Untitled Document
November 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்! Top News Top News
[Saturday 2022-08-06 20:00]

மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். "Methagu" is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence.

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து "மேதகு" என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்து கடந்த வருடம் (OTT) தளத்தில் (25.05.2021) வெளியாகியாகியது.

அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு" திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும் நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்திருந்தனர். இவ்வேளையில் அத்திரைக்காவியத்தின் பாகம் 2 எதிர்வரும் 19ம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகின்றது.

உங்களுக்கு தெரிந்தவர்களுடன், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு 2 போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.

The movie METHAGU, which is set to be the starting point of Theera's history, was released on June 25 last year. Methagu-2 will be released on wide screens, worldwide from August 19th onwards. Congratulations and love to the crew. You can hide the story but You can't hide the history.

எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21ஆம் திகதிகளில் ஒஸ்ரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இணையதளம் ஊடாக பதிவு செய்யமுடியாதவர்கள், செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு ரிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

மெல்பேர்ன் காட்சிகள்

Dandenong - VIC

20 Aug 2022 Saturday 6.45pm

Epping - VIC

21 Aug 2022 Sunday 6pm

Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107

Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்

Tickets: Adult $20, Kid (under 12) $10

எனைய ஒஸ்ரேலிய நகரங்களின் மேதகு 2 திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ளவும்

https://www.tccau.com/2022/08/Methagu-2.html

சிட்னி

Auburn Reading Cinemas - NSW

20 Aug 2022 Saturday 6.30pm, 21 Aug 2022 Sunday 4pm, 21 Aug 2022 Sunday 6pm

Contact: 0401 842 780, 0424 757 814

பிறிஸ்பேன்

Jindalee Reading Cinemas - QLD

19 Aug 2022 Friday 9pm, 20 Aug 2022 Saturday 6.30pm, 21 Aug 2022 Sunday 6pm

Contact: 0469 888 511 , 0469 731 117

மெல்பேர்ன்

Dandenong - VIC

20 Aug 2022 Saturday 6.45pm

Epping - VIC

21 Aug 2022 Sunday 6pm

Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107

Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்

பேர்த்

Belmont - WA

20 Aug 2022 Saturday 6.30pm, 21 Aug 2022 Sunday 6pm

Contact: 0469 823 269, 0470 169 692

அடிலெயிட்

Angle Park - SA (The Park Theatre)

20 Aug 2022 Saturday 7pm

Contact: 0449 299 924, 0469 198 100

Tickets: Adult $20, Kid (under 12) $10

குறிப்பு: கான்பரா மற்றும் தாஸ்மானியா திரையிடல் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்

ஆகஸ்ட்-19 முதல் உலகம் முழுவதும் வெள்ளித்திரைகளில் மீண்டும் வருகிறார் மேதகு.

METHAGU part-2 From August 19th onwards Worldwide in Theatres (Except India), Will be released in OTT (in India)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும், கேவலப்படுத்தும் திரைப்படங்கள், தொடர்களுக்கு எமது எதிர்ப்பைக் காட்டும் சக்தியில், தமிழர்களின் வரலாற்றை கலை வடிவில் கண்முன்னே படம் பிடித்துக் காட்டும் 'மேதகு' போன்ற படைப்புக்களுக்கு எமது முழுமையான ஆதரவினை வழங்குவோம். அப்படைப்புக்களை கொண்டாடுவோம். இவ்வாறன பல்வேறு தரமான படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது, நாம் கொடுக்கும் பெரும் ஆதரவில் தங்கியுள்ளது. இந்த மேதகு படைப்புக்களை வெளிக்கொண்டுவந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

வரலாற்று தொகுப்பு - மேதகு திரைக்களம்

உலகத்தமிழர்களின் பேராதரவோடு உருவாக்கப்பட்டு கடந்த வருடம் வெளியானது நமது மேதகு பாகம்-1 திரைக்காவியம். மேதகு-I ஐ தொடர்ந்து, மேதகு தமிழினத் தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தாங்கிவரும் பெரும் படைப்பான மேதகு-II திரைக்காவியத்தை மேதகு திரைக்களம் பெருமையுடன் வழங்கும், இது உலகத் தமிழ் மக்களின் படைப்பு. இதன் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர் - இரா.கோ.யோகேந்திரன்,

ஒளிப்பதிவு - வினோத் ராஜேந்திரன், இசையமைப்பாளர் - பிரவின் குமார், படத்தொகுப்பு - ஆதித்யா முத்தமிழ்மாறன் (KUVIYAM STUDIOZ), பாடல் வரிகள் - கவிஞர். திருக்குமரன், ஏறன் சிவா, ஒலிப்பதிவுக் கூடம் - யாழிசைப் பேழையகம் (YAZH ISAI RECORDS, THANJAVUR), இயக்குநர் குழு - கபில், பிரபாகரன், முனீஸ்வரன், சந்தோசு, கவிமொழி, வள்ளி விஸ்வநாத், வாசு நக்கீரன், பாரூக் அப்துல்லா, முதன்மை தயாரிப்பு நிர்வாகிகள் - திருக்குமரன், தஞ்சை குகன் குமார், சுமேஷ் குமார்

  
  
   Bookmark and Share Seithy.com



இந்திய வீட்டு உதவி கிராமம் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டது! Top News
[Friday 2024-11-08 06:00]

மொனராகலை மாவட்டத்தின் மெதகம பிரதேச செயலகப் பிரிவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பீ.எம்.பீ. அதபத்து தலைமையில் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.



மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்! Top News
[Saturday 2024-11-02 08:00]

எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. ஆலங்குளம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



Voice of Need அமைப்பின் தலைமை அலுவலகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது! Top News
[Tuesday 2024-10-15 21:00]

நாடளாவிய ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் பலதரபட்ட தேவைகளை பூர்த்தி செய்து வந்த 'Voice of Need' அமைப்பின்‌ தலைமை அலுவலகம்‌ கொழும்பில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு கடந்த காலங்களில் தேவையுடையோருக்கான இலவச 90 குழாய் நீர் மற்றும் ஆழ் துளை கிணறு திட்டங்களும் . விதவைகளுக்கான கோழி பண்ணை திட்டங்களும் வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் உலர் உணவு திட்டங்களும் போன்ற பல நூறு சேவைகளை இலவசமாக செய்து வந்துள்ளது.



'ஒன்ராறியோ லைன்' கட்டுமானம் குறித்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது! Top News
[Friday 2024-10-11 17:00]

70 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒன்ராறியோ லைன் போக்குவரத்து விரிவாக்கத் திட்ட கட்டுமானப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. 15 நிறுத்தங்களைக் கொண்ட இத்தடவழிப் பாதை, ரொறன்ரோ பெரும்பாகப் பகுதிகளை இணைத்துப் பயண நேரத்தைக் குறைக்கும். இதேவேளை, ஸ்காபரோ நிலக்கீழ் தொடரிவழிப் பாதை நீட்டிப்பு வேலைகளும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதும் நாம் முன்பை விட வேகமாக கட்டுமானங்களை மேற்கொள்கிறோம் என்பதையே காட்டுகிறது.



புத்தளத்தில் மிக விமரிசையாக இடம்பெற்ற கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா வைபவம்! Top News
[Tuesday 2024-10-08 18:00]

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதியுள்ள இரு நூல்களின் வெளியீட்டுவிழா புத்தளம் நகரில் சனிக்கிழமை இரவு (05-10-2024) மிக விமரிசையாக இடம்பெற்றது. புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி ஷாமில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமை வகித்தார். புத்தளம் CREATE இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் "ரகசியங்கள்" , "மைத்துளிகள் மரணிப்பதில்லை" ஆகிய இரு நூல்களே வெளியிட்டு வைக்கப்பட்டன. நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமத் கலந்து கொண்டார்.



கனேடிய தமிழர் பேரவை 2024 ஆம் ஆண்டிற்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தின நிகழ்ச்சி! Top News Top News
[Thursday 2024-10-03 06:00]

கனேடிய தமிழர் பேரவை 2024 ஆம் ஆண்டிற்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்தை செப்டெம்பர் 29, 2024 அன்று, ஒன்ராறியோவின் ஜோர்ஜினாவில் உள்ள சட்டன் மாவட்ட உயர்நிலைப் பள்ளியில் ஜார்ஜினா தீவின் சிப்பேவாஸ் நடத்திய பவ் வாவ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனுசரித்திருந்தது. பாவ் வாவ், "நாவென்ட்வின்" (உறவினர்கள்) என்ற கருப்பொருளில், பாரம்பரிய நடனம், டிரம்மிங் மற்றும் கதைசொல்லல் ஆகியவை இடம்பெற்றன, இது CTC க்கு முதல் குடிகளின் கலாச்சாரத்துடன் ஈடுபடுவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை பிரதிபலிக்கும் அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்கியிருந்தது.



கனடா கந்தசாமி ஆலய நிர்வாக இயக்குனர் முத்து செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மூன்று வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிட்டார்! Top News
[Friday 2024-09-27 18:00]

முதலில் யாழ் போதனா வைத்தியசாலையின், பல காலம் வடக்கு பிராந்தியத்தில் மக்களுக்கு பெரும் சேவையாற்றுபவர்களும், பலரின் உயிர்களை காப்பாற்றியவர்களுமான இதய சிகிச்சை நிபுணர்களான வைத்திய கலாநிதி லக்ஷ்மன் மற்றும் வைத்திய கலாநிதி குருபரன் ஆகியோரையும் அதற்கு பின் கடந்த மூன்று ஆண்டுகளாக திறம்பட இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு பல உயிர்களை மீட்டு தந்தவருமான நிபுணர் வைத்திய கலாநிதி சிவசங்கர் மற்றும் அனஸ்தீசியா நிபுணரான வைத்திய கலாநிதி ரமணன் ஆகியோரை சந்தித்து அங்குள்ள நிலைமைகளை அறிந்தார்.



பிரம்டனில் தமிழின அழிப்பு நினைவிட அடிக்கல் நாட்டல்! Top News
[Friday 2024-08-23 06:00]

ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது கனடாவில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு தமிழின அழிப்பு நடைபெற்றது என்பதற்கான சர்வதேச அங்கீகாரம், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் போன்றவற்றின் ஒரு படிநிலையாக அமைகிறது. தமிழர்கள் மீதான இன அழிப்பை மறுதலிப்பவர்கள் இந்நிகழ்வைச் சீர்குலைக்க முனைந்த போதிலும், பிராம்ப்டன் நகரமுதல்வர் பட்றிக் பிரவுன், பிரம்ரன் தமிழ் ஒன்றியம், கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் பேராதரவுடன் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.



தமிழின அழிப்பு நினைவகம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு - ஆகஸ்ட் 14, 2024! Top News
[Tuesday 2024-08-20 21:00]

ஆகஸ்ட் 14, 2024ல் கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் அமைந்திருக்கும் சிங்குசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வானது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பிற்கான அனைத்துலக அங்கீகாரம், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி ஆகியவற்றை அடைவதற்கான தமிழ் மக்களின் நீண்ட பயணத்தில், இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.



முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை சமூகங்கள் பயன்பெறும் வகையில் ஒன்ராறியோ விரிவாக்குகிறது! Top News
[Friday 2024-07-19 06:00]

ஒன்ராறியோ அரசாங்கம், உடல்நலம், உடற்பயிற்சி, சமூக ஒருங்கிணைப்பு போன்ற அமைப்புகளை மேம்படுத்தி சேவைகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALCs) விரிவுபடுத்துகிறது. இது தொடர்பாக அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கும்போது, "முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALC) விரிவுபடுத்துவதன் மூலம், பெருமளவு முதியவர்கள், சுறுசுறுப்பானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கையை வாழத் தேவையான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளோம்" என்றார். மாநிலம் முழுவதும் முந்நூறுக்கும் அதிகமான முதியோர் வாழும் செயற்றிறன் மையங்கள் (SALC) வெற்றிகரமான நிலையில் இயங்கிவரும் வேளையில், இம்முக்கிய திட்டங்களை இணைந்து வழங்க உள்ளூர் நிறுவனங்களையும் அரசாங்கம் அழைக்கிறது.



மல்லாவி வைத்தியசாலைக்கு செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கிவைப்பு! Top News
[Monday 2024-06-10 21:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் நேற்று ஞாயிற்று கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வானது மல்லாவி ஆதார வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 3,367,000 செலவில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.



கனடாவில் அறிவக மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்! Top News
[Monday 2024-06-03 21:00]

நடப்புக் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வு எட்டுத் தேர்வு மையங்களில் இனிதே நடைபெற்று முடிந்தது. கனடாவில் உள்ள 200 இற்கும் மேற்ப்பட்ட அறிவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இத் தேர்விற்கு முகம் கொடுத்தனர். தேர்வுப் பணிகளில் ஏறக்குறைய முன்னூறு ஆசிரியர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் தேசம் தொடர்ச்சியான இராணுவ அடக்குமுறைக்குள்" கலம் மெக்ரே அவர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தின செய்தி! Top News
[Thursday 2024-05-30 06:00]

15 வருடங்கள் ஆகியும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, குற்றங்கள் இன்று வரை தொடர்கின்றது. இதனால் உயிர் பிழைத்தோருக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் மிகவும் பெரும் மன உளைச்சலை கொடுக்கின்றது. இவர்களின் நினைவு கூரல் உரிமை கூட மறுக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் தாயகம், அரச பயங்கரவாத பாதுகாப்பு படையினரால் கொடூர அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டறியப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.



ஈரான் அதிபருக்கான இரங்கல் பதிவு! Top News
[Friday 2024-05-24 21:00]

சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு, வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று, தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.



பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு Top News
[Thursday 2024-05-23 21:00]

சந்ததிகள் கடந்தும் தாயகம் இழந்தும் நீதிக்காக போராடும் தமிழ் இளையோர்கள் - பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தில் தமிழர்களின் வலியை உலகுக்கு உணர்த்திய தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு.


Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா