்!
[Monday 2025-04-28 18:00]

கோலிவுட்டில், ஏற்கனவே வெளியாகி ஹிட் கொடுத்த படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது தற்போது வழக்கமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றான சச்சின் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.



விருது வாங்க குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பிய அஜித்!
[Monday 2025-04-28 06:00]

நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு திரும்பிய நிலையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியை பார்க்க சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் வந்து இருந்தார். அங்கு அவர் சிவகார்த்திகேயன் மற்றும் அவர் குடும்பத்தை சந்தித்த ஸ்டில்கள் வைரல் ஆனது.



"எஸ்.டி.ஆர் 49" படப்பிடிப்பு குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்!
[Monday 2025-04-28 06:00]

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல் ஹாசன், த்ரிஷா மற்றும் சிம்பு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அடுத்து பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது.



நடிகை சில்க் ஸ்மிதா இவரைத்தான் திருமணம் செய்ய இருந்தாரா?
[Sunday 2025-04-27 18:00]

காந்த கண்ணழகி, திராவிட பேரழகி, கனவுக்கன்னி என பல பெயர்களை கொண்டு ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. வினு சக்கரவர்த்தியின் கண்ணில் பட சினிமாவில் மளமளவென படங்கள் பெற்று டாப் நாயகியாக வலம் வந்தார். ஒருகாலத்தில் இவரது கால்ஷீட் கிடைத்தால் போதும் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போது உள்ள தயாரிப்பாளர்களின் நம்பிக்கையாக இருந்தது.



வசூல் வேட்டை செய்துவரும் விஜய்யின் சச்சின்!
[Sunday 2025-04-27 18:00]

நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனது. ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான சச்சின் படத்தில் விஜய்யுடன் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் என பலர் நடிக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.



காஷ்மீர் தாக்குதல் பற்றி பேசிய நடிகர் விஜய் ஆண்டனி!
[Sunday 2025-04-27 18:00]

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, எல்லைகள் மூடல் என பல நடவடிக்கைகள் அரசு எடுத்து இருக்கிறது. சிந்து நதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் வெளிப்படையாகவே போர் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.



புற்றுநோயுடன் போராடும் நடிகருக்கு பெரிய தொகையை கொடுத்த KPY பாலா!
[Sunday 2025-04-27 07:00]

விஜய் டிவி காமெடி ஷோக்கள் மூலமாக பிரபலம் ஆனவர் பாலா. அவர் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு கஷ்டத்தில் இருக்கும் பலருக்கும் உதவி செய்து வருகிறார். மேலும் தற்போது ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரபல காமெடி நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடக்க கூட முடியாத நிலையில், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.



அடுத்த படத்தை அறிவித்த சூர்யா!
[Sunday 2025-04-27 07:00]

நடிகர் சூர்யா அடுத்து ரெட்ரோ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மே 1ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில் தற்போது படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணிகளில் தீவிரமாக படக்குழு இறங்கி இருக்கிறது. இன்று ஹைதராபாத்தில் ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கலந்துகொண்டார்.



2 நாள் முடிவில் வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்!
[Saturday 2025-04-26 16:00]

நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக இருப்பவர். காமெடி நடிகராக தன்னை நிரூபித்த வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் தனது சீரியஸான பக்கத்தையும் காட்டி இருந்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முழுமையான காமெடி ரோலில் மீண்டும் வடிவேலு நடித்துள்ள படம் தான் கேங்கர்ஸ். மதகஜராஜா வெற்றிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றுள்ளது.


 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா