Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்: - சரோஜாதேவி கோரிக்கை
[Thursday 2015-12-31 12:00]

தமிழ் பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர், சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர். இப்போது அவர் பெங்களூரில் வசித்து வருகிறார். சரோஜாதேவி பெங்களூரில் இருந்து போன் மூலம் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...

வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்து இருக்கிறேன். சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில், எம்.ஜி.ஆர். வீடு பாதிக்கப்பட்டிருப்பதையும், அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் அறிந்து மிகுந்த வேதனைப்பட்டேன். அழுகையாக வந்தது. மனிதராக பிறந்து தெய்வமாக போனவர், அவர்.

அவருடைய வீட்டில் உட்கார்ந்து நான் சாப்பிட்டு இருக்கிறேன். எம்.ஜி.ஆர். வீட்டை அவருடைய ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம். அந்தக்காலத்தில் பிரபல கதாநாயகிகளாக இருந்த நாங்கள் ஆயிரக்கணக்கில்தான் சம்பளம் வாங்கினோம்.

இப்போது உள்ள கதாநாயகிகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். சீக்கிரமே சம்பாதித்து சொந்த ஊருக்கு ஓடி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். சிம்பு விவகாரத்தை பத்திரிகைகளிலும், டி.வி.களிலும் பார்த்தேன். அவருடைய தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டு விடலாம். நாமும் மன்னித்து விடலாம். அவருடைய அம்மாவும், அப்பாவும் உருகுவதைப் பார்த்தால், பாவமாக இருக்கிறது என்று சரோஜாதேவி கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா