Untitled Document
May 18, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
ரவி மோகன் படங்களை தயாரித்து ரூ. 100 கோடி நஷ்டமடைந்த அவரது மாமியார்!
[Sunday 2025-05-18 18:00]

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து, பாடகி கெனிஷா என்பவருடன் பழகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இதுகுறித்து ரவி மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில், " என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், என்னை தங்க முட்டையிடும் வாத்தாக பயன்படுத்தினர்" என கூறியிருந்தார். இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரவி மோகனின் மாமியாரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், "கடந்த 2007ம் ஆண்டு 'வீராப்பு' எனும் படத்தை தயாரித்தேன், அப்படம் வெற்றியை கொடுத்தது. அதன்பின், தொலைக்காட்சியில் மட்டுமே கவனம் செலுத்தினேன். 2017ல் ரவி மோகன், பட தயாரிக்க வேண்டும் என்றார்.

அந்த ஆண்டு, ரவி மோகன் நடிக்க நான் தயாரித்த படம் 'அடங்கமறு'. அப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ரவி மோகன் வற்புறுத்தியதால் தொடர்ந்து படம் தயாரித்தேன்.

இதன்பின், அடங்கமறு, பூமி, சைரன் என மூன்று திரைப்படங்களை ரவி மோகனை வைத்து தயாரித்த. மூன்றும் தோல்வியடைந்தது. இதற்காக ரூ. 100 கோடி கடன் வாங்கினேன். அதில், 25 சதவீதத்தை ரவி மோகனுக்கு சம்பளமாக வழங்கினேன். இதற்காக அனைத்து ஆதாரமும் உள்ளது.

இப்போது ஏன் கடனுக்காக நான் அவரை பொறுப்பேற்க சொன்னதாக புகார் கூறுகிறார். அதில் உண்மை இல்லை. நான் அவரை நாயகன், மாப்பிள்ளையாக மட்டுமின்றி, என் மகனாகவே பார்த்தேன். பல கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மனா உளைச்சலை நான் மட்டுமே ஏற்றேன். படம் தோல்வியடைந்ததும், ஆட்டுத்த படம் நடித்து தருவதாக மட்டுமே ரவி மோகன் கூறினார்.

ஆனால், கடனுக்கு பொறுப்பேற்கவில்லை. அவர் கூறியபடி, கடனுக்காக அவரை பொறுப்பெடுக்க வைத்ததற்கான ஆதாரத்தை அவர் காட்டட்டும். இன்று வரை அவரை நான் நாயகனாக மட்டுமே பார்க்கிறோம், ரசிக்கிறோம்.

இது நீங்கள் எப்போதும் அலைக்கும், இந்த அம்மாவின் ஆசை. என் பேர குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, என் மகளும், மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும். என் மீது மாமியார் சித்திரவதை என்கிற குற்றசாட்டை சுமத்தாதீர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



வாடிவாசல் படத்தின் மீதுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு!
[Sunday 2025-05-18 18:00]

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று வாடிவாசல். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது. சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் இப்படம் உருவாகவிருப்பதால், எப்போது இப்படத்தை திரையில் பார்ப்போம் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.



முன்னணி கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் நடிக்க விரும்பும் சிம்பு!
[Sunday 2025-05-18 07:00]

நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் உடன் தக் லைப் படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கமல், சிம்பு, மணிரத்னம், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிம்பு இதற்கு முன் நடித்த பத்து தல படத்தில் வரும் 'நீ சிங்கம் தான்' பாடல் தனது பேவரைட் என்றும், அதை அதிகம் கேட்டு வருவதாகவும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் கூறி இருந்தார்.



69 வயது நடிகருக்கு ஜோடியாக நயன்தாரா!
[Sunday 2025-05-18 07:00]

நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படம் மட்டுமின்றி மேலும் அரை டஜன் படாமல் அவர் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது சிரஞ்சீவி ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதை வீடியோ வெளியிட்டு படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது.



எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கமல்ஹாசனின் தக் லைஃப் பட டிரைலர்! Top News
[Saturday 2025-05-17 18:00]

மணிரத்னம் படம் என்றாலே மக்களிடம் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும், அவருடன் கமல்ஹாசன் இணைகிறார் என்றால் சொல்லவே தேவையில்லை. பல வருடங்களுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப்.



அஜித் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ரஜினிகாந்த்!
[Saturday 2025-05-17 18:00]

இந்திய சினிமா ரசிகர்களின் மனதை ஆழும் நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது படம் என்றாலே இந்தியா முழுவதும் கொண்டாட்டம் தான், இப்போதும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் நடிகராக உள்ளார். ரஜினி நடிப்பில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது.



சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் முதல் நாள் வசூல்!
[Saturday 2025-05-17 18:00]

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர். மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான இவர் இதன்பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவர் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் நேற்று வெளியானது.



அஜித் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
[Saturday 2025-05-17 05:00]

நடிகர் அஜித்துக்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. கடந்த மாதம் ரிலீஸ் ஆன குட் பேட் அக்லீ படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அஜித் தற்போது கார் ரேஸில் முழுமையாக கவனம் செலுத்தி வருவதால் அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. அது பற்றி சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.



சமந்தா இயக்குனர் ராஜ் உடன் ஒரே வீட்டில் குடியேறுகிறாரா?
[Saturday 2025-05-17 05:00]

நடிகை சமந்தா பற்றி சமீப காலமாக பரபரப்பாக வரும் செய்தி, அவர் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவர் உடன் காதலில் இருக்கிறார் என கிசுகிசுக்கும் செய்தி தான். அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தாலும் காதலை அவர்கள் இன்னும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் காதல் பற்றிய செய்தியை அவர்கள் மறுக்கவும் இல்லை.



8 மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா அஜித்?
[Friday 2025-05-16 19:00]

நடிகர் அஜித் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கார் ரேஸில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த குட் பேட் அக்லீ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதற்கு பிறகு அஜித் எந்த படமும் அறிவிக்காமல் இருக்கிறார். இந்த வருடத்தின் இறுதியில் தான் அவர் மீண்டும் படங்கள் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



ரசிகர்கள் குறித்து சூரி ஆதங்கம்!
[Friday 2025-05-16 19:00]

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் இன்று வெளிவந்த திரைப்படம் மாமன். எமோஷ்னல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் விலங்கு என்ற சூப்பர்ஹிட் வெப் சீரிஸ் இயக்கியிருந்தார்.



"என்னுடைது காதல் திருமணமாக இருக்கும்" - முதன்முறையாக கூறிய விஷால்!
[Friday 2025-05-16 19:00]

நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷயம் அனைவருக்குமே பதற்றத்தை ஏற்படுத்தியது, இப்போது நலமாக உள்ளார். அண்மையில் நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டடம், திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.



திடீரென விஜய் டிவி அறிவித்த மாற்றம்!
[Friday 2025-05-16 06:00]

சன் டிவி சீரியல்களின் ராஜா என்றால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் ராணி. விஜய் டிவி மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனதே ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தான் என்று சொன்னால் யாரும் மறுக்க மாட்டார்கள். விளையாட்டு, பாடல், நடனம் என எல்லா வகையான ஷோக்களும் இடம்பெற்றன.



"அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை" - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு!
[Friday 2025-05-16 06:00]

கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத நடிகர். படத்தில் நடிக்கும் போதே தன்னுடைய நாட்டுப்பற்று, எல்லோருக்கும் மனதார உதவி செய்வது போன்ற விஷயங்களை அதிகம் காட்டினார். இவரது மகனான சண்முக பாண்டியன் அவரது அப்பாவை போல சினிமாவில் களமிறங்கியுள்ளார். அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் படைத்தலைவன். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 15, அதாவது இன்று சென்னையில் நடந்தது.



"பல வருடங்களுக்கு பின் எனக்கு அது கிடைத்துள்ளது" - நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி!
[Thursday 2025-05-15 18:00]

திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்திலும் நடித்திருந்தார்.



கெனிஷாவுடன் உறவா? - நடிகர் ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை!
[Thursday 2025-05-15 18:00]

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கெனிஷா என்பவருடன் ரவி மோகன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசு எழுந்தது. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் ரவி மோகன் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இதன்பின் இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என பலரும் உறுதியாகவும் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பின், தனது மகன்கள் போட்டோவை பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் அவர் கடும் கோபத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தது.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா