Untitled Document
April 2, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
மாவீரர்களின் கனவுகளை சுமந்து கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு! Top News
[Friday 2023-05-26 06:00]

இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியலில் ஈழத்தமிழர்கள் பங்காளிகளாக மாறவேண்டும்-பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான 9வது அரசவை அமர்வு மே மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் அமெரிக்கா நியுயோக் நகரில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நடைபெற்று அதனை அடுத்து வருகின்ற வாரஇறுதி நாட்களிலும் அதே போல தமிழீழ மக்களின் விடிவிற்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கியபுனிதர்களை நினைவுகூறுகின்ற நாளினை அடுத்து வருகின்ற வார இறுதி நாட்களிலும் அனைத்து நாடுகளிலும்உள்ள அரசவை உறுப்பினர்கள் ஒன்றாக அரசவையை கூட்டி உறுதியேற்புடன் தாயகம் நோக்கிய பணிகளைமுன்னெடுப்பது வழமை,

அதற்கமைய வலிசுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை மனதிலிருத்தி கூடிய அரசவையின் தொடக்கநாள்நிகழ்வுகள் நியூயோர்க் சட்டத்தரணிகள் சங்க மண்டபத்தில் (New York City Bar Association)இடம்பெற்றிருந்தது.

இதில் இந்து சமுத்திரத்தில் வளர்ந்துவரும் சீனாவின் ஆதிக்கம், இறைமையும், சுதந்திரமும் கொண்டதமிழீழத்தை அமைப்பதற்கான உலகத்தமிழர்களின் வகிபாகம் ஆகியன கருப் பொருட்களாக எடுக்கப்பட்டன. கட்டுமான இனப்படுகொலையை(Structural Genocide) தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் பேசப்பட்டன.

முதல் நாள் அமர்வில், தோழமை உணர்வுடன் பங்குபற்றிய ஆர்மேனிய முன்னாள் ஐ. நா சபைப் பிரதிநிதியும், தற்போதைய ஆர்மேனிய அமெரிக்க அமைப்பின் தலைவரான திரு. வன் கிரிகோரியன்(Van Krikorian) அவர்கள்ஆர்மேனிய மக்களின் மீதான இன அழிப்பிற்கும், முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பிற்கும் இடையே இருந்தஒத்தைத் தகமைகளைச் சுட்டிக் காட்டிப் பேசியதுடன், ஈழ மக்கள் எதிர்கொள்ளும் சிங்களத்தின்கட்டமைப்புசார் இனவழிப்பிற்கும், அஜர் பஜானில் ஆர்மேனிய மக்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்புசார்இனவழிப்பிற்கும் உள்ள ஒத்தைத் தகமைகளை சுட்டிக்காட்டிப் பேசினார்.

ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர் திரு. லோகன் கணபதி அவர்கள் பொதுவாக்கெடுப்பு ஒன்றின் மூலம்தான் ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணலாம் எனக் குறிப்பிட்டார். தாயகத்தில் இருந்து நாடாளுமன்றஉறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இணையவழி மூலம் பங்குபற்றிஉரையாற்றியதுடன், மாவை சேனாதிராஜா அவர்கள் எழுத்துமூலம் வாழ்த்துகளையும். தாயகத்தில் வேகமாகநடைபெற்றுவரும் கட்டுமான இனப்படுகொலகள் பற்றியும் சுட்டிக்காட்டி இருந்தார்கள். மேலும் தாயகத்தில்அரசியல் நடவடிக்கைகளும். புலத்தில் அரசியல் நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று பலம் உள்ளதாக அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இத்தாலியில் இருந்து “ஐரோப்பிய புதிய தலைமுறை ஒன்றியம்” ஐச் சேர்ந்த திரு.அருகன் அவர்கள் தங்களதுஅரசியல் கட்சிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெர்வித்து “நன்றிநவிலல்” பட்டயத்தை பிரதமருக்கு வழங்கினார். பிரான்ஸ்சில் இருந்து சட்டவாளர் திரு. தோமஸ் கஸ்டஜோன்(Thomas Castejon) அவர்கள் பிரான்ஸ்சில் ஈழத்தமிழர் நிலை குறித்தும், இனப் படுகொலை தொடர்பானபொறுப்புக்கூறல் குறித்தும் பேசினார். தமிழ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து திரு. அருண்குமார் அவர்கள்பரிணமித்துவரும் பல்மைய உலக ஒழுங்கில் தமிழர்களுடைய அரசியல் பெருவிருப்பிற்கு அங்கீகாரம்வழங்குவது அவசியம் எனக் குறிப்பிட்டார். தமிழக வணிக வலைபின்னல் தலைவர் சதாசிவம் காணொளிமூலம்உரையாற்றினார். மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க தலைவர் அனன் பொன்னம்பலம், தமிழ் அமெரிக்கஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு தலைவர் மீனா இழஞ்செழியன், சங்கம் அமைப்பு சுஜாந்தி, உலகத் தமிழர்அமைப்பு ரவிக்குமார் ஆகியோர் தோழமை உணர்வுடன் உரையாற்றினார்கள்.

மேலும் கனடாப் பாராளுமன்ற உறுப்பினர் சாண் சென்(Shaun Chen) கனடாவின் எதிர்க் கட்சித் தலைவர்Pierre Poilievere,மலேசியாவில் இருந்து பேராசிரியர் ராமசாமி ஆகியோர் காணொளி மூலம் வாழ்த்துத்தெரிவித்து இருந்தார்கள்.

இரண்டாம் நாள் அமர்வில் அவைத்தலைவர் பிரதமர் ஆகியோரின் உரையுடன் ஆரம்பித்து இருந்தது. பிரதமர்தனது உரையில், இலங்கைத் தீவில் 1600 கிலோ மீற்றர் நீளமான கரையோரப் பகுதிகளில் 1050 கிலோ மீற்றர்கரையோரப் பகுதிகள் ஈழத்தமிழர் தாயகப் பிரதேசத்திற்கு உரியதாக உள்ளது என்று கூறினார். மேலும், இலங்கைத் தீவில் மொத்தக் கரையோரப் பகுதிகளில் 66 வீதத்திற்கு உருத்துடையவர்களாக ஈழத் தமிழர்கள்இருந்தபோதிலும் இலங்கைத்தீவு குறித்தோ, இந்தியப் பெருங்கடல் குறித்தோ எடுக்கப்பட்ட புவிசார்அரசியல்களில் ஈழத் தமிழர்கள் பங்காளிகளாக இல்லாத நிலையை சுட்டிக்க்காட்டி இப் புவிசார் அரசியலில்எமக்குள்ள பங்கிற்காக நாம் போராட வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும் தமிழர் தாயகத்தை அடையகடலில் ஈழத்தமிழர்களினது இறைமையை தமிழீழ விடுதலைப் புலிகளின் இடர்கால தன்னாட்சி அதிகார சபை(ISGA) வரைபு குறிப்பிட்டிருந்தமையையும் சுட்டிக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மேலவையும் அரசவையும் இணைந்த உரையாடல் ஆரம்பித்தது. அதில் செனட்டர்ராஜரட்னம் அவர்கள் உலகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கான வழிவகைகள் தொடர்பாகவும், வைத்தியக் கலாநிதிஜெயலிங்கம் அவர்கள் தமிழ்த் தேசியப் பிரச்சனையும். சிறிலங்கா அரசாங்கத்தின் மீது இந்தியாவின்செல்வாக்கு(influence) குறைந்து வருவதும், தமிழர் பகுதிகளில் சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள்தொடர்பாகவும் பேசினார். செனட்டர் உஷா சிறீஸ்கந்தராசா தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்களபௌத்த மயமாக்கல் நடவடிக்கை ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் அழிக்கும்நோக்கத்துடன் இடம்பெற்று வருவதை சுட்டிக் காட்டினார்.செனட்டர்வ்சத்யா சிவராமன் இன்றைய சர்வதேசஅரசியலை ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் உள்ள போட்டியாக வெறுமனே கருதமுடியாது எனக்கூறினார். மேலவை உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தொடர்ந்து நடைபெற்ற உரையாடல்களில் தமிழ்த்தேசியப் பிரச்சனையை BRICS ( Brazil, Russia. India, China and South Africa) அமைப்பிற்கும். சீனாவிற்கும்தெரியப்படுத்துவது தொடர்பான கரூத்துக்கள் தமிழக சட்டசபையில் பொதுவாக்கெடுப்பு தொடர்பாக மீண்டும்ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுவது பற்றி பேசப்பட்டன.

அதனத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்களது 6 மாதகாலம் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பித்து அதுதொடர்பான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர் நேரத்தில் நடைபெற்ற உரையாடல்கள் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் பேணிவரும் ஜனநாயக விழுமியங்களை எடுத்துக் காட்டுவதாக அமைந்தன.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் அரசவை அமர்வு நிறைவு பெற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com



வாகைமயில் 2025 - யேர்மனி! Top News
[Friday 2025-03-21 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. டென்மாக், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும் வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



கனடாவில் வீட்டிலிருந்த யுவதிமீது துப்பாக்கி சூடு: சகோதரன் காயம்! Top News
[Monday 2025-03-10 06:00]

யா/கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தி யான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் அகால மரணம் அடைந்து விட்டார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விஜய் தணிகாசலம் மீண்டும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! Top News
[Friday 2025-03-07 06:00]

மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில், கனடியா இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது. இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது.



தமிழர் கலைகளின் வளம்தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை - ஸ்ருற்காட்! Top News
[Thursday 2025-03-06 06:00]

கலைகளின் ஊடாகத் தன்னையும்தனது சூழலையும்பதிவுசெய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியேகடத்தப்பட்டுவருவதோடு, புதியநுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமைபெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்துவருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்றுமொழி, கலைமற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துவருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிதிகழ்கின்றது. தமிழரதுகலைகளைத் தமிழினத்தின் இளையதலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும்.



35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்! Top News
[Thursday 2025-03-06 06:00]


நடிகர் கருணாஸ் தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்! Top News
[Thursday 2025-02-20 19:00]

முக்குலத்தோர் புலிப்புடைக் கட்சியின் தலைவரும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், திரைப்பட நடிகருமான திரு. சேது. கருணாஸ் அவர்களின் பிறந்தநாளை (21.02.2025) யொட்டி 20.02.2025 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடிகர் சேது. கருணாஸ் வாழ்த்துப் பெற்றார்.



அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’ மொழி பெயர்ப்பு சிறுகதை தொகுதி வெளியீடு! Top News
[Wednesday 2025-02-19 18:00]

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.



மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்! Top News
[Wednesday 2025-02-12 06:00]

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டிகள் 08.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம், விடுதலைநடனம், விடுதலைப்பாடல், வாய்ப்பாட்டு ஆகிய கலைகள் போட்டியாகளாக நடைபெற்றன.



கலைத்தமிழோடுகளமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்! Top News
[Saturday 2025-02-08 06:00]

தமிழரதுகலைவடிவங்களைத்தமிழினத்தின் இளையதலைமுறைகற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப்படைப்பாக்கத் திறனைப் பெறவும்,தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும் கலைஅரங்காற்றுகை,செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்தியமாநிலத்தின் கற்றிங்கன் நகரிலேபொதுச்சுடர் ஏற்றலோடுதொடங்கியது.



கல்விக்கு கரம் கொடுப்போம்! Top News
[Saturday 2025-02-08 06:00]

கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடாக வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 அன்று யாழ் மாவட்டம் மாதகல், தெல்லிப்பளை ஆகிய கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



உறை குளிரில் மானிடத்தை உலுக்கிய மின்னல் செந்தில்குமரனின் MGR 108 இசை நிகழ்வு! Top News
[Thursday 2025-02-06 19:00]

சமீபத்தில் ஈழத்தில் உள்ள எங்கள் சொந்தங்களின் மருத்துவ தேவைகளுக்காக நெடுங்காலமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் மின்னல் செந்தில்குமரனின் இசை நிகழ்விற்கு சென்றிருந்தேன். நூறு கோவில்களுக்கு சென்ற மகிழ்ச்சி. ஏன் என்பதனை முழுவதும் படித்த பின் நீங்களும் ஆமோதிப்பீர்கள். ஆறு மணியளவில் மெட்ரோபொலிட்டன் மண்டபம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். செந்தில் குமரனோடு வித்தியாசங்கர், சிவா, சந்தியா, மகிசா, விஜிதா, அனோஜனா, அபிராமி, சௌமிகா, கனிஷா, மானசி, ஷியானா, சியாரா என்று ஒரு பட்டாளமே தெரிவு செய்யப்பட்ட ஹிட் பாடல்களை பாடி மக்களின் கரவொலிகளைப் பெற்று கொண்டிருந்தார்கள்.



யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! Top News
[Thursday 2025-02-06 06:00]

புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும் தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறைமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம்.



சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள்! Top News
[Wednesday 2025-02-05 06:00]

தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.



"இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை" - திருமா அறிக்கை!
[Monday 2025-02-03 06:00]

நேற்று அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் ( என்.ஐ.எஃப்.டி ) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு! Top News
[Friday 2025-01-31 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ் மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் மொழிக் கற்றலை வளப்படுத்தி, கற்கையின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வு 25.01.2025 சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா