Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாஸாக தயாராகி வரும் ரஜினியின் வேட்டையன் பட கதை என்ன தெரியுமா?
[Wednesday 2024-08-21 17:00]

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் வேட்டையன். ரஜினி-அமிதாப் பச்சன் கூட்டணியில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள இந்த படத்தில் ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர். டிஜே. ஞானவேல் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கும் படம் என்பதால் வேட்டையன் படம் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது என்றே கூறலாம். வரும் அக்டோபர் 10ம் தேதி படம் ரிலீஸ் என கூறப்பட்டுள்ளது.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்க வேட்டையன் படத்தின் கதை இதுதான் என ஒரு கதை வலம் வருகிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக பலரை சுடும் ரஜினி இதனை பெருமையாகவும் நினைக்கிறார்.

பணியில் இருந்து ஓய்வுக்கு பிறகு அவர் சுட்டுக்கொன்ற குடும்பம் பற்றி அறிய நேரிடுகிறது, அந்த நிகழ்வு அவர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நான் சுட்டுக்கொன்ற எல்லோர் வீட்டுக்கும் சென்று கொலைக்கு முன், பின் நடந்த விஷயங்களை கேட்டு அதிர்கிறார்.

இதனால் என்கவுன்டர் எனப்படும் அதிகாரப்பூர்வ கொலைகளுக்கு எதிராக பேச தொடங்குகிறார். இதுவே வேட்டையன் படத்தின் கதை என்று தகவல் உலா வருகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா