Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
8 ஆண்டுகளாக உருவான மின்மினி திரைப்படத்தின் முதல் விமர்சனம்!
[Tuesday 2024-08-06 18:00]

பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் ஹலிதா ஷமீம். இவருடைய இயக்கத்தில் உருவாகி அடுத்து வெளிவரவிருக்கும் படம் தான் மின்மினி. இப்படத்தை 8 ஆண்டுகளாக காத்திருந்து இயக்கி வருகிறார் ஹலிதா ஷமீம். நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியுள்ளார்.

இதுவரை இந்திய சினிமாவில் இதுபோன்ற விஷயங்களை முயற்சி செய்யவில்லை. இதுவே முதல் முறையாகும் என சொல்லப்படுகிறது.

இப்படத்தில் மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் மின்மினி படத்தின் சிறப்பு காட்சி தற்போது திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

"தரமான புதுமையான ஃபீல் குட் மூவி. இயக்குனர் ஹலிதா ஷமீம் திரைக்கதை மேஜிக் போல் உள்ளது. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பர். கதிஜா ரஹ்மான் இசை அருமை. படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான். அவருடைய விஷுவல்ஸ் வேற லெவல்" என படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சத்தில் மின்மினி படத்தை புகழ்ந்து பேசியுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா