Untitled Document
October 26, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கின்னஸில் இடம்பிடித்த உலகின் விலை உயர்ந்த உள்ளாடை!
[Saturday 2024-09-14 18:00]

உலகின் விலை உயர்ந்த உள்ளாடை என விக்டோரியாவின் சீக்ரெட் ஃபேண்டஸி ப்ரா கின்னஸில் இடம்பிடித்துள்ளது. உள்ளாடையின் மதிப்பு $15 மில்லியன் . இதில், 1,300 காரட் வைரம் மற்றும் மாணிக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதுவரை தயாரிக்கப்பட்ட மிக விலையுயர்ந்த உள்ளாடைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இந்த ப்ரா இடம்பிடித்தது.

வைர , மாணிக்க, ரத்தினக் கற்களால் உருவாக்கப்பட்ட உள்ளாடை இது ஃபேஷனில் ஆடம்பரத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியது என்றும் கூறலாம். விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைகள் நிறுவனம் அதன் கவர்ச்சியான பேஷன் ஷோக்களுக்கு நீண்ட காலமாக அறியப்படுகிறது.

எண்ணற்ற சூப்பர் மாடல்களுக்கு பிரத்யேகமான உள்ளாடைகளை விக்டோரியா சீக்ரெட் நிறுவனம் வழங்கி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஃபேன்டஸி ப்ரா. அதிக விலை மதிப்புள்ள வைரக்கற்களை இணைத்து இந்த உள்ளாடையை விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

1990 களில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உள்ளாடைகள் சிக்கலான கைவினைத்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் பிற ரத்தினக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஃபேன்டஸி ப்ராவும் அதிக விலை மதிப்பு கொண்டது. முதல் பேண்டஸி ப்ரா 1996 இல் அறிமுகமானது. இது தொடர்பான விளம்பரங்களில் பிரபல மாடலும் ஜெர்மன் நடிகையுமான கிளாடியா ஷிஃபர் அணிந்திருந்தார்.

$1 மில்லியன் மதிப்புள்ள இந்த உள்ளாடை 100 காரட் வைரங்களைக் கொண்டிருந்தது. இதுவரை உருவாக்கப்பட்ட மிக விலையுயர்ந்த பேண்டஸி ப்ரா ரெட் ஹாட் பேண்டஸி ப்ரா ஆகும்.

இதனை 2000 ஆம் ஆண்டில் பிரபல மாடல் கிசெல் பாண்ட்சென் அணிந்திருந்தார். விக்டோரியாவின் சீக்ரெட் ஃபேண்டஸி ப்ரா என்பது கைவினைத்திறன், கவர்ச்சி மற்றும் ஆடம்பரத்தின் மூச்சடைக்கக்கூடிய தலைசிறந்த படைப்பாக உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா