Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வேட்டையனுக்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கும் பிரம்மாண்ட படம்!
[Tuesday 2024-09-10 06:00]

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்த வேட்டையன் அக்டோபர் 10 ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டைத் தொடர்ந்து, புகழ்பெற்ற இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மீண்டும் ஜங்கிலி பிக்சர்ஸின் Dosa King-குடன் மற்றொரு சிறந்த சினிமா படத்தை வழங்க உள்ளார். Badhaai ho மற்றும் Raazi போன்ற படங்களை தயாரித்த ஜங்கிலி பிக்சர்ஸ் இந்த காவியக் கதையை பெரிய திரைக்கு கொண்டு வர ஞானவேல் உடன் இணைந்துள்ளது. டி.ஜே.ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் ஆகியோரால் எழுதப்பட்ட, இந்த பான்-இந்தியன் திரைப்படம் ஜீவஜோதி மற்றும் பி. ராஜகோபாலின் மோதலால் ஈர்க்கப்பட்டு, லட்சியம், அதிகாரம் மற்றும் நீதிக்கான போருக்கு களம் அமைக்கிறது. ஜீவஜோதி சாந்தகுமாரின் (Life Rights) உரிமையை ஜங்கிலி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

P.Rajagopal vs State of Tamilnadu 18 ஆண்டுகால கடுமையான சட்டப் போருக்குப் பிறகு, நீதி வழங்கப்பட்ட நிலையில் , முறையாக உரிமைகளை பெற்ற பிறகு, மிக பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாக்கப்படவிருக்கிறது !

தனது கருத்துச்செறிவுமிக்க கதைக்களங்கள் மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்களுக்காக கொண்டாடப்பட்ட ஞானவேல், உலகளவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் அடிப்படையில் இந்த படத்தை உருவாக்கவுள்ளார்!

அவரது வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி ஆகிய நிகழ்வுகளை திறம்பட திரையில் வடிக்க உள்ளார்கள்!

இப்படத்தின் இணை எழுத்தாளரான ஹேமந்த் ராவ், கன்னடத்தில், Godhi Banna Saadharna Manushya, Kavaludaari, Saptta Saagaradaache Ello-Side A/ Side B, போன்ற மிக பெரிய வெற்றி படங்களை எழுதி இயக்கியவர். அவர் இந்தி சினிமாவில் பரவலாகப் பாராட்டப்பட்ட "Andhadhun" என்ற படத்தின் இணை-எழுத்தாளர்.

ஞானவேல் எழுதி இயக்கிய Jai Bhim மிக பெரிய தாக்கத்தை உருவாக்கிய திரைப்படம்! , அத்துடன் "பயணம்" மற்றும் "கூடத்தில் ஒருத்தன்" போன்ற குறிப்பிடத்தக்க படங்களும் அவரது கைவண்ணத்தில் உருவானவை!

ஒரு பத்திரிகையாளராக பல வருட அனுபவத்தில் வேரூன்றிய ஞானவேலின் கூர்மையான முன்னோக்கு, இந்த சிக்கலான மற்றும் உணர்ச்சிகரமான கதையை வழிநடத்துவதற்கு அவரை முழுமையாக நிலைநிறுத்துகிறது.

தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய டி.ஜே.ஞானவேல், “பத்திரிக்கையாளராக இருந்த காலத்திலிருந்தே ஜீவஜோதியின் கதையைப் பின்பற்றி வருகிறேன். பத்திரிக்கைகள் பல விவரங்களை பரபரப்பாக்கிய போதும், கதையின் பெரும்பகுதி சொல்லப்படவில்லை. 'Dosa King' கதையின் குற்றம் மற்றும் திரில்லர் அம்சங்களை மையமாகக் கொண்டு, அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அம்பலப்படுத்தும் கடினமான கதை.

நன்கு ஆராய்ந்து, வழக்கில் சொல்லப்படாத கருத்துக்களை பிணைத்து, புதியதொரு கண்ணோட்டத்துடன் ஆழமான கதையைச் சொல்ல விரும்புகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நேரில் பார்த்த கதையைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் படம் எனக்கு கிடைத்த வாய்ப்பாகும், மேலும் சொல்ல வேண்டிய முக்கியமான கதைகளை ஆதரிக்கும் ஸ்டுடியோவான ஜங்கிலி பிக்சர்ஸ் உடன் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜங்கிலி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) , Amritha Pandey, மேலும் கூறுகையில், “தோசா கிங், ஒரு பரபரப்பான கதையாகும், இது, நிஜத்தின் பிரதிபலிப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த ஒரு சுவையான கலவையாக உருவாக்கப்படவுள்ளது !. இந்த திரைப்படத்தை திரையில் வடிக்க, ஞானவேலுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஹேமந்த் மற்றும் ஞானவேல் ஆகியோர், விரிவான ஆராய்ச்சியின் மூலம், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட உருவாக்கி, திருப்பங்கள் மற்றும் நுணுக்கங்கள் நிறைந்த ஒரு ஸ்கிரிப்டை வடிவமைத்துள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளோம். வெகு விரைவில் நடிக நடிகையர் தேர்வு மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் கூறி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா