Untitled Document
November 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அகிலத்தை அதிரவைத்த FeTNA-வெற்னா மாநாட்டில் ஈழவர் குரல்கள்! Top News
[Friday 2022-07-22 06:00]

வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA , அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் இலாப நோக்கற்ற அமைப்பாகும். பதிவு செய்யப்பட்ட இச் சங்கமானது முதலில் ஐந்து தமிழ் அமைப்புகளால் 1987 இல் நிறுவப்பட்டது. அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளை அது உள்வாங்கி, அவற்றையும் அதில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆண்டுதோறும் வட அமெரிக்காவின் வெவ்வேறு மாநகரங்களில் ஜூலை மாதத்தில் பிரமாண்டமான தமிழ் மாநாடுகளை நடத்தி வருகின்றது. இதற்காக உலகமடங்கிலுமிருந்து துறைசார் ஆளுமைகள் விசேடவிருந்தினர்களாக அழைக்கப் படுகின்றார்கள். தமிழ் எழுத்தாளர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள்,எனப் பல ஆளுமைகளின் சங்கமம் இது.

இம்முறை நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த பிரமாண்ட மகாநாட்டில் கனடாவில் அமைய இருக்கும் தமிழ் இன அழிப்பு நினைவுத் தூபி காட்சிப்படுத்துவதற்கு சிறப்புச் சாவடி ஒன்று ஒதுக்கப்பட்டுச் சிறப்பளிக்கப் பட்டிருந்தது. முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட லட்சோப லட்சம் ஈழத் தமிழரை நினைவு கூர்வதற்கான நினைவுத் தூபி பிரம்ரனில் உருவாகவுள்ளது.

வெற்னா மகாநாட்டின் மணி மகுடமாக விளங்குகின்ற பன்னாட்டுத் தமிழர் கருத்தாடல் நேரம் (world Tamil hour) எனப்படுகின்ற துறைசார் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளுகின்ற அந்த மாபெரும் உரைவீச்சு நிகழ்வில் ஈழ இன அழிப்பின் காணொளி ஒளிபரப்பப் பட்டது. அதில் தொடர்ந்து நினைவுத் தூபியின் அவசியம் தொடர்பாகவும், தமிழ்க் குழுமங்கள் அதனை அமைக்கும் பணிக்கு எவ்வாறு உதவிடலாம் என்பது தொடர்பாகவும் திரு அமலீதன் அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் இலங்கை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் வேலன் சுவாமி, கத்தோலி்க்க திருச்சபையின் பேராயர் ஆண்டகை Christian Noel Emmanuel, தமிழக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சமூக நீதிப் போராளியுமான தொல். திருமாவளவன், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிதாமகன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட பலர் தங்களின் அரிய உரைகளை அங்கு நிகழ்த்தினார்கள்.

தமிழரின் உரிமைக்காக களமாடிய விடுதலைப் புலிகளை அழித்து முள்ளிவாய்க்காலில் 2009 ல் மிகப்பெரிய தமிழினவழிப்பை சிங்கள தேசம் தமிழர்கள் மேல் நிகழ்த்தியது. அதற்கான நீதிக்காகவே நாம் புலத்தில் நாடு கடந்த அரசாங்கத்தை நிறுவினோம். தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் மட்டுமே என்று மிக உணர்வோடு பேசினார் திரு உருத்திர குமாரன்.

தமிழ்இனவழிப்பிற்குப் பின் சிங்களப் பெளத்தப் பேரினவாத அரசு, தன் பெளத்தமதச் சின்னங்களை தமிழர் தேசத்தில் நிறுவி கண்ணுக்குத் தெரியா இன வழிப்பை தினமும் நடாத்திய வண்ணமேயுள்ளது என்றார் கிழக்கு மாகாண பேராயர் வணக்கத்திற்குரிய ஆண்டகை Christian Noel Emmanuel. நல்லூர் சிவ ஆதீனத் தலைவரும், தமிழின உணர்வாளரும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழின எழுச்சிப் பேரணியின் மூலவரகளில் முதன்மையானவருமான தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்களின் உரை வழமைபோல வே வீரம் செறிந்த உரை. முள்ளிவாய்க்காலில் அனாதரவாக கொல்லப்பட்ட 11/2 இலட்சம் அப்பாவித் தமிழர்களுக்குமான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயப் போவதில்லை என்று உணர்வோடு பேசினார்.

கிளிநொச்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தனதுரையில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த உலகில் மிக கொடூரமாக படுகொலை செய்யப் பட்ட இனம் நாங்கள் . இந்த அவலத்திலிருந்து நிமிர்நது நம் தனித்துவ அடையாளங்களோடு நடைபோட வேண்டிய காலம் இது என்று உணர்வோடு உரையாற்றினார்.

அவற்றின் காணொளிகள் இத்தோடு இணைக்கப் பட்டுள்ளன.

More Information:

https://tamilgenocidememorial.org/

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா