Untitled Document
June 2, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
'சிம்பு இல்லனா நான் இல்ல' - சிம்பு குறித்து பேசிய சந்தானம்!
[Tuesday 2025-05-06 18:00]

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்கள் ஒருவர். மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவர், தற்போது சிம்புவின் 49வது படத்தில் மீண்டும் நகைச்சுவை நடிகராக களமிறங்கியுள்ளார்.

அடுத்ததாக சந்தானம் நடிப்பில் DD next level திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் சிம்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அப்போது சிம்பு குறித்து சந்தானம் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

அவர் கூறியதாவது "சிம்பு சார் இல்லனா, இன்னைக்கு நான் இல்ல அவருடைய காதல் அழிவதில்லை படத்துல நான் பின்னாடி நிற்கிற ஒருவனாக நடித்து இருப்பேன். அதுல என்னுடைய நடிப்பை கவனித்து எனக்கு மன்மதன் படத்தில் வாய்ப்பை கொடுத்தாரு.

அந்த படத்தோட முதல் நாள் படப்பிடிப்பில், 'உங்க இன்ட்ரோ சீன்ல பில்டப் வைக்கிறோம்', கண்டிப்பா மக்கள் கைதட்டுவாங்க என்று சொன்னாரு. அன்னைக்கு எனக்கு கைத்தட்டல் வரணும்னு பண்ணியவர் இன்னைக்கும் அதே விஷயத்தை பண்றாரு. ஒவ்வொரு நேரமும் எனக்காக மற்றவர்களிடம் சில விஷயங்கள் யோசிக்க சொல்லுவாரு. எப்போதுமே அவர் பின்னாடி நான் இருப்பேன்" என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



தக் லைஃப் படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கிய சம்பளம்!
[Monday 2025-06-02 18:00]

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு முதன் முதலில் நடித்த திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மணி ரத்தினத்துடன் சிம்பு கூட்டணி அமைத்திருக்கும் படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் ஹாசனுடன் சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 5ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.



"வடசென்னை 2": அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்!
[Monday 2025-06-02 18:00]

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பது வடசென்னை 2 படத்திற்காக தான். 2018ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என பலரும் நடித்திருந்தனர்.



மதயானைக் கூட்டம் இயக்குனர் திடீர் மரணம்!
[Monday 2025-06-02 06:00]

மதயானைக் கூட்டம் பட புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இன்று திடீர் மாராடைப்பால் மரணம் அடைந்தது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ராவனக்கோட்டம் என்ற படத்தை இரண்டு வருடங்களுக்கு முன் இயக்கி இருந்தார். அதில் சாந்தனு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



"எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க" - தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு!
[Monday 2025-06-02 06:00]

நடிகர் தனுஷ் பற்றி அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் பாடகி சுசித்ரா கூறிய ஒரு குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு நடிகர் தனுஷ் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்து இருக்கிறார். எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க. என்ன negativity வேணும்னாலும் spread பண்ணுங்க. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பு என்னைப்பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க.



"தக் லைஃப்" படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா வாங்கிய சம்பளம்!
[Sunday 2025-06-01 17:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இப்படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.



"இது தான் என் கடைசி படம்" - ஷாக் கொடுத்த அமீர் கான்!
[Sunday 2025-06-01 17:00]

நடிகர் அமீர் கான் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது கடந்த சில காலமாக நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. அடுத்து அவர் நடித்து இருக்கும் Sitaare Zameen Par வரும் ஜூன் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அது நல்ல வசூலை ஈட்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.



தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா?
[Sunday 2025-06-01 17:00]

இந்தியாவின் பணக்கார நடிகர் என்றால் அது ஷாருக்கான் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தென்னிந்தியாவில் பணக்கார நடிகர் யார் என்றால் அது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 3.572 கோடி என கூறப்படுகிறது. அந்த ஹீரோ வேறு யாருமில்லை டோலிவுட் கிங் நாகார்ஜுனாதான். தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.



மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் - ஐஸ்வர்யா!
[Sunday 2025-06-01 08:00]

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே விவாகரத்தை அறிவித்துவிட்டனர். அதற்கு பிறகு அவர்கள் தங்கள் மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்களை மட்டும் வெளியிட்டு வந்தனர். தனுஷ் தனது பட விழாக்களுக்கு மகன்களை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். அதே போல ஐஸ்வர்யாவும் அவர்களை பல நிகழ்ச்சிகளுக்கு கூட்டி சென்றார்.



கையில் ஆஸ்கார் விருதுடன் மகாராஜா இயக்குனர்: வீட்டுக்கே அழைத்த ஹாலிவுட் பிரபலம்!
[Sunday 2025-06-01 08:00]

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் ஆனது. அது மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது. இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும் கிடைத்தது.



'தக் லைப்' கர்நாடகாவில் தடை!
[Saturday 2025-05-31 17:00]

நடிகர் கமல்ஹாசன் கன்னடம் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக அரசியல்வாதிகள் பலரும் கூறிய நிலையில், 'மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது' என கமல் உறுதியாக கூறிவிட்டார். 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என தான் அவர் பேசியது தான் பிரச்சனைக்கு காரணம். "நான் எதுவும் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன்" என அவர் உறுதியாக கூறிவிட்டார்.



நடிகைகள் என்றால் பொம்மையா? - கடுப்பான நடிகை நித்யா மேனன்!
[Saturday 2025-05-31 17:00]

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து சினிமாவில் கலக்கியவர் நடிகை நித்யா மேனன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாக கலக்கிய நடிகைகளின் லிஸ்டில் இவரும் ஒருவர். 180 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தனுஷின் திருச்சிற்றம்பலம் என்ற படத்திற்காக சிறந்த நாயகிக்கான விருது எல்லாம் பெற்றார்.



சிம்பு உடனான காதல் திருமணம் உண்மையா? - பிரபல நடிகை பதில்!
[Saturday 2025-05-31 17:00]

சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு என்ட்ரி கொடுத்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கலக்குபவர் தான் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் ஜுன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கான புரொமோஷனும் சூடு பிடிக்க நடந்து வருகிறது.



ஆர்த்தி பிரச்சனைக்கு நடுவில் ரவி மோகன் தொடங்கும் புது விஷயம்!
[Saturday 2025-05-31 07:00]

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகியோரின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இரண்டு தரப்பும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். அது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நீதிமன்றம் அறிக்கை வெளியிட தற்போது தடை போட்டிருக்கிறது. அதனால் தற்போது இருவரும் அமைதி காத்து வருகின்றனர்.



மன்னிப்பு கேட்க முடியாது என கூறிய கமல்: ஆதரவாக வந்த நடிகர் சங்கம்!
[Saturday 2025-05-31 07:00]

நடிகர் கமல் சமீபத்தில் தக் லைப் படத்தின் விழாவில் பேசும்போது 'தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது' என கூறி இருந்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் பற்றி பேசும்போது அவர் அதை கூறினார். கமல் பேசியதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு எழுந்து இருக்கிறது. முதலமைச்சர் சித்தராமையா உட்பட பலரும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.



சந்திரமுகி படத்திற்கு முதலில் தேர்வானது ரஜினி இல்லையா?
[Friday 2025-05-30 18:00]

நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி. கடந்த 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பி.வாசு அவர்கள் இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, வினீத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா