Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்? - உண்மையை உடைத்த ரஜினி!
[Wednesday 2024-07-17 18:00]

கடந்த சில நாட்களாக இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருந்தது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த் அம்பானியின் திருமண நிகழ்வு. ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்த அவர்; வீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துக்கொண்டார். குறித்த திருமணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகள் சவுந்தர்யா, அவரது கணவர் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

படத்தை தாண்டி எந்த ஒரு திருமணத்திலும் நடனம் ஆடாத நடிகர் ரஜினிகாந்த் அம்பானி மகன் ஆனந்த்-ராதிகா திருமணத்தில் சந்தோஷத்தின் மிகுதியால் நடனம் ஆடியுள்ளார்.

குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வந்ததுடன் ,பலரும் ரஜினிகாந்தின் இந்த உற்சாக நடனத்தை பாராட்டினாலும் இன்னும் சிலர் ரஜினிகாந்த் இப்படி ஒரு திருமண நிகழ்வில் ஆட வேண்டுமா என்கிற ரீதியில் விமர்சனமும் செய்திருந்தனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குறித்த நடனம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, இந்த திருமணம் ஆனந்த் அம்பானி வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம், அதனால் இதை மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்தேன். மேலும் இது எனக்கு ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா