Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை மகாலக்ஷ்மி கணவர் ரவீந்தர் வீட்டில் ரெய்டு!
[Wednesday 2024-07-31 06:00]

சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் கணவர் ரவீந்தர் பிரபல தயாரிப்பாளர் மற்றும் பிக் பாஸ் ஷோ விமர்சகர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அவர் சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார். சில மாதங்கள் சிறையில் இருந்து அதன் பிறகு அவர் ஜாமினில் வெளியில் வந்தார்.

திடக்கழிவில் இருந்து பவர் எடுக்கும் பிஸ்னஸ் என கூறி 16 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு பதிவு ஆன நிலையில் தான் ரவீந்தர் கைது ஆனார்.

இந்நிலையில் சென்னை அசோக் நகர் பகுதியில் இருக்கும் ரவீந்தர் - மஹாலக்ஷ்மியின் வீட்டுக்கு இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வந்திருக்கின்றனர்.

வீட்டில் இருந்து அவர்கள் ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும், அது பற்றிய தகவல் அமலாக்கத்துறை விரைவில் வெளியிடும் என்றும் தெரிகிறது.

ஏற்கனவே பதிவாகி இருக்கும் மோசடி வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்கிற புகாரின் அடிப்படையில் தான் இந்த ரெய்டு நடந்து இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா