Untitled Document
April 2, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் என்னப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்ட வாகைமயில் 2023! Top News
[Tuesday 2023-03-28 21:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் எனும் நடனப்போட்டியினை தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி, நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. கொரோனா விசக்கிருமியின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டுவருடங்கள் இப்போட்டி நடைபெறாதிருந்தது. இம்முறை 25.3.2023 சனிக்கிழமை பத்து ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் யேர்மனியில் தோகைவிரித்தாடியது.

யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம்கண்டனர். இவர்களின் அற்புதமான அபிநயங்களும், பாவனைகளும் மண்டபம் நிறைந்திருந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரான்சு,டென்மார்க், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்திருந்த அனுபவம் வாய்ந்த நடுவர்களால் நடுவம் செய்யப்பட்டு போட்டியாளர்களுக்கு மதிப்பளிப்புகளும், வாகை விருதுகளும் வழங்கப்பட்டது.

அதிகளவான கலைஞர்கள் வாகைமயில் நடனப்போட்டிகளில் கலந்து கொண்டார்கள் மண்டபம் நிறைந்த மக்களுடன் வாகைமயில் நிறைவுப்போட்டிகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது.

சிறப்பு விருந்தினர்களை மண்டபத்திற்கு அழைத்து வந்ததுடன் மங்கல விளக்கேற்றல் நடைபெற்றது. மங்கல விளக்கினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு.சிறிரவீந்திரநாதன் அவர்களும், வீரவேங்கை கேதீஸ் பாலச்சந்திரன், வீரவேங்கை பாலகிருஸ்ணன் சந்திரசேகர் ஆகியோரின் சகோதரி திருமதி தயாளினி ஜெய்சங்கர் அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநில பொறுப்பாளர்கள் திரு சின்னையா நாகேஸ்வரன், திரு சிறிகந்தவேல் அவர்களும், தமிழர் ஒருங்கிணனப்புக்குழுவின் வடமாநில பொறுப்பாளர்களில் ஒருவரான சதாசிவம் திருச்செல்வம் அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற் துறைப்பொறுப்பாளர் திரு அகிலன் வரதராசா அவர்களும், தமிழ்கல்விக்கழக மாநிலச் செயற்பாட்டாளர்கள் திருமதி சுபத்திரா யோகேந்திரன், திரு செல்லர் தெய்வேந்திரம் அவர்களும், தமிழ்ப்பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் செல்வி தமிழினி பத்மநாதன், திருமதி கிருபாரதி சிவராம் அவர்களும், தமிழ்க்கல்விக்கழகத்தின் முன்னாள் தேர்வுப்பொறுப்பாளர் திருமதி தெய்வேந்திரம் அவர்களும் மங்கல விளக்கினை ஏற்றிவைத்தார்கள்.

வரவேற்பு நடனத்துடன் வாகைமயில் நடனப்போட்டிகள் ஆரம்பமானது.

வாகைமயில் நிறைவுப் போட்டியின் வாகைவிருது பெற்ற கலைஞர்கள்.

தனிநடனம்.

ஆரம்பப்பரிவு

அச்சுதா கதிர்காமநாதன்.

நடனஆசிரியை அபிரா தயாபரன் அவர்களின் மாணவி.

கீழ்ப்பிரிவு

ஆராதனா கிருஸ்ணமேனன்.

நடன ஆசிரியர் நிமலன் சத்தியகுமாரின் மாணவி.

மத்தியபிரிவு

ஆரியா பாஸ்கரன்.

நடன ஆசிரியை. திருமதி ரிசாந்தினி சஞ்சீவன் அவர்களின் மாணவி.

மேற்பிரிவு

சுஜானி குமரேஸ்.

நடனஆசிரியை திருமதி ரெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவி.

அதிமேற்பிரிவு

அபிரா ரவீந்திரன்.

நடன ஆசிரியை திருமதி யனுசா பிரதீப் அவர்களின் மாணவி.

ஆற்றுகைத்திறன் முடித்த மாணவி

மேனுகா ஈஸ்வரலிங்கம்.

நடனஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவி.

குழுநடனம்.

ஆரம்பப்பிரிவு

கெற்றியா பெனார்ண்டோ.

நடனஆசிரியை லாவண்யா நிரோசன் அவர்களின் மாணவி.

கீழ்ப்பிரிவு

கியாரா பெனான்டோ

நடனஆசிரியை லாவண்யா நிரோசன் அவர்களின் மாணவி.

மத்தியபிரிவு

ஆரபி நாகராஜா

நடனஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவி.

மேற்பிரிவு

மதுசா ரஞ்சித்.

நடன ஆசிரியை திருமதி ரெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவி.

அதிமேற்பிரிவு

திவ்யா ரவிச்சந்திரன்.

நடனஆசிரியை திருமதி யனுசா பிரதீப் அவர்களின் மாணவி.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா