Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தனுஷ் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்!
[Monday 2024-08-26 17:00]

நடிகை பிரியங்கா மோகன் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் தான் பிரியங்கா மோகன். இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படதில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார்.

திரையுலகிற்கு வந்து குறுகிய காலத்திற்குள்ளேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் "பிரியங்கா மோகனின் கேமியோவிற்கு நன்றி" எனவும் தெரிவித்துள்ளனர். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா