Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தங்கலான் படத்தின் தமிழக உரிமை இத்தனை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா?
[Tuesday 2024-08-13 18:00]

சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர் Daniel Caltagirone என்பவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், தங்கலான் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என சொல்லப்படுகிறது.

இதற்குமுன் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா திரைப்படம் ரூ. 17 கோடிக்கு விற்பனை ஆன நிலையில், தங்கலான் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே இவ்வளவு பெரிய தொகைக்கு விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா