Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
"என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது" - ஆர்த்தி ரவியின் பகீர் பதிவு!
[Wednesday 2024-09-11 18:00]

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தற்போது விவாகரத்து விடயம் குறித்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர். இவரது முதல் திரைப்படமே மக்கள் மத்தியல் நல்ல வரவேற்கை கொடுத்தது. அதைனை தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இவரது நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியானது, ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

கடந்த 2009 ஆம் ஆண்டு ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்ககளுக்கு தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை சட்டபூர்வமாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்திருக்கிறார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன் என திடுக்கிடும் பதிவென்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா